வெவ்வேறு பெயர்களைக் கொண்ட பல்வேறு டெஸ்க்டொப் இயக்க முறைகள் உள்ளன. லினக்ஸ் என்கிற பெயரின் கீழ் பல இயக்க முறைமைகளும் மற்றும் APPLE இன் IOS ஆகியவற்றின் கீழ் இயக்க முறைமைகள் இருந்தாலும், WINDOWS என்பது தான் பிரபல இயக்க முறைமையாக உள்ளது. WINDOWS இப்போது பல ஆண்டுகளாக ஒரு சக்திவாய்ந்த இயக்க முறைமையாக உள்ளது. குறிப்பாக WINDOWS 10 உடன் வெளிவந்துள்ள புதிய அம்சங்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.
ஸ்டார்ட் மெனு
விண்டோஸ் 8 டைல் மெனுவுடன் வருகிறது. விண்டோஸ் 10 இல், பழைய XPக்களை விட சக்தி வாய்ந்த ஸ்டார்டிங் மெனுவைக் கொண்டுள்ளன. இதன் மூலம் கடைசியாக வேலை செய்த அப்ளிகேஷனைக்கூட விரைவாகக் கண்டுபிடிக்கலாம். அதே போல பயனர்களின் வசதியை மேலும் வலுப்படுத்தி பக்கத்திலிருந்து திறக்கும் டைல் மெனு மூலம் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷனை விரைவாக தேர்ந்தெடுக்கலாம்.
எட்ஜ் பிரவுசர் (EDGE BROWSER)
இப்பொழுதெல்லாம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்த போதுமான நபர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நம்மிடம் இருந்து இது விலகிச்சென்றுள்ளது. இதன் விளைவாகவே, சமீபத்தில் வந்த விண்டோஸ் 10 இல் BROWSER ஆக EDGE BROWSER வந்துள்ளது. இந்த எட்ஜ் மிகவும் வேகமாக உள்ளது. எட்ஜ் மொடர்ன் வெப் உண்மையில் நாம் செய்யும் வேலைகளை மிகவும் இலகுப்படுத்தி தருகிறது. பயனர் இதனை விரும்பினால், அவர்கள் கூகிள் க்ரோம் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸுடன் எளிதாக இணைத்து வேலை செய்யலாம்.
HI, I’M CORTANA
APPLE கம்பனியை போலவே GOOGLE உம் தமது குரல் கட்டளை (VOICE ASSISTANT)ஐ உருவாக்கியது. அண்ட்ராய்ட் தொலைபேசிகளில் கூகிளிடம் நேரடியாக VOICE ASSISTANT இடம் கேட்பதன் மூலம் தேடல்களை இலகுவாக தீர்க்க முடியும். MICROSOFT நிறுவனத்தின் Desktop கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் CORTANA என்ற VOICE ASSISTANT அம்சத்துடன் வந்துள்ளன. கணினி மற்றும் இணையத்தில் உள்ள எதையும் பற்றி இது எங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. மேலும், கடந்த பதிப்புகளுடன் ஒப்பிடும்போது விண்டோஸ் இந்த குரல் கட்டளை செயற்பாட்டை மேலும் மேம்படுத்தியுள்ளது.
மல்டிபிள் விண்டோ (MULTIPUL WINDOW)
ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யத் தொடங்கினால், அவை அனைத்தையும் எங்களால் செய்து முடிக்க முடியாது. சில நேரங்களில் நாம் நிறைய WINDOWS களை ஓபன் செய்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங் மற்றும் எடிட்டிங் சம்பந்தமான வேறு சிலவற்றையும் இயக்க விரும்புவோம். அந்த சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே விண்டோஸ் 10 பல Desktopகளில் எளிதாக வேலை செய்ய உங்களை அனுமதிக்கிறது.
அக்க்ஷன் சென்டர் (ACTION CENTER)
அப்ளிகேஷன்களில் மொபைல் மூலம் வேலை செய்யும் போது நமக்கு வரும் அடிப்படை விஷயங்களில் ஒன்றுதான் நோட்டிபிகேஷன் ஆகும். செய்தி சேனலிலிருந்து வரும் நோட்டிபிகேஷன், வானிலை அப்ஸ்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷன்ஸ்மற்றும் சமீபத்தில் கொரோனா சம்பந்தமான நோட்டிபிகேஷன்ஸ் நம்மிடையே பிரபலமாகி உள்ளன. இதன் அடிப்படையில், பயனர்க்கு ஆக்க்ஷன் சென்டர் மூலம் வைஃபை நிலை, பேட்டரி, லொகேஷன் போன்ற நோட்டிபிகேஷன்களைப் பார்க்கலாம்.
டேப்லெட் மோட் (TABLET MODE)
விண்டோஸ் 10 ஆனது 2015 இல் வெளியிடப்பட்டபோது, பெரும்பாலான டெஸ்க்டொப் கணினிகள் டச்ஸ்கிறீன் பயன்பாட்டை எதிர்பார்த்திருந்தன. இன்றும் சிலர் டச்ஸ்கிறீன்களுடன் கூடிய மடிக்கணினிகளை விரும்புகிறார்கள். இதன் மூலம், விண்டோஸ் 10 டச் ஸ்கிரீன் லெப்டோப்களுக்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இதன் மூலம் மவுஸ் மற்றும் டச் பேடுகள் கொண்டு விண்டோஸ் டேப்லெட் பயன்முறையுடன் டச் ஸ்கிரீனுடன் பணியாற்றலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்
விண்டோஸ் இயக்க முறைமையைப் பயன்படுத்தும் போது, கூடுதல் பாதுகாப்புக்காக வைரஸ் கார்டை அதில் சேர்ப்பது அவசியம். உங்களிடம் ஒரிஜினல் விண்டோஸ் 10 இயக்க முறைமை இருந்தால், வைரஸ் கார்ட் தேவையில்லை. VOICE ASSISTANT, FACE RECOGNITION, WEB CAM, FINGERPRINT போன்றவை மேம்படுத்தப்பட்டு கணினி பாதுகாப்பை உறுதிப்படுத்த விண்டோஸ் 10 காப்புப்பிரதி எடுக்கப்பட்டுள்ளது.