கொரோனாவால் அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ள தொழில்கள்

 

உலகின் சகல பகுதிகளிலும் ஏற்றத்தாழ்வின்றி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஒரு சில நாடுகளை மாத்திரமே விட்டுவைத்துள்ளது. பல நாடுகளில் இறப்புகள் பல ஆயிரங்களை கடந்துவிட்டது. பாதிப்போ இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த வைரஸால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உலகில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் குறைந்தாலும் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல வருடங்கள் போராடும் நிலையும் ஏற்படலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

பல் வைத்தியர்கள்

சேதமடைந்த பற்களை கழற்றி அகற்றவே முன்னர் பல்வைத்தியரை நாடுவோம். ஆனால் இப்போது பல் மருத்துவர்களைச் சந்தித்து பற்களை சரிசெய்யவும், பல் வரிசையை சரிசெய்யவும், மற்றும் பல்வேறு வகையான நிலைகளைக் காட்டி சரிசெய்யவும் செல்கிறோம். இந்த கொரோனாவுக்கு மருத்துவ துறை ஊழியர்கள்தான் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். இதனால் பல் ஊழியர்கள் இந்த நிலையில் மிகவும் ஆபத்தானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் பல் மருத்துவர்கள் எவ்வாறு வேலை செய்வார்கள் என்றுகூட கணிக்க முடியாதுள்ளது. இனி ஒரு பல்லைப் பிடுங்கக்கூட கடினம் என்றாலும், பல் வைத்தியருக்கான கட்டணம் உயரலாம். எனவே வீட்டில் இருக்கும்போது, ​​பல் துலக்குவதற்கு சலிப்படையாமல் பற்களை நேரத்திற்கு நேரம் துலக்கி சுத்தமாக வைத்திருங்கள்.

 

விமான ஊழியர்கள்

ஒரு விமானம் பயணம் செய்ய வேண்டுமானால் எத்தனையோ பேர் வேலை செய்தாக வேண்டும். விமான பணிப்பெண்கள் முதல் விமான நிலைய ஊழியர்கள், விமானப் பொறியாளர்கள், விமான நிலைய துப்புரவாளர்கள், சுங்க அதிகாரிகள் என அனைவரும் செய்தாக வேண்டும். கொரோனா வைரஸ் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளன. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின், பெர்னாண்டஸின் ஏர் ஆசியா போன்ற பல பெரிய விமான நிறுவனங்கள்கூட தத்தமது விமானங்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற சூழ்நிலையில் உள்ளன. பெரும்பாலும் விமான சேவைகள் இன்னும் பல மாதங்களுக்கு மீள முடியாத நிலையில் உள்ளன. இதன் விளைவாக, விமானத்தில் பணிபுரிபவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையை சந்திக்க நேரிடும்.

 

ஹோட்டல் மற்றும் உணவக ஊழியர்கள்

வுஹான் நகரம் இந்த ஆண்டு ஜனவரியில் சீனாவில் மூடப்பட்டது. கொரோனா பரவியதில் இருந்து எழுபத்திரண்டு நாட்கள் லோக்டவுன் செய்யப்பட்டிருந்தது. இப்போது வுஹான் வழமைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் உணவு மற்றும் பானங்களுக்கு புகழ் பெற்ற வுஹானுக்கு இன்னும் சரியான கூட்டம் திரளவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் அங்கு இல்லை என்றாலும், மக்கள் இன்னும் வெளியே சென்று சாப்பிட பயப்படுகிறார்கள். கொரோனா பரவும் பகுதிகளில், ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வது கடுமையான ஆபத்து நிறைந்தது. நாம் முகத்திற்கு மாஸ்க்களைப் பயன்படுத்தினாலும், சாப்பிடும்போது அதைப் பயன்படுத்தி சாப்பிட முடியாது. எனவே, ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அவர்களின் வேலைகளின் நிலைமை குறித்து சந்தேகம் நிலவும் காலம் இது.

 

சுற்றுலா தொழிலாளர்கள்

இது போன்ற பட்டியல்களை வெளியிடுவது ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்களுக்கு கவலையைத் தரும். ஆனால் அவர்கள் இதன்மூலம் வேறு சில வருமான ஆதாரங்களை பெற முயற்சிசெய்யலாம். கொரோனா எங்களை நாட்டிலிருந்து நாட்டிற்குச் செல்லவும் வீட்டை விட்டு வெளியேறவும் தடைசெய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், உலகின் 90% க்கும் அதிகமான மக்கள் தங்கள் நேரத்தை வீட்டிலேயே கழித்தனர். அந்த நேரத்தில், அதிகம் சுற்றுப்பயணங்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்கூட புதிய சுற்றுப்பயணங்களுக்கு செல்ல முடியவில்லை. சுற்றுலா நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதியாக இருக்கும் தாய்லாந்து போன்ற நாடுகள்கூட கொரோனா பரவுவதால் சுற்றுலா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இதனால் வரவிருக்கும் பொருளாதார கஷ்டங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுடன், சுற்றுலாவையே தொழிலாக பணிபுரிபவர்களுக்கு குறைந்தது ஒரு வருடமாவது கடினமான நேரம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆடை தொழில்

ஆடை உற்பத்திக்கு எமது நாடு மிகவும் பிரபலமானது. பங்களாதேஷ் போன்ற ஒரு நாட்டை நாம் எடுத்துக் கொண்டால், அங்கு தைக்கப்படும் ஆடைத்தொழிலால்தான் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த கொரோனா சூழலால் பங்களாதேஷ் ஆடைத் தொழிலில் ஈடுபடும் ஏழை தொழிலாளர்கள் மிகவும் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்கு திரும்ப வேண்டும். ஏனென்றால் போதியளவு கேள்வி இல்லாததால், ஆடை தொழிற்சாலைகளில் வேலைகள் இல்லை. எனவே, இந்தியா, வியட்நாம், பங்களாதேஷ், இலங்கை, உகாண்டா போன்ற நாடுகளில் ஆடைத் தொழிலில் பணிபுரியும் மக்கள் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

போக்குவரத்து தொழிலாளர்கள்

கொரோனா வைரஸானது,  சுகாதார ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் லரின் வேலைகளை பறிக்கவில்லை. அவர்களின் தேவையை மேலும் அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் கொரோனாவால் பெரிதும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்கள்தான். ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு பேரை நேரடியாகக் கையாள வேண்டிய நடத்துனர்களில் ஒருவரின் தொழில் பாதுகாப்பானது என்று நாம் சாதாரணமாகக் கருதினாலும், கொரோனா தொற்று குறித்த ஆபத்து மற்றவர்களைவிட அதிகமாக அவர்களுக்கே உள்ளது.

 

வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

கொரோனா முதலில் சீனாவிலும் பின்னர் ஐரோப்பாவிலும் பரவியது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இந்தியாவிலும் பிரேசிலிலும் அதிகரித்து வருகின்றது.  சில வாரங்கள் தொடர்ந்து நீடித்தால், கொரோனா எங்களையும் எளிதில் விட்டுவிடுவதாக எந்த உத்தரவாதமும் இல்லை. கொரோனா சவாலுக்குள் வாழ்வதற்கு நாம் கஷ்டப்பட்டாயினும் பழக வேண்டும் என்று வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, எங்கள் வருமான வழிகளில் மற்றும் வேலைகளில் சில பிரச்சினைகளும் குழப்பங்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. ஆனால் எப்படியாவது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் முழு உலகிற்கும் ஒரு சவாலாக இருக்கும் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.