நூடில்ஸ் மற்றும் பாஸ்தாவை பயன்படுத்தி சுவையான உணவு தயாரிப்போம்

 

சாப்பிட்டு சமைத்து எஞ்சிய சோற்றை வைத்து செய்யக்கூடிய சுவையான உணவுகளின் ரெசிப்பீஸ் பற்றி இதற்கு முன்னர் பார்த்தோம். இன்று அப்படி சமைத்து எஞ்சக்கூடிய நூடில்ஸ் மற்றும் பாஸ்தாவை வைத்து செய்யக்கூடிய சுவையான உணவுகளை பற்றி பார்ப்போம். இனிமேல் வீணாக உணவு குப்பைக்கு போகாதென நம்புகிறோம். மேலும் ரெசிபி சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால் பேஸ்புக்கில் அல்லது வாட்ஸப் மூலம் தெரிவிக்கவும்.

 

பிரிடாடா

தேவையான பொருட்கள்

  • சமைத்த நூடில்ஸ் – 2 கப்
  • முட்டை -2
  • சீஸ் வெஜஸ் – 2
  • பிரஷ் பால் – 2 மேசைக்கரண்டி
  • பார்மேசன் சீஸ் (கெட்டியான சீஸ்)

 

  • முட்டைகளில் சீஸ் வெஜஸ்களையும் பிரஷ் பாலையும் சேர்த்து கலக்கவும். நூடில்ஸை ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும்.
  • கலந்த முட்டை கலவையை நூடில்ஸ் மீது ஊற்றி அதன் மேல் பார்மேசன் சீஸ் தெளிக்கவும்.
  • பேக் செய்வதாயின் 180 செல்சியஸில் 15-20 நிமிடங்கள் வைக்கவும் அல்லது பேன் ஒன்றில் சமைப்பதாயின் குறைந்த தீ அளவில் சுமார் 20 நிமிடங்கள் சமைக்கவும்.

 

நூடில்ஸ் புடின்

தேவையான பொருட்கள்

  • நூடில்ஸ் – 3 கோப்பை
  • முட்டை –
  • பிரஷ் பால் – 2 கோப்பை
  • சர்க்கரை சுவைக்கேற்ப
  • கேரமல் செய்ய தனியாக சிறிதளவு சர்க்கரை
  • வெணிலா – சிறிதளவு

 

  • நூடில்ஸை நன்கு நறுக்கவும். முட்டை மற்றும் சர்க்கரைக்கு பிரஷ் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கலந்த முட்டை கலவையில் நூடில்ஸ் மற்றும் வெணிலா சேர்க்கவும். பிறகு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து கொள்ளவும். அதனை ஒரு ஸ்டீம் செய்யக்கூடிய பாத்திரத்தில் அடியில் போட்டு கொள்ளவும்.
  • கலந்த கலவையை அதில் மேலாக சேர்த்து, ஒரு புடவையால் மூடி, ஸ்டீம் அல்லது பேக் செய்யவும். பேக் செய்வதென்றால் 200 செல்சியஸில் 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும்.

 

பிரைட் நூடில்ஸ் போல்ஸ்

தேவையான பொருட்கள்

  • சமைத்த நூடில்ஸ் – ஒரு கப்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
  • மொஸெரெல்லா சீஸ் (விரும்பினால்)
  • ருசிக்கேற்ப உப்பு, மிளகு
  • முட்டை – ஒன்று
  • கோதுமை மா – சிறிதளவு

 

  • மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துகொள்ளவும். சிறிய பந்துகளை செய்து சுமார் ஒரு மணி நேரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  • பின்னர் கொதிக்கும் எண்ணையில் நன்கு பழுப்பு நிறமாகும்வரை வறுக்கவும்.

 

நூடில்ஸ் கெசரோல்

தேவையான பொருட்கள்

  • சமைத்த நூடுல்ஸ்
  • தண்ணீர் வடித்த சிறிய செமன் டின்
  • பிரஷ் கிரீம் கப்
  • விருப்பமான சீஸ்

 

  • நூடில்ஸ், செமன் மற்றும் பிரஷ் கிரீம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் சீஸ் தூவி 180 டிகிரி செல்சியஸில் 180 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

நூடில்ஸ் நெஸ்ட்ஸ்

 

தேவையான பொருட்கள்

  • சமைத்த நூடில்ஸ் – 1 கப்
  • முட்டை – ஒன்று
  • தக்காளி சோஸ் – 3 மேசைக்கரண்டி
  • சீஸ் அல்லது மையத்தில் விருப்பமான கீமா அல்லது சம்பல் (கட்லெட் கீமாவையும் பயன்படுத்தலாம்)

 

  • நூடில்ஸில் கீமா கறியை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • நூடில்ஸ் கலவையை ஒரு மஃபின் கோப்பை தட்டில் வைத்து கோப்பையைச் சுற்றி வைக்கவும். 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் பேக் செய்த பின், கீமாவை வைத்து மீண்டும் 15 நிமிடங்கள் சுட வேண்டும்.