சரும பிரச்சினையிலிருந்து விடுபட சரியான தீர்வு

 

கால்களில் உள்ள உரோமங்களை ஷேவ் செய்த பிறகு சருமத்தில் கரும் புள்ளிகள் தோன்றும். நம் சருமம் அவலட்சணமாக தோற்றமளிக்கும். இந்த சரும பிரச்சினைக்கு ஸ்ட்ரோபெரி ஸ்கின் என்று கூறுவார்கள். உங்கள் தோல் கூடுதல் கரோட்டின் உற்பத்தி செய்வதால் மயிர்க்கால்களை தடுப்பதன் மூலம் இந்த நிலை ஏற்படலாம். மேலும், சருமம் தேவைக்கு அதிகமாக காய்ந்து இருக்கும் போது சருமத்தை ஷேவ் செய்யும் போதும் ஸ்ட்ரோபெரி ஸ்கின் ஏற்பட ஏதுவாகும். ஷேவிங் செய்தபின் சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம். பாக்டீரியாக்கள் சருமத்தில் கறுப்பு புள்ளிகளை ஏற்படுத்துகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், வீட்டிலேயே செய்து இவற்றிலிருந்து விடுபட முறைகள் உள்ளன.

 

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சருமத்தில் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களுக்கு எதிராக செயற்படுகிறது. இது வறட்டு சருமத்தை குறைப்பதற்கும் சருமத்தை மென்மையாக்குவதற்கும் வேலை செய்கிறது.

 • பேக்கிங் சோடா – ஒரு மேசைக்கரண்டி
 • நீர் – 1 தேக்கரண்டி

இரண்டையும் ஒன்றாக கலந்து, ஒரு பேஸ்ட் செய்து கால்களில் தேய்த்து, 4-5 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இது நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒரு பராமரிப்பு முறையாகும்.

 

இறந்த இழையங்கள் கொண்ட சருமத்தை நீக்குவதற்கு வழி

 

இறந்த சருமத்தை நீக்குவது சருமத்தில் உருவாகும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தில் தேவையில்லாமல் வளரும் முடியையும் நீக்குகிறது. இது வீட்டில் இலகுவாக தயாரிக்க கூடிய ஒரு ஸ்க்ரப்.

 • சிவப்பு சர்க்கரை – 1/2 கப்
 • ஒலிவ் எண்ணெய் – 1/2 கப்
 • கராம்பு எண்ணெய் –  மூன்று நான்கு துளிகள்

இதில் எல்லாவற்றையும் கலந்து ஒரு சிறிய பேஸ்ட் செய்து, தோலில் அதனை வட்டமாக தேய்த்து விட்டு மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும்.

 

கற்றாழை

 

கற்றாழை சருமத்தை குணப்படுத்தும். அற்புதமான ஈரப்பத தன்மையை கொண்டுள்ளது. கற்றாழை சருமத்தை சீராக்கவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

 • புதிய நல்லதொரு கற்றாழை துண்டு

கற்றாழையை தோலில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின்னர் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். இதனை தினமும் செய்வது சிறந்தது.

 

கடலுப்பு

உப்பில் கால்சியம், பிடேசிடம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல தாதுப்பொருட்கள் உள்ளன. தோலில் உள்ள ph அளவு சற்று மாற்றமடையும் போது, ​​அது சருமத்தை உலர்த்தி அரிப்பை உண்டாக்கும்.

 • உப்பு – 1/2 கப்
 • தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து தோலில் தேய்க்கவும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் களைத்து அதை துடைத்துவிட்டு நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

 

கோப்பித்தூள்

கோப்பி தூள் சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்த உதவுகிறது. சேதமடைந்த சருமத்தை சரிசெய்ய இந்த கோப்பித்தூள் உதவும்.

 • கோப்பி தூள் – 1/2 கப்
 • சர்க்கரை – 1/2 கப்
 • தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து உங்கள் தோலில் தடவி மூன்று முதல் நான்கு நிமிடங்கள் தேயுங்கள். தேய்த்து முடித்த பின்னர் வெற்று நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும்.

 

ரோஸ் வோட்டர் மற்றும் வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள தொற்றுகளை நீக்குகிறது. ரோஸ் வோட்டரால் சருமத்தை குளிர்விக்க முடியும். தடிமனான மயிரிழைகளை திறக்கும் தன்மை கொண்டது.

 • வெள்ளரி – ஒன்று
 • ரோஸ் வோட்டர் – ஒரு சில துளிகள்

வெள்ளரிக்காய் விதைகளை நீக்கி ப்ளெண்ட செய்து அதில் சில துளி ரோஸ் வோட்டரைச் சேர்த்து, சருமத்தில் தடவிவிட்டு, சுமார் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் வெற்று நீரில் கழுவவும். இது தினசரி அடிப்படையில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு மருந்துதான்.

 

முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்திற்கு பிரகாசத்தை தருகிறது. மேலும் இதில் புரதங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. மேலும், எலுமிச்சை சாறு இயற்கையாக தோலை ஜொலிக்க வைக்கக்கூடிய மருந்தாகும்.

 • முட்டை வெள்ளைக்கரு
 • எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்தில் தடவி 5-10 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் சாதாரண நீரில் கழுவவும். இது குளிக்க முன் தினமும் செய்யக்கூடிய மருந்தாகும்.