நிஜெல்லா சாடிவா என்பது கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் வளரும் ஊதா அல்லது வெள்ளை நிற பூக்கள் கொண்ட ஒரு சிறிய பூச்செடியாகும். அவை சிறிய கறுப்பு விதைகளைக் கொண்ட பழங்களை உற்பத்தி செய்கின்றது. இந்த கறுப்பு விதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிங் டுட்டின் கல்லறையில்கூட இந்த கருஞ்சீரகத்தைக் கண்டுபிடித்தனர். இவை குணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வரலாற்றில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கறுப்பு விதை எண்ணெயில் ஒக்ஸிஜனேற் பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை உடலுக்குள் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்க உதவும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
பிரஸர் என கூறப்படும் இரத்த அழுத்தம் அநேகமான அறிகுறிகள் காட்டாமலேயே இருக்கும். வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் காணப்படும் இந்த நோய் ஆபத்து மிக்கது. குறிப்பாக உயர் இரத்த அழுத்த நோய்க்கு கருஞ்சிரகம் சிறந்த மருந்து. கருஞ்சீரக சாற்றை இரண்டு மாதங்களுக்கு எடுத்துக்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் லேசாக குறையுமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிக கொழுப்பைக் குறைத்தல்
கருஞ்சீரக எண்ணெயை உட்கொள்வது அதிக கொழுப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகும். இது நமது உடலில் ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிக்க உதவும். இந்த கொழுப்பு அமிலங்களில் லினோலிக் அமிலங்கள் மற்றும் ஒலிக் அமிலம் ஆகியவையும் அடங்கும். கறுப்பு விதைகள் எங்கு வளர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து எண்ணெய்களின் அளவு மாறுபடும். நொறுக்கப்பட்ட விதைகளை உட்கொள்ளும்போது மக்கள் முடிவுகளையும் காணலாம்.
முடக்குவாத அறிகுறிகளை குறைக்கும்
கருஞ்சீரக எண்ணெயை உட்கொள்வது அழற்சி முடக்கு வாதம் அதாவது எலும்புகளின் இணைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் அறிகுறிகளை குறைக்க உதவும்.
ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைத்தல்
கருஞ்சீரக எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க பயன்படுகின்றன. காற்றுப்பாதையில் வீக்கத்தைக் குறைப்பதில் அதன் விளைவு மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகளுக்கும் உதவக்கூடும்.
வயிற்றுவலி பிரச்சினையை குறைக்கும்
கருஞ்சீரகத்தை சாப்பிடுவது அல்லது கருஞ்சீரக எண்ணெய் உட்கொள்வது வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பை நீக்குவதில் உதவக்கூடியது. வாயு, வயிற்று வீக்கம் மற்றும் வயிற்று புண்கள் ஏற்படுவதைக் குறைக்க இந்த கருஞ்சீரக எண்ணெய் உதவும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது
கருஞ்சீரக எண்ணெய்க்கும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இது தோல் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவும். புற்றுநோய் செல்களைக் கொல்ல பயன்படும் கதிர்வீச்சின் திசு சேதப்படுத்தும் விளைவுகளை குறைக்க இந்த கருஞ்சீரக எண்ணெய் உதவக்கூடும். ஆனால் இது இன்னும் மனிதர்களிடத்தில் ஆய்வு செய்யப்படவில்லை.
தலைமுடியில் ஈரலிப்பாக தன்மை
கருஞ்சீரக எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதனால் முடி மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறுவதற்கு பயன்படுத்தலாம். மேலும் முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்த முடியும்.
சொரியாசிஸ் நோய்க்கு தீர்வாக
கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் நோயின் அறிகுறிகளைக் குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் தோல் ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை மேம்படுத்த கருஞ்சீரக எண்ணெய், மொய்ஸ்சரைசர்களில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
காயங்களை ஆற்ற உதவும்
கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் காயத்தின் வீக்கத்தைக் குறைப்பதாகவும், காயங்களைக் குணப்படுத்துவதற்கு ஏற்ற பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. புதிய கொலாஜன் இழைகளை வளர்ப்பதற்கு இது உதவாவிட்டாலும், உடலுக்கு புதிய மற்றும் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்க உதவும் பிற வளர்ச்சி காரணிகளை இது தூண்டுகிறது.