நட்சத்திர ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளின் பின்னணி தெரியுமா?

 

கிடைப்பதை வைத்து வயிறார சாப்பிடும் பழக்கம் எமக்கிருந்தாலும், குடும்பத்தோடு போய் ஒரு பெரிய ஹோட்டலில் பீட்ஸா, பர்கர் சாப்பிட விரும்பும் பலர் எம்மில் உள்ளனர். இந்த உணவுகள் உண்மையில் பணக்கார கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சாப்பிட்ட பின்னரே எமக்கு கிடைத்தது என்று யாராவது நினைத்தால் அதில் எவ்வித உண்மையும் இல்லை.

 

பீட்ஸா

பீட்ஸா, எமது பசியின் அளவிற்கு சிறிதாக இருந்தாலும் எமது பணத்தில் சிறிதாக இருப்பதில்லை. முதலில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட பீட்ஸா, தக்காளி, ஒலிவ் காய் மற்றும் சிறிது இறைச்சி மேலோடு சேர்த்து போட்டு செய்யப்பட்ட மிக எளிய உணவாகும். மார்கரெட்டா பீட்சா சாப்பிட ஆரம்பித்தவுடனேயே பீட்ஸா பிரபலமாகியது. இத்தாலியின் இரண்டாவது ராணியான ராணி மார்கரெட்டா, இந்த எளிய பீட்ஸாவின் பொருட்களுடன் இன்னும் கொஞ்சம் உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிட்டுள்ளார். எனவே இப்படி உருவாகிய பீட்ஸாவை சாப்பிடுவது எம்மில் பலருக்கு பெருமையை கொடுப்பதாக மாறியுள்ளது.

 

சுஷி

ஜப்பானிய மீனவர்களின் உணவுதான் சுஷி. ஆனால் இன்று காசிருந்தால் மட்டுமே சுஷி சாப்பிட முடியும் என்கிற அளவிற்கு இன்று நிலைமை வந்துவிட்டது. இந்த சுஷியை சாப்பிட வேண்டுமென்றால் எல்லா உணவகத்திலும் கிடைக்காது. அப்படி கிடைக்கும் இடங்கள் சாதாரண இடங்களாகவும் இருக்காது. சுஷி சாப்பாடு, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பிரபலமானது. உலகின் பல நாடுகளில் சாப்பிட்டார்கள். இன்று காசிருந்தால் சுஷி சாப்பிடலாம் என்ற நிலை ஆரம்பத்தில் இருக்கவில்லை. அப்போது எல்லோருமே சாப்பிட்டார்கள்.

 

டிரமிசு

டிரமிசு ஒரு கோப்பி சுவை கொண்ட இத்தாலிய இனிப்புப் பண்டமாகும். இது கோப்பியில் நனைத்த லேடிஃபிங்கர்களால் ஆனது. முட்டை, சர்க்கரை மற்றும் மஸ்கார்போன் சீஸ் ஆகியவற்றின் கலவையாக, கோகோவுடன் சேர்த்து சுவைக்கப்படுகிறது. ஐஸ்கிரீம், வட்டலப்பன், கேக் போல சாதாரணமாக பார்க்க இருந்தாலும், விலையிலும் சுவையிலும் அதிகமாகத்தான் இருக்கும். எப்படியாக இருந்தாலும் இந்த டிரமிசு இத்தாலியின் ஒரு பகுதியில் உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு ஆதாரமாகத்தான் இந்த சாப்பாடு பழக்கத்தில் வந்துள்ளது.

 

பாஸ்தா

பாஸ்தா என்பது மறுமலர்ச்சி காலத்தில் இத்தாலியில் பல ஏழை மக்களின் உணவாக இருந்தது. அந்த காலத்தில் இத்தாலியர்கள்கூட அதை சாலைகளிலும் வீதி ஓரங்களிலும் இருந்து கொண்டு வெறுங்கையால்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த நிலை முன்னேறி இப்போதெல்லாம் பாஸ்தா சாப்பிடுவதற்கு என்றே தனிக்கரண்டிகள் உள்ளன. எனவே பாஸ்தா என்பது வீட்டில் கரண்டிகூட இல்லாத மக்களின் பசியை ஆற்றிய ஒரு உணவு. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பாஸ்தா இல்லாமல் ஒரு இத்தாலிய சாப்பாட்டு மெனுவை காண முடியாத அளவிற்கு மாறியது பாஸ்தாவின் பிரபலம்.

 

கேவியர்

கேவியர் என்பது ஒரு உப்பு சேர்க்கப்பட்ட மீன் முட்டை உணவாகும். 30 கிராம் கேவியர் குறைந்தபட்சம் சுமார் 15,௦௦௦ ரூபாய் வரை இருக்கும். எனவே இதுவும் இந்த உலகில் உள்ள மிகவும் விலையுயர்ந்த உணவுகளில் ஒன்றாகும். இப்போது விலையில் உயர்ந்து காணப்படும் இந்த கேவியர் மீன் முட்டையால் ஆன உணவாகும். முன்பெல்லாம் இது அதிகமாக காணப்பட்டதால்  அமெரிக்கர்களுக்கு இலவசமாக கொடுத்து மலிந்து போய் காணப்பட்டது. பிற்காலத்தில் இவற்றின் அளவு குறைந்து விடும் என்று அறிந்த பின் மெது மெதுவாக விலை அதிகரித்துள்ளது.

 

சிக்கன் விங்ஸ்

உலகில் சிக்கன் உணவில் காலங்காலமாய் பணிபுரியும் சாதாரண ஹோட்டல்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை சிக்கன் விங்ஸ் அதாவது கோழி இறக்கைகள் ஒரு டிஷ் ஆக உள்ளன. கோழியின் உடலின் மற்ற மாமிச பாகங்களைவிட விங்ஸ் ஒரு படி அதிகம் விலை கொண்ட பாகமாக உள்ளது. கோழித் தோலை அகற்றும் போது இவை தேவையற்ற உடல் உறுப்பாகத்தான் இருக்கும்.

 

கடற்சிங்கி இறால்

19 ஆம் நூற்றாண்டில் கடற்சிங்கி இறால் உணவு ஏழைகளின் அடையாளமாக இருந்தது. மக்கள் அவற்றை சாப்பிடாதபோது, ​​அவர்கள் அவற்றை மீன் பிடிக்க இரையாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பின்னர், மக்கள் அதை எப்படி விதவிதமாக செய்து சாப்பிட முடியும் என்று கற்றுக்கொண்டனர். எனவே அந்த உணவு முறை பழக்கத்தின் பின்னர் கடற்சிங்கி இறால் சுவையான மற்றும் விலை மதிப்புள்ள உணவாகவும் மாறியது.