உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திகில் திரைப்படங்கள்

 

திகில் படங்களைப் பார்க்க ஆசை இருந்தாலும் பயமும் இருக்கத்தான் செய்கின்றது. உண்மையிலேயே திகிலூட்டும் படத்தைப் பார்த்து விட்டு அந்த இரவை கழிப்பதில் உள்ள கஷ்டம் பற்றி திகில் பட ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். திகில் படங்கள் பார்த்தாலும் அவை எவ்வளவு கற்பனையான கதை என்பதை பார்வையாளர்கள் அறிவார்கள். எல்லா திகில் படங்களும் அப்படி கற்பனையினால் மட்டும் அமைவது இல்லை. உலகில் நடந்த சில உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகிய பல பேய் திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பற்றி பார்ப்போம்.

 

Texas Chainsaw Massacre (1974)

எட் கீன் (ED GIEN) என்பவர் 90 களின் ஆரம்பத்தில் வாழ்ந்த அமெரிக்க கொலைகாரர். இவர் கொலை தவிர, பெண்களின் உடல்களை சேகரிப்பதும், மனித உடல்களிலிருந்து பல்வேறு பொருட்களை உருவாக்குவதுமான கொடூர மனம் கொண்டவர். இந்த குணத்தை அடிப்படையாகக் கொண்டு 1974 ஆம் ஆண்டு வெளியான “டெக்சாஸ் செயின்சா மெசேகர்” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான லெதர்ஃபேஸை உருவாக்க வழிவகுத்தது. ஒரு கொலைகார சம்பவத்தைச் சுற்றி வரும் இந்த படம், பேய் பட கலாசாரத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்க வழிவகுத்தது.

 

Veronica (2017)

வெரோனிகா சமீபத்தில் வெளிவந்த சிறந்த நெட்ஃபிக்ஸ் திகில் திரைப்படங்களில் ஒன்றாகும். படத்தை கடைசி வரை பார்க்க மிகவும் பயமாக இருக்குமென சிலர் கூறுகிறார்கள். ஓயீஜா போர்டுடன் விளையாடும் ஒரு பெண் தற்செயலாக ஒரு தீய சக்தியை எழுப்புகிறாள். அதிலிருந்து, அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தொல்லைகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுடன் படமாக்கப்பட்ட இந்த படம் 1990 களில் எஸ்டீபானியா குட்யர்ரெஸ் என்ற ஸ்பானிஷ் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.

 

The Exorcist (1973)

உலகின் சிறந்த திகில் படமாக தி எக்ஸார்சிஸ்ட் படமாகவும் பலரால் கருதப்படும் இது சர்ச்சைக்குரிய படமாகும். இது ஒரு சர்ச்சைக்குரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் உண்மையான கதை 1949 இல் அமெரிக்காவில் 14 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட ஒரு மர்மமான சம்பவமாகும். அதில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஒரு தீய ஆவியின் செல்வாக்கின் கீழ் இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கிறது. இருப்பினும், படத்தில் காட்டப்பட்டது ஒரு பையனை அல்ல, அதற்கு பதிலாக அமானுஷ்ய சக்திகளின் செல்வாக்கின் கீழ் இருக்கும் ஒரு பெண் குழந்தையையே காட்டுகின்றனர்.

 

A Nightmare on Elm Street (1984)

குழந்தைகளின் கனவுகளுக்குள் நுழைந்து அவர்களின் கனவுகளில் அவர்களை கொடுமை செய்யும் தொடர் கொலைகாரன் ஃப்ரெடி க்ரூகர் பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். எ நைட்மேர் ஒன் எல்ம் ஸ்ட்ரீட் என்ற ஃப்ரெடி க்ரூகரின் கொலை குறித்து ஏராளமான படங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் உண்மையான படம், 1984 உருவான படத்தில் உண்மை கதையை ஓரளவிற்கு அடிப்படையாகக் கொண்டது. படத்தின் இயக்குனர் வெஸ் க்ராவன் மரண சம்பவம் குறித்த ஒரு செய்திக்கட்டுரையைப் படிக்கிறார். அது தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் மரணத்தைப் பற்றியது, யாரோ ஒருவன் தூக்கத்தில் அந்த குழந்தையை கொல்ல வருகிறான். ஒரு நாள், சிறுவன் தூங்க செல்ல பயந்து கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டான். அதுதான் அந்த சிறுவனின் கடைசி தூக்கம். அச்சிறுவனின் பெற்றோர் அறையில் தேடி பார்த்துவிட்டு சிறுவன் இறந்துவிட்டதைப் பார்க்கிறார்கள். வெஸ் க்ராவன் இந்தச் செய்தியைக் கேட்டு, ” எ நைட்மேர் ஒன் எல்ம் ஸ்ட்ரீட்” என்ற படத்தை உருவாக்கினார்.

 

The Amityville Horror (1979)

அமிட்வில் ஹாரர் எனும் திகில் திரைப்படம் மிகவும் பிரபலமாகி, அதன் தொடர்ச்சியான படங்கள்கூட தயாரிக்கப்பட்டன. துஷ்ட சக்திகள் இருக்கும் ஒரு வீட்டிற்கு வசிக்க வரும் ஒரு குடும்பத்திற்கு நடக்கும் பிரச்சினைகள்தான் அமிட்டிவில் ஹாரர் எனும் இந்த படத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளாக பதிவாகியுள்ளன. 1975 ஆம் ஆண்டில் அமிட்டிவில்லுக்கு குடிபெயர்ந்த ஜோர்ஜ் மற்றும் கேத்லீன் லுட்ஸாஸின் குடும்பத்தினர்தான் இந்த பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. தொடரின் சமீபத்திய படம், தி அமிட்டிவில் மர்டர்ஸ் என்ற பெயரில்கூட வெளியாகின.

 

The Conjuring (2013)

CONJURING சமீபத்திய காலங்களில் மிகவும் பிரபலமான திகில் படங்களில் ஒன்றாகும். இருப்பினும் இந்த படம் இன்னும் தொடராகவே வந்து கொண்டிருக்கிறது. ஒரு மர்மமான ஆவியுடன் ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினதும், இந்த சக்திகளுடன் போராடும் ஒரு ஜோடியின் கதையும் படம் சித்தரிக்கிறது. படத்தின் கதாபாத்திரங்களான எட் மற்றும் லோரெய்ன் அமானுஷ்ய சக்திகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு நிஜ வாழ்க்கை தம்பதியினர். 1971 ஆம் ஆண்டில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்த திரைப்படம்.

 

When a Stranger Calls (2006)

இரண்டு இளம் குழந்தைகளை கவனிப்பதற்காக இரவில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் குழந்தை பராமரிப்பாளருக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தெரியாத ஒருவர் அவ்வப்போது இந்த வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகளைத் தொடங்குகிறார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வந்த பெண் முதலில் இந்த அழைப்புகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும், சில நாட்கள் கடந்து சென்றபோது, ​​அழைப்பாளர் தன்னையும் வீட்டிலுள்ள குழந்தைகளையும் தொந்தரவு செய்ய முயற்சிப்பதை உணர்ந்தாள். 2006 இல் வெளியான இந்தப் படம் 1950 களில் இருந்து வந்த உண்மை சம்பவம் ஆகும். ஜேனட் கிறிஸ்ட்மேன் என்ற 13 வயது சிறுமியே படத்தில் காட்டப்பட்டுள்ள துரதிஷ்டத்தினை அனுபவித்த உண்மையான கதாபாத்திரம்.