ஏதேதோ வேலை செய்தவர்கள் இந்த கொரோனா காலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதை கண்டிருப்பீர்கள். வயதான பின்னர் எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகளை கேட்டால், ஒரு நல்ல நிலத்தை வாங்கி அதில் பயிர்ச்செய்கை செய்ய வேண்டுமென கூறுவார்கள். நகர வாழ்க்கையில் பணத்தை சேமித்துக்கொண்டு, கிராமங்களுக்குச் சென்று பயிர்ச்செய்கை செய்ய வேண்டும் என்பது பலரது எண்ணமாக உள்ளது. மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ பயிர்ச்செய்கையும் வழிவகுக்கும். சிறு தோட்டங்களை செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படாவிட்டாலும், பாரிய நிலங்களில் பயிரிடும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதுதொடர்பான சில விடயங்களை லைஃபீ தமிழ் இன்று கொண்டுவருகின்றது.
பயிர்ச்செய்கை தெரிவு
எமது நாட்டு ஏற்றுமதி பொருட்களில் பிரதானமான பயிர்செய்கை தேயிலையாகும். தேயிலை பயிர்ச்செய்கையில் பெரும்பாலானவை அரசு தேயிலை வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு பெரிய தேயிலை தோட்டத்தை வாங்குவது சாதாரணமான விடயமல்ல. சரியான முறைகளை கடைப்பிடிக்க தவறினால் சர்வ நாசமாகிவிடும். சில நேரங்களில் தேயிலை தோட்டக்காரர்களுக்கு வறுமை வரும்போது, தேயிலை தோட்டங்களை மலிவான விலையில் விற்கின்றனர். இதற்கு காரணம் குறிப்பிட்ட பயிர்ச்செய்கையில் போதிய அனுபவம் இல்லாமையாகும். அதிக வருவாயை பெற்றுத்தரும் பயிர்செய்கை என்றாலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகள், பசளையிடுதல் போன்றன மிகவும் அவசியமானவை.
அனுபவம் வாய்ந்த ஊழியர்கள்
தேயிலை பயிர்ச்செய்கை என்று வரும்போது, சரியான கொழுந்து இலைகளை பறிக்கும் வேலையாட்கள் வேண்டும். மரங்களை கத்தரிக்க வேலையாட்கள் தேவை. தென்னை பயிர்ச்செய்கை என்றால் தேங்காய் தோட்டத்தை பராமரிக்கவும் தேங்காய் பறிக்கவும் ஆட்கள் தேவை. ஒரு இறப்பர் பயிர்ச்செய்கை என்றாலும், அதை அறுவடை செய்ய ஆட்கள் வேண்டும். இவர்களுக்கான செலவு எளிதானதல்ல. இவற்றில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு சுமார் 2000 ரூபாய் செலுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதை விட முக்கியமானது. சகலவற்றையும் சிந்தித்து பயிர்ச்செய்கையை ஆரம்பியுங்கள்.
மேலாண்மை சந்தை
சந்தை எனும்போது அதில் பல வகைகள் உள்ளன. காய்கறி சந்தை என்றால் அதில் தேங்காய்களை விற்கும் சந்தை முறை அல்ல. உலகின் சிறந்த தொழில்நுட்பங்களுடன் நாம் பயிரிடப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு சந்தையில் மட்டுமே விற்க வேண்டும். வெளிநாட்டு சந்தையை குறிவைத்து பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தால் நிலைமை மோசமடையலாம். ஒரு பொருள் சந்தைக்கு வரும்போது, அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அதிக விலையில் விற்கும் காலம் ஏற்படும் அதே சந்தர்ப்பத்தில் மிகவும் மலிவாகி நட்டத்தில் விற்பனையாகும் காலமும் ஏற்படும். எனவே, பயிர்ச்செய்கையில் ஈடுபட முன்னர் அதன் சந்தை நிலைவரங்கள் உள்ளிட்ட சகல விடயங்களையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்.
நீர் மற்றும் ஏனைய வசதிகள்
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் யிர்ச்செய்கை இடம்பெறுகின்றன. நம் நாட்டில் பெரும்பாலும் சிறிய பயிர்ச்செய்கை நிலங்களிலேயே முன்னெடுக்கின்றோம். ஆனாலும் இந்த பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது எளிதல்ல. வலுவான நீர்ப்பாசன முறைகளைக் கொண்ட வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயிர்ச்செய்கை செய்ய முடியும். ஆனால் எல்லா விவசாயிகளுக்கும் அந்த வசதி இருப்பதில்லை. இதேபோல், சில தொலைதூர பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இருப்பதில்லை. வேளாண்மை வேதிப்பொருட்கள், வேளாண்மை உபகரணங்கள் போன்றவற்றை கொண்டு செல்வது கடினம். ஆகவே நிலத்தை தெரிவுசெய்யும்போது போக்குவரத்து தன்மையையும் அவதானித்துக்கொள்ளுங்கள்.
இலாபம்
நிலையான வைப்புக்கணக்கிலிருந்து பணம் வருவதைப் போல விவசாயத்திலிருந்து எப்போதும் இலாபத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் முதலீடு செய்துவிட்டு நட்டமடைய முடியாது. ஆகவே ஆரம்பிப்பதற்கு முன்னர் நன்கு பரசீலனை செய்யுங்கள். அது நிலமாக இருக்கலாம், விதையாக இருக்கலாம், சந்தை வாய்ப்பாக இருக்கலாம். உதாரணமாக எங்களிடம் 10 இலட்சம் ரூபாய் இருந்தால், அதை முதலீடு செய்ய வெவ்வேறு வழிகள் உள்ளன. நாம் எதிர்பார்க்கும் தோட்டத்தில் முதலீடு செய்து மற்றவர்களை போல இலாபத்தை ஈட்ட முடியுமா என்பதை பரிசீலியுங்கள். சகல பணத்தையும் முதலீடு செய்யாமல் முதலில் சிறிதளவு முயற்சியுங்கள். பின்னர் அதனை அதிகரிக்கலாம். ஆழமறியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்கள்.
அரசியல் செல்வாக்கு
வாழ்க்கையில் நாம் சிறந்த இடத்திற்குச் செல்வதை அநேகமானோர் விரும்பமாட்டார்கள். ஆகவே அவதானம் மக்களே. பாரியளவான நிலப்பரப்பில் பயிரிடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பாரியளவான நிலத்தில் பயிரிடும்போது சிலர் தொந்தரவு செய்வதையும் நாம் அவதானித்துள்ளோம். சில நேரங்களில் எமது பயிர்ச்செய்கையை அச்சுறுத்தும் மற்றும் தடுக்கும் அரசியல் வணிக வியாபாரிகளுடன் கைகோர்த்து தீங்கு விளைவிக்கவும் கூடும். அதனால் எமது வணிக பயிர்ச்செய்கை முயற்சிகளில் நாம் எதிர்கொள்ளக்கூடிய தடைகளை முன்னரே அறிந்துகொள்வது அவசியம்.
பயிர்ச்செய்கை சம்பந்தமான அறிவு
தென்னையை போல இறப்பர் நடப்படுவதில்லை. அவற்றின் பயிர்ச்செய்கை தனித்தனியானது. பல்வேறு வகையான பயிர்களைப் பொறுத்து, பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மாறுபடும். காய்கறிகளை மட்டுமே பயிரிட்டாலும், இலங்கையின் காய்கறி உற்பத்தியை விட விதை மற்றும் பயிர்ச்செய்கை முறைகளை உலகம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, எந்தவொரு பயிர்ச்செய்கையிலும் அது பற்றிய அறிவு மிக அவசியமானது. ஒரு சிறந்த குழுவினரைப் பெறுவதன் மூலம் ஒரு புதிய பயிர்ச்செய்கை நிலத்தில் வெற்றிபெற்று இலாபமடையலாம். அதற்கு அறிவுசார்ந்த விடயங்கள் அவசியம்.