சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசியாக மாறிய பெண்கள்

 

நம் நாட்டு வரலாற்றைப் பற்றி படிக்கும்போது உயர்குலத்து வம்சம் என்ற ஒரு விடயத்தைப் படித்திருப்போம். அதாவது பெற்றோர் இருவரும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் உயர்வம்சமாக கருதப்படும். எளிமையாகச் சொன்னால், பெற்றோர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அடுத்த ராஜாவாக இருப்பதற்கு ஒரு மகனுக்கு உரிமை கிடைக்கும். அத்தகைய பிரச்சினைக்கு உதாரணமாக தாதுசேனா காசியப்பனின் மோதலை உதாரணம் காட்டலாம். இதேபோல், அசோகமாலா என்ற அழகான பெண்ணை திருமணம் செய்ததால் இளவரசர் சாலியா தனது அரசாட்சியை இழந்தார் அதையும் கூறலாம். ஆனால் இப்போது உலகம் முற்றிலும் மாறிவிட்டது. இன்று, ஒரு சாதாரண பெண்கூட ராணியாக முடியும். அப்படி சாதாரணமாக பிறந்து அரசாட்சியில் கால்வைத்த சில பெண்கள் தொடர்பான இன்றைய கட்டுரையில் பார்ப்போம்.

 

மசாகோ பேரரசி

நீண்டகாலமாக ஜப்பானை ஆட்சி செய்த பேரரசர் அகிஹிடோ அந்த பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்தார். அதன்படி, அவரது மூத்த மகன் இளவரசர் நரஹிடோ முடிசூடப்பட்டார். நரஹிடோ பேரரசரானபோது ஜப்பானின் பேரரசியாக மசாகோ மாறினார். ஆனால் அவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரல்லர். அவரது தந்தை ஒரு இராஜதந்திரி. இளவரசி மசாகோவின் இலட்சியம் அப்பாவைப் போலவே தானும் அரச சேவை செய்ய வேண்டும் என்பதே. ஜப்பானிய கிரீடத்திற்கு  உரித்தான இளவரசர் நரஹிடோ ஒரு தேநீர் விருந்தில் இவரை சந்திப்பதால் அது அனைத்தும் மாறுகிறது. பல சந்தர்ப்பங்களில், நரஹிடோவின் காதல் அழைப்புகளை அவர் நிராகரிக்கிறார். இருப்பினும், நரஹிடோவின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.  ஆரம்பகாலத்தில் இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் ஜப்பானில் சில கருத்துக்கள் நிலவின. இதனால் அவர் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். ஆனால் அந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், நரஹிடோ அவளுக்கு நெருக்கமாகவே இருந்துள்ளார். பிற்காலத்தில் அவர்களுக்கு ஐகான் என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள். இருப்பினும், ஜப்பானிய சட்டத்தின்படி, நரஹிடோவிற்கு பிறகு அவருக்கு முடிசூட முடியாது. அதனால் நரஹிடோவிற்குப் பிறகு அவரது சகோதரர் மற்றும் அவரது குழந்தைகளே முடிசூட்டப்படுவார்கள்.

 

சுதிடா ராணி

தற்போதைய தாய்லாந்தின் மன்னர் வஜிரலோங்கொன் மிகவும் சர்ச்சைக்குரிய நபர். அவர் அவ்வப்போது செய்திகளில் சிக்கிக்கொள்வார். உதாரணமாக, கொரோனா தொற்றுநோய் காலத்தில் ​​அவர் தனது பெண் உதவியாளர்களின் குழுவுடன் ஒரு கப்பலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் பெண்களின் மீது அதிகம் ஈர்ப்பு கொண்டவரென கருதப்படுகிறார். அவர் முதலில் தனது தாயின் பரம்பரையிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவளை விவாகரத்து செய்த பிறகு, அவர் ஒரு நடிகையை மணந்தார். ஆனால் அந்த திருமணம் தோல்வியடைந்த பிறகு, அவர் ஒரு சாதாரண பெண்ணை தேர்வு செய்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் அவர் திருப்தியடையவில்லை. பின்னர் அவர் தனது மனதை பாதுகாப்புப் படையின் முன்னணி பெண் சிப்பாய் சுதிடா டிஜாய் பக்கம் திருப்புகிறார். ஒரு சாதாரண தாய்லாந்து குடும்பத்தைச் சேர்ந்த சுதிடா இப்போது ராணியாகிவிட்டார்.

 

ராநியா ராணி

குவைத்தில் வசிக்கும் ஒரு பாலஸ்தீனிய குடும்பத்தில் ரானியா அல்-யாசின் பிறந்தார். ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அவருடைய பெற்றோர் அவரை உயர் கல்விக்காக எகிப்திய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார்கள். பிறகு வங்கியில் விற்பனை ஊக்குவிப்பு பகுதியில் வேலை கிடைத்ததால் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஜோர்டானுக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் அவர் அந்நிறுவனத்தின் ஜோர்டான் கிளையில் சிறிது காலம் வேலை செய்தார். இதற்கிடையில், அவர் ஒரு விருந்தில் ஜோர்டானின் இளவரசராக இருந்த இளவரசர் அப்துல்லா அல் ஹுசைனை சந்தித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இளவரசர் அப்துல்லா அந்த நேரத்தில் ஜோர்டான் மன்னராக இருந்த ஹுசைன் மன்னரின் மூத்த மகனாவார். ஆனால் அரசியலமைப்பு விதிகளின்படி, ஹுசைன் மன்னரிற்கு பின்னர் அவரது சகோதரரான ஹசனிற்கே மன்னர் பதவி உரித்தாகும். ஆனால் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஹுசைன் மன்னர் சட்டத்தை மாற்றி கிரீடத்தை அப்துல்லாவிடம் ஒப்படைத்தார். 1999 இல், தனது 37ஆவது வயதில் அப்துல்லா ராஜாவாகவும், பின்னர் 29 வயதான ராநியா உலகின் இளைய ராணியாகவும் முடிசூடிக்கொண்டனர்.

 

லெடிசியா ராணி

ஸ்பெயினின் இளவரசர் பிலிப் தனது காதலி குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியபோது ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. ஏனென்றால் அவள் அப்போது விவாகரத்து பெற்றவள். அவள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். அவரது தந்தை ஒரு பத்திரிகையாளர் மற்றும் அவரது தாய் ஒரு செவிலியர். ஆனால் அவர்களது திருமணம்கூட விவாகரத்திலேயே முடிந்தது. பிரபல ஸ்பானிஷ் தொலைக்காட்சி நிறுவனங்களின் நிருபராக பணியாற்றியதால் லெடிசியா ஏற்கனவே ஸ்பெயினில் பிரபலமாக இருந்தார். கத்தோலிக்க பெரும்பான்மை நாடான ஸ்பெயினில், விவாகரத்து பெற்ற பெண் வருங்கால ராணியாக இருப்பதை விரும்பவில்லை. இருப்பினும், அவரது முதல் திருமணம் ஒரு தேவாலயத்தில் நடைபெறாததால், கத்தோலிக்க திருச்சபையில் திருமணம் செல்லுபடியானதாக கருதப்படவில்லை. 2014 ஆம் ஆண்டில், பிலிப்பின் தந்தை ஆட்சியை பிலிப்பிடம் கொடுக்கவே, லெடிசியா ஸ்பெயினின் ராணியானார்.

 

ராணி மெடில்டா

பெல்ஜியம் நெதர்லாந்திலிருந்து சுதந்திரம் பெற்று பல நூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனாலும் 2013 ஆம் ஆண்டில்தான் பெல்ஜியம் பெண் ராணி பட்டத்தை அறிமுகம் செய்தது. அவர் பெல்ஜியத்தில் இரண்டாம் தர பிரபுத்துவத்தைச் சேர்ந்தவர். முடிக்குரிய இளவரசர் பிலிப் ஒரு வெளிநாட்டு வம்சத்திலிருந்து திருமணம் செய்து கொள்ளும் அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை மீறி மெடில்டாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதே நேரத்தில், இரண்டாம் ஆல்பர்ட் மன்னர் மெடில்டாவின் குடும்பத்தை நாட்டின் முதல் தரவரிசை பிரபுத்துவத்திற்கு உயர்த்தினார். திருமணத்திற்கு முன்பு, அவர் பேச்சு சிகிச்சையாளராக பணிபுரிந்தார். மேலும் அவர் ஒரு உளவியல் பட்டதாரியாவார்.

 

மாக்சிமா ராணி

அர்ஜென்டினா அரச குடும்பத்தில் பிறந்த இவருக்கு சராசரி அர்ஜென்டினா குழந்தைகளைவிட சிறந்த குழந்தைப் பருவம் காணப்பட்டது. ஏனெனில் அவரது தந்தை அப்போது அர்ஜென்டினாவை ஆண்ட சர்வாதிகாரியின் நெருங்கிய அரசியல் நட்பு கொண்டவர் என்பதனால் ஸ்பெயினில் நடந்த ஒரு விழாவின் போது, ​​அவர் தனது வருங்கால கணவரை நெதர்லாந்தின் இளவரசர் வில்லியம் அலெக்சாண்டரை சந்திக்கிறார். ஆனால் முதல் சந்திப்பில் அவள் நெதர்லாந்தின் அரசில் தொடர்புபடுவாள் என்று தெரியவில்லை. அவர் தன்னை அறிமுகப்படுத்திய முதல் நேரத்தில் அவர் கிண்டலாக இருந்தார் என்று அவள் சந்தேகிக்கிறாள். ஆனால் அவள் உண்மையை பிறகே உணர்ந்தாள். அவரது தந்தையின் அரசியல் வரலாறு நெதர்லாந்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும், மாக்சிமாவின் தந்தை அவர்களின் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று அர்த்தமல்ல. 2013 இல் வில்லியம் அலெக்சாண்டரின் தாயார் ராணி பீட்ரைஸ் இறந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நெதர்லாந்து ஒரு ராஜாவைப் பெற்றது. (அதற்கு முன், மூன்று ராணிகள் நெதர்லாந்தை ஆண்டனர்). இதன் மூலம், மாக்சிமா உலகின் முதல் அர்ஜென்டினா ராணியாக ஆனார்.

 

சோன்ஜா ராணி

சோன்ஜா நோர்வேயில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை நோர்வேயில் நன்கு அறியப்பட்ட ஜவுளி வணிகர். 1959 இல் ஒரு விருந்தில், அவர் அப்போதைய நோர்வே இளவரசர் ஹரோல்ட்டை சந்திந்தார். அவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தாலும் அவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது உறவு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இளவரசர் ஹரோல்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் அவரை டேனிஷ் அல்லது ஸ்வீடிஷ் அரச குடும்பங்களைச் சேர்ந்த இளவரசியை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் அதனை மறுத்தார். சோன்ஜாவை திருமணம் செய்ய முடியாவிட்டால் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மிரட்டினார். இறுதியாக, ஹரோல்ட்டின் தந்தை, மன்னர் ஐந்தாம் ஓலோவ் வெவ்வேறு தரப்பினர்களுடன் பேசி அவர்களுக்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கினார். கிங் ஓலோவின் மரணத்திற்குப் பிறகு, ஹரோல்ட் மற்றும் சோன்ஜா நாட்டின் மன்னராகவும் ராணியாகவும் மாறினார்கள்.