குறைந்த மூலப்பொருட்களுடன் சுவையான 7 இனிப்புகள்

 

பெரும்பாலான மக்கள் இனிப்பு வகைகளுக்கு பெருமளவு நேரத்தை செலவழிப்பதில்லை. ஐஸ்கிரீம், வாழைப்பழம் அல்லது பழக்கலவையை பொதுவாக சாப்பிடுவார்கள். அவற்றை பயன்படுத்தி இனிப்புகளை தயாரிப்பதற்கு யாரும் பெரிதளவில் நேரம் செலவழிப்பதில்லை. அதனால் லைபீ தமிழ் உங்களுக்கு மூன்று பொருட்களை மாத்திரம் வைத்து செய்யக்கூடிய இனிப்பு வகைகள் தொடர்பில் இன்று தகவல் கொண்டுவந்துள்ளது.

 

ப்ரோசன் சொக்கலேட் பனானா

வெறும் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு பதிலாக இதனை செய்து சாப்பிட்டு பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

 • பழுத்த வாழைப்பழம்
 • குக்கின் சாக்லேட் – 2 கோப்பை
 • சிறிது சிறிதாக நறுக்கிய கஜூ

 

 • ஒரு பாத்திரத்தில் சொக்லேட்டை போட்டு குறைந்த சூட்டில் கரைக்கவும். வாழைப்பழத்தை அந்த சொக்லேட்டில் போட்டு எடுத்து பிறகு கஜூவை அதன் மேலே தூவி 30 நிமிடங்கள் வரை பிரிட்ஜில் வைக்கவும்.

 

சோர்ட்ப்ரெட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்

 • தூளாக்கிய சர்க்கரை – 1/2 கப்
 • பட்டர் – 220 கிராம்
 • மா – 2 கப்

 

 • பட்டர் மற்றும் சர்க்கரை கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறி, மாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு மென்மையான கலவையை உருவாக்கவும். ஒயில் பேப்பரை ஒரு தட்டில் போட்டு குக்கீ ரவுண்டில் வைக்கவும்.
 • 170-180 செல்சியஸ் வரை ஒரு சூடான அவனில் 20-25 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

ஒரேஞ் சொர்பே

சூடான காலத்தில் சாப்பிட ஏற்ற ஒரு இனிப்புணவே இது.  இதை வெனிலா ஐஸ்கிரீமுடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

 • ஆரஞ்சு சாறு – 2 கப்
 • அரை கப் மற்றும் 2 மேசைக்கரண்டி சர்க்கரை
 • உப்பு – 1/2 தேக்கரண்டி

 

 • எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, சர்க்கரையை நன்றாக கரைத்து, அந்த கலவையை சிப்லொக் பையில் போடவும். நொறுக்கப்பட்ட ஐஸ் கியூப் கொண்ட ஒரு பையில் இந்த பையையே போட்டு வேகமாக குலுக்கவும்.
 • கலவை கட்டியானதும், அதை பிரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது எடுத்து சாப்பிடலாம்.

 

சொக்கலேட் மூஸ்

தேவையான பொருட்கள்

 • கோகோ தூள் – 2 மேசைக்கரண்டி
 • விபின் கிரீம் – 1 கோப்பை
 • உப்பு

 

 • எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கட்டியாகும் பதார்த்தம் வரை கலக்கவும். உடனடியாக சாப்பிடவும் அல்லது பிரிட்ஜில் வைத்து வைத்து சாப்பிடவும்.

 

மா இல்லாத சொக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

 • முட்டைகள் – 8
 • நறுக்கிய குக்கிங் சொக்லேட் – 450 கிராம்
 • பட்டர் – 220 கிராம்

 

 • முட்டைகளை நன்கு அடித்து எடுத்துகொள்ளவும்.
 • சொக்கலேட் மற்றும் பட்டரை டபுள் பொயில் செய்து உருக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிது ஆறவிட்டு, முட்டை கலவையில் அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். ஒரு தட்டையான கரண்டியால் ஒரு பக்கமாக சரித்து கிளறவும். பட்டர் தேய்த்த கேக் தட்டில் அதை போடவும்.
 • 170-180 செல்சியஸ் வரை அவனில் வைத்து 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

 

சொக்லேட் மெக்ரூன்ஸ்

தேவையான பொருட்கள்

 • உலர்ந்த டெஸிகேடட் தேங்காய் – 5 1/3 கப்
 • சிறிய மில்க்மேட் டின்
 • வெணிலா அசன்ஸ் – ஒரு மேசைக்கரண்டி

 

 • எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு கலக்கி, அவற்றை சிறிய சிறிய பந்துகளாக ஒயில் பேப்பரில் போட்டு பேக்கின் தட்டில் வைத்து, சுமார் 15-18 நிமிடங்கள் வரை 170 செல்சியஸ் வரை அவனில் பேக் செய்து எடுக்கவும்.

 

புரூட் டார்ட்

தேவையான பொருட்கள்

 • பேஸ்ட்ரி ஷீட்
 • அன்னாசி / ஸ்ட்ரோபெரி / ஆப்பிள் போன்ற பல பழங்கள் கலந்த கலவை – 450 கிராம்
 • சர்க்கரை ஒரு மேசைக்கரண்டி

 

 • பேஸ்ட்ரி ஷீட்டை 12 முதல் 12 அங்குலமாக நீட்டி அரை அங்குலமாக மடியுங்கள். ஒயில் பேப்பரில் அதை போட்டு ஒரு தட்டில் வைத்து, பழ துண்டுகளை நடுவில் நறுக்கி போட்டு, சர்க்கரையை மேலே தூவவும்.
 • கரைத்த சர்க்கரையை பேஸ்ட்ரியைச் சுற்றி சிறிதளவு தேய்க்கவும். 200 செல்சியஸில் 18-20 நிமிடங்கள் வரை அல்லது பேஸ்ட்ரி கலரிற்கு வரும் வரை பேக் செய்யவும்.