உங்கள் வேலைகளை இலகுவாக்கும் GOOGLE ASSISTANTஐ பயன்படுத்துங்கள்

 

அண்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் அல்லது பிற ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோருக்கு கூகிள் அசிஸ்டன்ட் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனாலும் அதனை எவ்வாறு பயன்படுத்துவதென தெரியாமல் இருக்கும். அதுபற்றி இன்று உங்களுக்கு விளக்கவுள்ளோம். இது கூகிள் தயாரிப்புகளை ஆதரிக்கும் ஸ்மார்ட் கூட்டு அமைப்பு கொண்ட செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படுகிறது. இலகுவாக சொல்ல வேண்டுமென்றால் ஸ்மார்ட் போனில் உள்ள ஒரு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். கூகிள் அஸிஸ்டன்டை எப்படி பயன்படுத்துவது, எவ்வளவு பயன் பெற முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. எனவே கூகிள் அஸிஸ்டண்ட் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் சாதனத்துடன் செய்யக்கூடிய சில சிறந்த வேலைகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லலாம் என்று நினைத்தோம்.

 

மெசேஜ் அனுப்புவது சுலபம்

நீங்கள் ஏதாவது முக்கியமான வேலையை செய்து கொண்டிருக்கும் போது அல்லது அலுவலக கலந்துரையாடலில் இருக்கும் போது உங்கள் காதலி தொலைபேசியில் அழைத்தால் என்ன செய்வது? மெசேஜ் அனுப்பி இலகுவாக முடித்து விடலாம். அதற்கென்று மெசேஜ் டைப் செய்து கெஞ்சிக்கொண்டிருப்பதற்கு பதிலாக சுலபமாக கூகிள் அசிஸ்டன்ட் மைக்கை அழுத்தி “சென்ட் எ மெசேஜ் டு பேபி” என்று கூறினால்,  நீங்கள் உங்கள் காதலியை பேபி என்று சேவ் செய்து இருந்தால், என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று கேட்கும். “ஐ வில் கோல் யூ லேட்டர், லவ் யூ சோ மச்” என மெசேஜ் இல் நீங்கள் சொல்வதை அவ்வாறே பதிவு செய்து அனுப்பிவிடும். அதேபோல அவருடன் எந்த அப்ளிகேஷன் மூலம் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அதையும் கேட்கும். வாட்ஸ்அப் மூலம் என்றால் வாட்ஸ்அப் என்று கூறி அதன் மூலமும் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் கூகிள் அசிஸ்டன்ட் எமது சொல் பேச்சை கேட்பதற்கு நாம் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும்.

 

இதை எனக்கு நினைவுறுத்து!

உங்களுக்கு மறக்கக்கூடிய ஒன்றை சரியாக நினைவூட்டுவதற்கு அலாரம் வைத்திருப்பது போலதான் மைண்டர் என்பதும். ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் நினைவூட்டலை காட்டுவதற்கு, ஓரிரு டச் இல் செய்து முடிக்க கஷ்டம். அதனை இலகுவாக்குவதற்கே கூகிள் அசிஸ்டன்ட் இன் ரிமைண்டிங் சிஸ்டம் இருக்கின்றது. உதாரணமாக நாளை காலை உங்கள் மேனேஜருடன் உரையாடுவதற்கு நினைவூட்ட வேண்டுமானால், கூகிள் அஸிஸ்டண்ட்டின் மைக்கை பிடித்து, “ரிமைண்ட் மீ டு கோல் மேனேஜர் பை டென் ஏ எம் டுமோரோ” என்று கூறினால் சரியாக அடுத்த நாள் காலை ரிமைண்ட் செய்து விடும்.

 

ப்ளீஸ் எனக்காக தேடிக்காட்டு!

எங்களுக்கு ஏதாவது கூகிளில் போய் தேட வேண்டுமென்றால் அதை கூகிள் அசிஸ்டன்ட் இடமே சொல்லி இலகுவாக தேடிக்கொள்ள முடியும். உதாரணமாக சொல்லப்போனால், “வேர்ல்ட் ரிச்செஸ்ட் கண்ட்ரி” என்றால் உடனே வந்து விடும்.  அதோடு நீங்கள் ஏதாவது வேளையில் இருந்து கொண்டே இதைப் பற்றி கேட்க ஆசைப்பட்டால் “ரீட் திஸ்” அல்லது “ரீட் வட்ஸ் ஒன் த ஸ்கிரீன்” என்றாலும் உடனே அதையும் வாசித்து உங்களுக்கு சொல்லித் தரும். பொதுவாக இது அடிக்கடி பிசியாக இருப்பவர்களுக்குத்தான் பயனுள்ளதென தரவுகள் தெரிவிக்கின்றன.

 

காலையில் எழுப்பி விடவா?

கூகிள் அசிஸ்டன்ட் செய்யும் வேளைகளில் அலாரம் வைக்கும் ஒன்றும் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு இலகுவாக “அலாம் எட் சிக்ஸ் ஏ எம்” அல்லது எமக்கு தேவையான நேரத்தை சொல்ல முடியும். எதுவாயினும் நேர அடிப்படையில் ஏதாவது செய்வீர்கள் என்றால், AM ஐயும் PM ஐயும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல் சரியாக தெளிவாக சொல்ல வேண்டும்.

 

எனது மொபைல் எங்கே?

இந்த வேலையை செய்ய ஸ்மார்ட் போன் மட்டும் போதாது. கூடவே ஸ்மார்ட் ஸ்பீக்கர் இருக்கவும் வேண்டும். அதாவது கூகிளின் கூகிள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர். பொதுவாக அடிக்கடி நாம் நமது மொபைலை தொலைத்து தேடிக்கொண்டிருப்போம் தானே? கூகிள் அசிஸ்டன்ட்டில் உள்ள ஸ்மார்ட் ஸ்பீக்கர் இருக்கும் என்றால், ” fபைண்ட்  மை போன்” என்று சொன்னால் போன் இருக்கும் இடத்திலிருந்து வெளிச்சத்தையோ அல்லது சத்தத்தையே போன் மூலமாக உண்டு பண்ணும். சில சமயங்களில் போன் சைலன்ட் அல்லது டு நோட் டிஸ்டர்ப் இல் போடப்பட்டு இருந்தாலும் இது சரியாக வேலை செய்து விடும்.