உலகில் எந்த விடயம் நடந்தாலும் எந்த நாடு நடத்தியது அல்லது எந்த நாடு தொடர்புபட்டதென உடனே கேட்போம். ஆனால் அந்த நாடுகளின் வரலாறு பெரிதாக அனைவருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு, எமது நாடும் 1972 வரை சிலோன் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஸ்ரீலங்கா என்றே அழைக்கப்படுகின்றது. அவ்வாறு சில நாடுகளின் ஆரம்பப் பெயர்கள் தொடர்பாகவே இன்றைய கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.
ஸ்வாசிலாந்து – எஸ்வட்னி
ஸ்வாசிலாந்து தெற்கு ஆபிரிக்காவிற்குள் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாட்டின் தலைவர் சமீபத்தில்கூட இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த நாட்டின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில், மூன்றாம் மஸ்வதி மன்னர் இந்த சிறிய நாட்டின் பெயரை ஸ்வெட்டினி என்று மாற்றினார். நாட்டின் பெயரை மாற்ற மற்றொரு காரணம் என்னவென்றால், இந்த நாட்டின் பெயர் சுவாசிலாந்து என்று இருக்கும்போது, அது சுவிட்சர்லாந்து என்கிற நாட்டின் பெயருடன் குழப்பத்தை ஏற்படுத்துமென நினைத்தார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க ஏழைநாடான ஸ்வெட்டினி இற்கும் அழகான ஆல்பைன் மலைகளை கொண்டுள்ள சுவிஸ் நாட்டிற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. எனவே 1986 தொடக்கம் இன்றுவரை ஆட்சி செய்து வரும் மஸ்வதி மன்னர் ஸ்வாசிலாந்து-ஸ்வெட்டினி என்று பெயரை மாற்றி சுற்றுலாத்துறையில் மேலும் முன்னேற நம்புகிறார்.
பர்மா – மியன்மார்
மியான்மர் ஒரு பழைய பர்மிய நாடு. பர்மா என்பது பண்டைய காலங்களிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பௌத்த கலாசாரத்துடன் நம் நாட்டோடு தொடர்புடைய ஒரு நாடு. 1989 இல் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்குழு இருந்த போது மியான்மார் என்று மாறியது. ஆனால் இன்னும் உலகில் இந்த நாடு பர்மா என்று அழைக்கப்படுகிறது. பர்மன் எனும் மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்ததாலே அந்த நாட்டை பர்மா என்று அழைத்துள்ளனர். சுமார் 135 வெவ்வேறு இனங்கள் மியான்மாரில் வாழ்கின்றன. இவ்வளவு பிரச்சினை இருந்தும் பர்மா எனும் பெயரை மியான்மார் என்று மாற்றினாலும் இன்னும் தெற்காசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத்தான் இது இருந்து வருகிறது.
வடக்கு மசிடோனியா
யூகோஸ்லாவியாவுடனான மோதலுக்குப் பிறகு, 1993 இல் மசிடோனியா என்று ஒரு பகுதி பிரிக்கப்பட்டது. ஆனால் கிரீஸ் நாடு அதை விரும்பவில்லை. தனித்துவமான மக்கள், தனிக் கலாசாரங்கள் மற்றும் தனித்துவமான மொழிகளால் மாசிடோனியா இருந்ததால் 2019 ஆம் ஆண்டில் அதை ஒரு தனி நாடாக அறிவித்தது. இருப்பினும் அதை தனது சொந்த நாட்டில் இணைக்க கிரீஸ் விரும்புகிறது.
ஸ்ரீலங்கா
1972 க்கு முன்னர் ஸ்ரீலங்கா, சிலோன் என்று அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, காலனித்துவ நாடுகள் நம் நாட்டைக் குறிக்க சிலோன் என்ற பெயரைப் பயன்படுத்தின. அந்த அடிப்படையில் BANK OF CEYLON மற்றும் CEYLON ELECTRICITY BOARD போன்றவைகளில்கூட இன்னும் பழைய பெயர்களால்தான் அறியப்படுகிறது. சிலோன் என்ற பெயரை மாற்றுவதற்கு குடியரசாக மாறும்போது இலங்கை விரும்பியது. அதனால் ஸ்ரீலங்கா என்ற பெயரை சூடியது. ஆனால் இன்னும் சிலோன் என்ற பெயர் ஆங்கிலேயரின் பண்டைய எழுத்துக்களில் காணப்படுகிறது.
சிம்பாப்வே
1990 களின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிம்பாப்வே ஒரு மறக்க முடியாத நாடு. ஏனெனில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் எப்போதும் சாதனை படைத்து இலங்கையில் அதிகம் பேசப்பட்ட நாடாகும். சிம்பாப்வே முதலில் ரோடீசியா என்று அழைக்கப்பட்டது. 1980 இல் ரோடீசியா சிம்பாப்வே என மாறும்போது, அதன் தலைநகரம் சல்சிபாரிலிருந்து ஹராரே என மாறியது. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தபோது, ஓரளவு வளர்ந்த நாடான இருந்த சிம்பாப்வே, ரொபர்ட் முகாபேவின் ஆட்சியினால் மேலும் வறுமையில் தள்ளப்பட்டது. சிம்பாப்வே ஆபிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும் என்றாலும், வனவிலங்கு சரணாலயங்கள் சுற்றுலாப் பயணிகளை சிம்பாப்வேக்கு செல்ல ஊக்குவிக்கின்றன.
செக்கியா (Czechia)
செக்கோஸ்லோவாக்கியா என்ற பெயர் நீளமானது. செக்கியா என்று கூறுவது மிகவும் எளிதானது. செக்கோஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசால் 2016 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட புதிய நாடு ரஷ்யாவின் செக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. செக்கியாவில் பழங்கால கோயில்கள் மற்றும் கோட்டைகள் பொதுவானவை. கேம் ஒப் த்ரோன்ஸ் போன்ற பிரபலமான நாடகங்களின் வளர்ச்சியுடன், செக்வியா கோட்டைகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தனர்.
நாடுகளின் பெயர்களை மாற்றுவது எப்போதும் வெற்றிகரமாக இருக்காது. செக் குடியரசு செக்கியா என்கிற பெயரை அதிகம் விரும்புவதில்லை. இருப்பினும் நாங்கள் சிலோன் என்ற பழைய பெயரை பயன்படுத்துவதில்லை. பெயரை மாற்றி மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும், மியன்மார் இன்னும் பர்மா என்றே அழைக்கிறது. எனவே இந்த அழகான நாடுகளைப் பார்க்க இப்போது நாம் செல்ல முடியாது. ஆனால் நீங்கள் யூடியூப்பிற்குச் சென்று சேர்ச் செய்து, இந்த நாடுகளில் மாற்றப்படாத அந்த அழகான இடங்களைக் காணலாம்.