முக அழகை பேண இப்படியும் செய்வார்களா? –  வாசித்துவிட்டு அசந்துவிடாதீர்கள்

 

முக அழகை பராமரிக்க ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதற்காக விதவிதமான கிரீம் வகைகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. அத்தோடு, காலையில் டிவி ஷோக்களில் சிலர் வந்து அழகு பற்றி கூறுவதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த தொகுப்பை வாசித்தவுடன் இப்படியும் முகத்தை பராமரிக்கிறார்களாக என நீங்கள் பிரமித்துப் போவீர்கள்.

 

பாம்பு விஷம்

உலகின் பல நாடுகள் இப்போது முகத்திற்கு பயன்படுத்தும் கிரீமில் பாம்பு விஷத்தை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றன. கிளியோபாட்ரா பேரரசியும்  பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல அவர் ஒரு பேரழகி என்றும் அழைக்கப்படுகிறார். எனவே அவரும் இந்த பாம்பு விஷத்தை பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும், பாம்பு விஷம் முகச்சுருக்கங்களை இழக்கச்செய்து இளமை தோற்றத்தை அளிக்கிறது. பாம்பு கடித்தால் தசை முடக்கம் ஏற்படுகிறது. ஆனால் இங்குள்ள கதை கொஞ்சம் வித்தியாசமானது.

 

எறும்பு பொடிவோஷ்

இதை கேட்டுவிட்டு அடிக்கடி செய்து பார்க்க வேண்டுமென்று உயிரோடுள்ள எறும்பை எடுத்து போட்டு செய்துவிட வேண்டாம். இது இறந்த எறும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பொடிவொஷ் பற்றியது. எண்ணெய் சருமம் உள்ள நிறைய பேர் எறும்பு பொடிவொஷ் மூலம் வெற்றிகரமான முடிவுகளைப் பெற்றுள்ளனர். எறும்பின் உடலில் ஒரு அமிலம் உள்ளது. அது நமது சருமத்துடன் இணைந்தால், எண்ணெய் தன்மையைக் குறைப்பதோடு ஆற்றலின் கூடுதல் ஊக்கத்தையும் இது தருகிறது. உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக வேலை செய்கிறது.

 

மாட்டின் விந்தணுக்கள் (ஸ்பெர்ம்ஸ்)

விரும்பத்தகாதது என நாம் நினைத்தாலும் பல நாடுகளில் அவை வலுவான, ஆரோக்கியமான, நீண்ட மற்றும் பளபளப்பான முடியைப் பெறப் பயன்படுகின்றன. துர்நாற்றம் இல்லை என்றாலும் அவற்றை பாவிக்கும் போது ஒரு அறுவறுப்பை அளிக்காதா? அது என்னவென்றால் பரிந்துரைக்கப்பட்ட மாடுகளின் விந்தணுக்களே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதன் பயன் என்னவென்றால் தலையில் வைத்த பிறகு விந்தணு சருமத்ததுடன் கலந்து எண்ணெய் தன்மையை இல்லாமல் செய்கிறது. நம் நாட்டில் இது பொதுவானதல்ல என்றாலும், இந்த ஓர்கான் எண்ணெய் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 

பன்றியின் கருப்பை

ஆம், இது ஜப்பானில் குடிக்கப்படும் ஒரு பானமாகவும் உள்ளது. இந்த பானம் அருந்துவது ரெட்புள் ஒன்றை குடிப்பது போல் உணரச்செய்யும். பொதுவாக கருப்பை கரோட்டின் புரதங்கள் நிறைந்துள்ளது. உண்மையில், உள்ளிருக்கும் ஒரு சிறு குழந்தைக்குக்கூட தனியாக உணவளிப்பது இந்த கருப்பை தானே. இந்த கருப்பை பானம் இளைஞர்களை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் என்று ஜப்பானியர்களால் நம்பப்படுகிறது.

 

பறவை எச்சம்

ஜப்பான் ஒரு விசித்திரமான நாடு. அதனால்தான் பன்றிகளிடமிருந்து பறவைகள் கழிவிற்கும் வந்துள்ளனர். இவை எங்களுக்கு வீடுகளில் செய்வது மிகவும் கடினம். ஏனென்றால் இந்த பறவைக்கழிவு பேஸ்பெக்காக மாறுவதற்கு சில இரசாயன செயல்முறைகளை கையாள வேண்டியுள்ளது. இதனை கெய்ஷா பெண்கள் கடந்த காலங்களில் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்கள். என்னவாயினும் இவை முகங்களில் பூசியவுடன் உண்மையில் அற்புதமான முடிவுகளை தருகிறது. தோல் மென்மை, சுருக்கம் மற்றும் இளமை தோற்றத்திற்கான வெற்றிகரமான சிகிச்சையாக இது உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

 

நத்தை மசாஜ்

இதைப்போன்ற மசாஜ்களை கேட்டதும், கொஞ்சம் பால் தேய்த்து மசாஜ் செய்து மகிழ்வது சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம். நத்தை மசாஜ் சுரப்பு, தோல் சுருக்கங்கள், வறட்டு தோல் பிரச்சினைகள் மற்றும் வயதான தோல் பிரச்சினைகள் அனைத்தையும் போக்க உதவுகிறது. இந்த விஷயங்கள் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்படுவதால் பயப்பட ஒன்றுமில்லை. கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கும்.

 

அட்டைப்பூச்சி மசாஜ்

மனிதர்கள் தமது முகத்தை அழகாக மாற்றுவதற்காக ஒரு சிறிய இரத்த தானம் செய்கிறார்கள். அதாவது ஒரு வகை அட்டைப்பூச்சிகளை முகத்தில் வைத்து இரத்ததானம் செய்கின்றனர். இங்கே அவை இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சிறிது நேரம் கழித்து, முழு சருமமும் இரத்தமாக மாறும். இந்த செயல்முறை சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது. அட்டைப்பூச்சி மருந்து பல வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது. தோல் நோய்களை குணப்படுத்துவதில் இது மிகவும் பிரபலமானவை.