ஸ்மார்ட் டிவி என்பது ஒரு இயக்க முறைமை மற்றும் இணையத்துடன் இணைக்கக்கூடிய டிவி ஆகும். இதில் சாதாரணமாக டிவியில் பார்க்கும் விடயங்களை விட வேறு சிலவற்றையும் செய்யலாம். ஆனால் ஸ்மார்ட் டிவி இல்லாத டிவியாக இருந்தாலும் ROKU, APPLE TV, GOOGLE CHROMECAST, AMAZON FIRE TV போன்ற ஸ்ட்ரீமிங் பொக்ஸ் ஏதாவது ஒன்றை இணைத்து பயன்படுத்த முடியும். ஆனால் ஸ்மார்ட் டிவியைப் பயன்படுத்தும் சிலர், ஸ்மார்ட் டிவியின் திறன்கள் இப்போதெல்லாம் ஸ்ட்ரீமிங் சாதனத்தைவிட அதிகமென கூறுகிறார்கள். ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.
அதிகம் செலவில்லை
முன்பெல்லாம் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு அதிகம் செலவழிக்க வேண்டும். ஆனால் இப்போது ஸ்மார்ட் டிவிகளின் விலை மிகவும் குறைந்துவிட்டது. சாதாரண வருமானம் பெறுவோரும் வாங்கலாம். உதாரணமாக, 32 அங்குல சாதாரண டிவி மற்றும் ஸ்மார்ட் டிவி என்று எடுத்துக்கொண்டால், LG அல்லது SAMSUNG போன்ற பிரபல தயாரிப்புகள் 40,000 ரூபாய் வரை செலவாகும். மற்ற தயாரிப்புகளில் இதனை விட குறைவான விலைக்கு வாங்கலாம். ஆனல் தரம் வித்தியாசமானது. இது தவிர்த்து ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்குவதானால் அந்த விலையில் இருந்து மேலும் 6000 அல்லது 7000 மட்டுமே அதிகமாகும். ஆகவே ஸ்மார்ட் டிவியே வாங்குவது இலாபம் தானே?
நெட்பிலிக்ஸ் மற்றும் யூடியூப்
உங்களிடம் ஸ்மார்ட் டிவி இருந்தால், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவைகளை பார்க்க முடியும். ஸ்மார்ட் டிவியின் மூலம் FULL VIDEO QUALITY வைத்து இவற்றை பார்க்கலாம். இந்த ஸ்ட்ரீமிங் சேவைகளின் நன்மையை பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. நெட்ஃபிலிக்ஸ் நன்மைகளைப் பற்றி நாங்கள் ஏற்கனவே பேசினோம். சுருக்கமாக, டிவி தொடர்களையும் திரைப்படத் தயாரிப்பையும் மிகவும் எளிதாக பார்க்க முடியும். ஸ்மார்ட் டிவி மூலம் இந்த சேவைகளை எளிதாக அணுகலாம்.
ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட் போனாக மாறும்!
ஸ்மார்ட் டிவியின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பயனுள்ள திறன்களில் இதுவும் ஒன்று. அதாவது ஸ்மார்ட்போன் அல்லது லெப்டொப் எதுவாக இருந்தாலும் ஸ்மார்ட் டிவியை எளிதில் இணைக்க முடியும். அதாவது இலகுவாக SCREEN MIRROR செய்து கொள்ள முடியும். இதன் பொருள் ஸ்மார்ட்போன் அல்லது லெப்டொப்பின் SCREEN இல் உள்ள அனைத்தையும் இலகுவாக பெரிய திரையில் பார்க்க முடியும். இதற்கென்று பிரத்தியேகமாக வயர் எதுவும் மீண்டும் இணைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட் டிவியிலும் உங்கள் ஸ்மார்ட் போனையும் ஒரே WIFI யில் இணைத்த பின்னர் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளவற்றை டிவியில் பார்க்கலாம்.
எளிதாக கையாள முடியும்
கடந்த காலத்தில், ஸ்மார்ட் டிவியைப் பயன்படுத்துவது அவ்வளவு USER FRIENDLY யாக இருக்கவில்லை. ஏனெனில் ஸ்மார்ட் டிவியில் வெப்-பிரவுசர் இருந்தாலும், அந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் எவ்வாறு டிவியை கணினி போல இயக்குவது என்பது சிக்கலாக காணப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் வரும் ஸ்மார்ட் டிவியை சமாளிப்பது மிகவும் எளிது. எடுத்துக்காட்டாக, எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ள மேஜிக் ரிமோட் மூலம் வயர்லஸ் மவுசை இயக்குவது போல இலகுவாக இயக்க முடியுமாக செய்துள்ளது. இதுவே நீங்கள் டிவியை ஸ்ட்ரீமிங் பொக்ஸ் ஒன்றுடன் இணைத்து இருந்தால், உங்கள் கையில் இரண்டு ரிமோட்களை வைத்து தடுமாறி கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் டிவி இருந்தால், ஒரு ரிமோட் மூலம் எல்லா வேலையையும் செய்ய முடியும்.
தேவையான அளவு போர்ட்ஸ் (PORTS) இருக்கும்
வழக்கமாக ஒரு டிவியின் பிற்பக்கத்தை பார்க்கும்போது, அதில் நிறைய PORTS இருக்கும். ஆனால் புதிதாக வரும் டிவிக்களில், HDMI போர்ட் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். அதில் ஒரு PORT மூலம் ஸ்ட்ரீமிங் பொக்ஸிற்கு இணைக்க முடியும். மற்றையதை வைத்து PS4 போன்ற வேறு சிலவற்றை இணைக்க முடியும். மேலதிகமாக ஏதாவது இணைக்க தேவைப்பட்டால் கனெக்டர்களை தேடித்திரிய வேண்டும். ஆனால் ஸ்மார்ட் டிவிக்களில் அத்தகையய சிரமம் எதுவும் இருக்காது. ஏனென்றால் தேவைக்கு அதிகமாகவே நிறைய PORTS தந்திருப்பார்கள். அதனால் ஒன்றை இணைக்க ஒன்றை கழற்றிவிட வேண்டிய தேவை இருக்காது. எந்த தொந்தரவும் இல்லாமல் பார்க்கலாம்.
வெப்-பிரவுசர் மற்றும் மேலதிக அப்ளிகேஷன்ஸ்
ஸ்மார்ட் டிவியில் பலவிதமான பயன்பாடுகள் உள்ளன. பொதுவாக மிகவும் பிரபலமானவையான YOUTUBE, Plex, TED, Vimeo, Facebook Watch, HBONow ஆகியவை இருக்கின்றன. ஆனாலும் இவை தவிர, ஸ்மார்ட் டிவியில் உள்ள ஆப்ஸ்டோரிலிருந்து தேவையான வேறு சில அப்களையும் டவுன்லோட் செய்யமுடியும். நாம் மேலே கூறியது போல, ஒரு ஸ்மார்ட் டிவியில் வெப்-பிரவுசர் உள்ளது. எனவே இணையத்திற்கு எமக்கு தேவையான விடயங்களை தேடுவதும் இலகுவாக இருக்கும்.
மேலதிக பயன்கள்
ஸ்மார்ட் டிவியின் மற்றொரு அம்சம் என்னவென்றால், வெளிப்புற நினைவக சேமிப்பக சாதனத்தைக் கொண்டு, டிவியில் நீங்கள் விரும்பும் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அல்லது திரைப்படத்தையும் சேவ் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், ஒரு ஸ்மார்ட் டிவியில் ஹோம் தியேட்டர் சிஸ்டம், சவுண்ட் பார், கேமிங் கன்சோல் மற்றும் பலவற்றை இணைக்க முடியும். மேலும் தற்போது வரக்கூடிய பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளில் புளூடூத் வசதியும் உள்ளது.