கருவளையங்களுக்கு வீட்டிலேயே மருந்து

 

முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கருவளையங்கள் வந்தால் அந்த அழகே குறைந்துவிடும். ஆரம்பத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வரவில்லை என்றாலும், தற்போதைய சிக்கலான சமூக அமைப்பில் எமது உடலுறுப்புகளில் பல கறுப்பாக மாறிவிடுகின்றன. அவற்றில் கண்களுக்கு கீழாக கருவளையங்கள் வருவதும் ஒன்றாக உள்ளது. சரியாக தூங்காமல் தொடர்ச்சியாக வேலைசெய்வோர் இந்த சிக்கலை எதிர்நோக்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சில வழிமுறைகளை இன்று பார்ப்போம்.

 

தக்காளி பேஸ்ட்

இதை தயாரிக்க ஒரு தக்காளியை எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு தக்காளியைப் பிடித்து அரைக்கவும். எப்படியாவது ஒரு கரண்டிக்கு போல செய்து எடுத்துக்கொண்டால் போதும். அதில் 2 டீஸ்பூன் கடலைமாவும் 1/2 டீஸ்பூன் தேசிப்புளியும் சேர்க்கவும். இதை நன்கு கலந்ததும், தக்காளி பேஸ்ட் ரெடியாகிவிடும். அதை எடுத்து கண்களின் கீழ் உள்ள வளையங்களில் சுமார் 10 நிமிடங்கள் தேய்த்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

தோடம்பழச்சாறு மற்றும் பாதாம்

முதலில், ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில் கிளிசரின் ஒரு டீஸ்பூன் சேர்த்து, பஞ்சு துண்டொன்றினால் கண்ணைச் சுற்றிக் கொள்ளுங்கள். சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் குளிரான பாலை ஒரு பஞ்சால் முன்பு செய்தது போல நனைத்து தடவவும். இதையும் ஐந்து நிமிடங்கள் செய்து வைத்து விட வேண்டும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயை விரலில் எடுத்து கண்களைச் சுற்றி தேய்க்கவும். எழுந்து மறுநாள் காலையில் தான் கழுவ வேண்டும். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் செய்ய வேண்டும்.

 

சில்வர் கரண்டி

இரண்டு சில்வர் கரண்டிகளை எடுத்து பிரிட்ஜில் ஒரு இரவு வைத்து எடுத்து, அடுத்த நாள் காலையில் இரண்டு கரண்டியையும் கண்களில் வைத்து ஒரு நிமிடம் காத்திருங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் இப்படி செய்து பாருங்கள்.

 

தேயிலை தூள்

இதற்கு தேநீர் பைகளையும் பயன்படுத்தலாம் அல்லது தேநீறிற்கு பயன்படுத்தி முடித்த மீதமுள்ள தூளை எடுத்து சுத்தமான கோட்டன் துணியொன்றில் வைத்து கண்களில் வைக்கலாம். சுடசுட வடித்தெடுத்த தேயிலையை கண்களில் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக நன்கு வடித்து சூடாறிய தேயிலையை வைக்கவும்.

 

ஐஸ் கியூப்ஸ்

ஏதாவது ஒரு துணியொன்றினால் ஐஸ் க்யூப்பை மூட வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு இரவும் சுமார் ஐந்து நிமிடங்கள் கண்களில் வைத்து வைத்து எடுக்கவேண்டும். இது கறுப்புத்தன்மையை குறைப்பது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கத்தையும் குறைக்கிறது. நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முகத்தில் மேக்கப் இல்லாத சந்தர்ப்பத்தில் தான் தோலில் செய்யப்பட வேண்டும்.

 

கற்றாழை (aloe vera)

நீங்கள் கற்றாழை செடியின் ஒரு பகுதியை எடுத்து, உட்புற சதைப்பகுதியின் இரண்டு பகுதிகளாக வெட்டி அதில் உள்ள ஜெல்லியை, தூங்குவதற்கு முன் சருமத்தில் தேய்க்க வேண்டும்.

 

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை முழுமையாக வெட்டி கண்ணின் மடல்களின் மேல் வைக்கவும். அல்லது உங்கள் கண்களுக்கு மேல் பாதியாக வெட்டிய வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையங்கள் உள்ள இடங்களில் வைக்கவும். எப்படியாயினும் சுமார் 20 நிமிடங்கள் வரையாவது வைத்திருக்க வேண்டும்.