நாம் சாப்பிட்டு எஞ்சிய சோற்றை விலங்குகளுக்கு போடுகிறோம் அல்லது குப்பையில் தூக்கி வீசுகிறோம். ஆனால் முன்னைய காலத்தில் எமது பாட்டியின் கை பக்குவத்தில் பழஞ்சோறு சாப்பிட்டிருப்போம். இந்த பழஞ்சோறு கடைசியாக சாப்பிட்ட காலம்கூட நமக்கு நினைவில் இருக்கிறதோ தெரியவில்லை. இன்று லைபீ தமிழ் எஞ்சிய சோற்றை வீணாக வீசாமல் அதை வைத்து செய்யக்கூடிய சுவையான 5 உணவுகளை கொண்டு வந்துள்ளது. இதை வாசித்தால், நாம் உழைத்த பணத்தை எவ்வாறெல்லாம் வீணாக்குகின்றோம் என தெரியவரும்.
EGG RICE BALLS – ஏக் ரைஸ் போல்ஸ்
தேவையான பொருட்கள்
- சோறு – 1 1/2 கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு
- விருப்பமான சீஸ் – துருவியது
- உப்பு
- மிளகு
- நறுக்கிய வெங்காயத்தில் பாதி
- நறுக்கிய மிளகாய்
- முட்டை – 1
- பிஸ்கட் தூள்
- சோறு மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக பிசைந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் உப்பு, மிளகு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் சோற்றையும் சேர்த்து கலக்கவும்.
- பின்னர் கையில் எண்ணெய் தடவி, அந்த கலவையின் நடுவில் சீஸ் வைத்து பந்து போல செய்து கொள்ளவும்.
- உடைத்து நன்கு அடித்து எடுத்த முட்டையில் அதை நனைத்து, பிஸ்கட் தூளில் பிரட்டி சூடான எண்ணையில் பொறிக்கவும்.
RICE PUDIN – ரைஸ் புடிங்
தேவையான பொருட்கள்
- சோறு – 1 1/2 கப்
- சர்க்கரை -1/2 கப்
- முட்டை – 2
- பிரஷ் பால் – 1 1/2 கோப்பை
- சாதிக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
- உலர் முந்திரி – 1/4 கோப்பை
- ஒரு கிண்ணத்தை எடுத்து முட்டை, பால், ஜாதிக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அதில் சிறிது நசுக்கிய சோற்றை போட்டு உலர் முந்திரியையும் சேர்க்கவும்.
- கலவையை சூடாக்கிய வெண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். Preheated அடுப்பில் 170 செல்சியஸ் வரை வைத்து 45 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
RICE THOSAI – ரைஸ் தோசை
தேவையான பொருட்கள்
- சோறு – 1 கப்
- அரிசி மா – 1/2 கப்
- தயிர் – 1/2 கப்
- நீர் – 1/2 கப்
- அப்ப சோடா – மூன்று சிட்டிகை
- உப்பு – சிறிதளவு
- நறுக்கி தாளிக்கப்பட்ட வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
- சோறு, பால், உப்பு, தண்ணீர் மற்றும் அரிசி மா ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் கலந்து மென்மையாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பேக்கிங் சோடா மற்றும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, பத்து நிமிடங்கள் வரை வைக்கவும். எண்ணெய் பூசப்பட்ட தட்டில் வழக்கமான தோசையை சுடுவது போல சுட்டெடுத்துக்கொள்ளவும்.
RICE KEESH – ரைஸ் கீஷ்
தேவையான பொருட்கள்
- சோறு – 1 1/2 கப்
- மாவு – கப் 1/4
- உப்பு – 1/2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
- முட்டையின் வெள்ளைக்கரு – 1
மேலதிக நிரப்புகை (Filling)
- முட்டை – 3
- பிரஷ் பால் – 1/4 கோப்பை
- நறுக்கிய வெங்காயம்
- நறுக்கிய தக்காளி
- துருவிய மொஸெரெல்லா சீஸ்
- உப்பு மற்றும் மிளகு – சுவைக்கேற்ப
- வெட்டப்பட்ட வெங்காய கீரைகள்
- சோறை எடுத்து நன்கு பிசைந்து அதில் மா, முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு மஃபின் தட்டு அல்லது சுட்டெடுக்க முடியுமான இரண்டு சிறிய கப் அல்லது ஒரு தட்டில் வெண்ணெய் தடவி வைக்கவும். மாக்ககலவையை அதில் வைத்து கீழே மற்றும் பக்கங்களை மறைக்க கையால் செய்து கொள்ளுங்கள்.
- பிலிங்கிற்கு, மூன்று முட்டைகளையும் ஒன்றாக கலந்து, மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும். தயாரிக்கப்பட்ட பிலிங்கை மஃபின் தட்டில் உள்ள சோற்று கப்களில் நிரப்பவும். சுமார் 30 நிமிடங்கள் 180 செல்சியஸில் ஒரு சூடான அடுப்பில் பேக் செய்யுங்கள்.
RICE PAKORA ரைஸ் பகோரா
தேவையான பொருட்கள்
- சோறு – 1 கப்
- நறுக்கிய சிறிய வெங்காயம்
- நறுக்கிய பச்சை மிளகாய்
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- கடலை மா – 5 மேசைக்கரண்டி
- வெட்டிய கொத்தமல்லி இலைகள் – 1/4 கப்
- மஞ்சள் – சிறிதளவு
- சுவைக்கேற்ப உப்பு, மிளகு, மிளகாய் தூள்
- பெருங்காயம் – ஒரு பிஞ்ச்
- தயிர் – 2 மேசைக்கரண்டி
- ஒரு கரண்டியால் சோற்றை நன்கு பிசையவும். பின்பு எஞ்சிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதை 10-15 நிமிடங்கள் மூடி வைக்கவும். லேசான கலவையாக மாற்றுவதற்கு போதுமான நீரை சேர்க்கவும்.
- சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.