வீட்டுத்தோட்டம் செய்தல் சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். நாம் நாட்டிவைத்து பராமரித்து வளர்த்த வீட்டுத்தோட்டத்தில் பழங்களும், காய்களும், பூக்களும் உருவாவதைக் கண்டு பூரிப்படைகின்றோம். வீட்டுத்தோட்டம் பற்றி பலர் பேசினாலும் அவற்றை செய்வதற்கு எவரும் இல்லை. அப்படியே செய்தாலம் சில சந்தர்ப்பங்களில் பலனளிப்பதில்லை. ஆகவே, வீட்டுத்தோட்டத்தை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சில யோசனைகளை இன்று தருகின்றோம்.
பயிர்களை பேணுவோம்
வீட்டுத்தோட்டத்திற்கு சிறிய நிலப்பகுதியையே பயன்படுத்துகிறோம். எங்களிடம் பெரிய நிலப்பகுதி இருந்தாலும், ஒரு வீட்டுத் தோட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட இடத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். எதுவாயினும் அனைத்து பயிர்களுக்கும் கிழக்கிலிருந்து உதிக்கும் சூரிய ஒளி சரியாக கிடைக்கும் வகையில் பயிர்களை நட்டு வைக்க முடிந்தால் நல்லது. மேலும், வீட்டுத் தோட்டங்களில், சாதாரண பயிர்ச்செய்கையை போலவே ஒரே வகை தாவரங்கள் பயிரிடப்படுவதில்லை. சிறிய பகுதியிலும் வளர்க்க பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை நாட்டுகிறோம்.
விதம்விதமாக பயிரிடுங்கள்
பெரிய அளவிலான காய்கறிகளை வளர்க்கும் ஒன்று அல்லது இரண்டு காய்கறிகள் பயிரிடப்படும். ஆனால், வீட்டுத்தோட்டங்களில் கலந்து பயிரிடுங்கள். அதாவது, சோளத்தை வளர்த்து அதற்குள்ளேயே போஞ்சியையும் இடைக்கிடையே வளர்க்க முடியும். சிறிய இடத்தில் சுவர் அல்லது வேலி இருந்தால், நாம் ஒரு சில மர பலகைகளை செய்து அதனுடன் பூசணிக்காயை அல்லது தர்பூசணியை வளர விடலாம். பீன்ஸ், தம்பலை போன்ற பருப்பு வகைகள் மண்ணில் நைட்ரஜனை சேர்க்கின்றன. பயிர்களை அவ்வாறு கலப்பது பூச்சி சேதத்தை குறைத்து இடத்தையும் நன்கு பயன்படுத்தலாம்.
விதைகளை தெரிவு செய்தல்
வீட்டு உபயோகத்திற்காக பத்து காய்கறி செடிகளை அல்லது தாவரங்களை வளர்த்தால் போதும். ஆனால் அதைவிட அதிகமாக இருந்தால் அருகிலுள்ள கடைக்குக் கொடுக்கலாம் அல்லது அயலவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பயிர் நடுவதற்குக்கூட, நாம் சில நல்ல தாவரங்களையும் சில நல்ல விதைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். சமையலறையிலிருந்து எடுக்கப்படும் காய்கறி விதைகளைப் பெறலாம். ஆனால் இப்போது முன்பைப் போல நாம் வாங்கும் காய்கறி மற்றும் பழ விதைகளில் வளரும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆகவே, முடிந்தவரை விதைகளை நாம் வாங்க முடிந்தால் நன்று.
உரப் பயன்பாடு
நம் நாடு ஒரு வெப்பமண்டல நாடு. அதனால் மழை மண்ணின் போஷாக்கை கழுவிச் செல்கிறது. நாம் பயிரிடும் நிலத்தில் இரண்டு முறை பயிர்ச்செய்கை செய்த பின் அதன் ஊட்டச்சத்து படிப்படியாக குறையும். எனவே, மண்ணில் உரத்தை சேர்க்க வேண்டும். ஒருபுறம் சமையலறை மற்றும் தோட்டத்திலிருந்து உக்கும் கழிவுகளை கலப்பதன் மூலம் உரத்தை உருவாக்கலாம். அப்படி இல்லாவிட்டால் இரசாயன உரத்தை சேர்க்கலாம். இரசாயன உரம் என்பது மண்ணில் குறைபாடுள்ள கூறுகளை மீண்டும் மண்ணில் சேர்க்கப்படும் ஒரு முறையாகும். இது குறித்து பெரும் கருத்து வேறுபாடு இருந்தாலும், மண்ணில் இல்லாத குறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கரிம அல்லது கனிம முறைகள் மூலம் மண்ணில் மீண்டும் சேர்க்கப்படாவிட்டால், நல்ல அறுவடையை பெற முடியாது.
பூச்சி கட்டுப்பாடு
நாங்கள் பெரிய அளவில் பயிர்ச்செய்கை செய்யவில்லை என்பதால் நாம் உண்ணும் பயிர்களுக்கு பூச்சிகளால் தாக்கம் ஏற்பட்டால் நஷ்டம் தான். மறுபுறம், இவற்றினால் பின்னர் நிறைய செலவாகும் வாய்ப்புக்களும் உண்டு. பயிர்கள் குறித்து நாம் அடிக்கடி பார்வை இட்டுக்கொண்டிருந்தால், நத்தைகள், புழுக்கள், ஈக்கள் போன்றவற்றிலிருந்து நாம் பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சில பூஞ்சைகளில் இருந்தது பாதுகாக்க இலைகளை கழுவுவதும் ஒரு நல்ல விடயமாகும். பூச்சி கட்டுப்பாட்டில் பறவைகள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து நம் முன்னோர்கள் நன்கு உதவி பெற்றனர். கொல்லைப்புறத்தில் தண்ணீர் வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கினால், பறவைகள் வந்து தோட்டத்தை அழகாக ஆக்கும், மேலும் அவை நம் சிறு பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை தின்றுவிடும்.
பழைய மரங்களை அகற்றுதல்
வெண்டிக்காய், கத்திரிக்காய் போன்ற மரங்கள் காலம் செல்லும் போது, முதலில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வளர்த்தல் பின்னர் மீண்டும் கிளைகள் திரும்பி வந்து காய்களை உற்பத்தி செய்கின்றன. நாங்கள் பெரும்பாலும் நம் தோட்டத்தின் தரையில் உரமிட்டு தண்ணீர் ஊற்றுகிறோம். எனவே, அதில் பலாப்பழ, மாம்பழ, கொய்யா போன்ற மரங்கள் இருந்தால், நாம் வழங்கும் நல்ல உரத்தின் ஊட்டச்சத்து காரணமாக அவை முன்பை விட சிறப்பாக வளரும். அத்தகைய சந்தர்ப்பத்தில், தோட்டத்தை பாதுகாக்க நாம் அவற்றை வெட்டிவிட வேண்டும். மேலும், காய்கறி மரங்கள் மற்றும் கொடிகளை சரியான நேரத்தில் காய்ந்த பின்னர் அகற்றப்பட வேண்டும். எப்போதாவது, பழைய காய்கறி மரத்தில் ஒரு காய் வந்தவுடன் அதனை அகற்றாமல் வைத்திருப்பது நல்லதல்ல.
கற்றுக்கொண்டு மேம்படுத்துவோம்
தோட்டக்கலைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. தொலைக்காட்சியில் அழகான தோட்டங்களை பார்த்தாலும், அவற்றை வளர்க்கும்போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள் இலகுவானவை அல்ல. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்குத் தேவையான தகவல்களை இணையத்திலிருந்து பெறலாம். பயிரில் ஏதேனும் பூச்சி இருந்தால், நாம் ஒரு புகைப்படத்தை எடுத்து ஒரு பேஸ்புக் குழுவில் அதைப்போட்டு அதை பற்றி தெரிந்தவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம். நாம் ஒரு உயிரினத்தை வளர்ப்பதாயினும் அதற்கு உணவளிக்க வேண்டும், அதை கவனமாக வைக்க வேண்டும், அதற்க்கு ஏற்பட்டுள்ள நோயை நாம் கவனிக்க வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் வளரும் பயிர்களும் அப்படித்தான். நீங்கள் மரங்களை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும், அத்தோடு அதை வைத்து மேம்படுத்த வேண்டும்.