எவ்வாறான ஆண்களை பெண்கள் எதிர்பார்க்கின்றனர்?

 

பெண்கள் பொதுவாக எவ்வாறான ஆண்களை எதிர்பார்க்கின்றனர் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இருந்தாலும், ஆண்களின் பொதுவான சில குணாதிசயங்கள் பெண்களை ஈர்த்துவிடுகின்றன. ஒரு சில யூடியூப் சேனல்கள் பெண்களிடம் நேராக சென்று ஆண்களிடம் எதனை கண்டு ஈர்க்கப்படுகிறீர்கள் என்று அவர்களிடமே கேட்கிறார்கள். அவ்வாறு கேட்கும் போது பொதுவாக பொய்கள் வருவதில்லை. அவ்வாறு எடுக்கப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்றை இங்கு இணைத்துள்ளோம். அதனைப் பாருங்கள்.

ஆனால் பொதுவாக நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புக்களின் படி, ஆண்களிடம் மயங்கிய பெண்கள் எதற்காக அத்தகைய ஆண்களை விரும்பினார்களென சில விடயங்களை குறிப்பிட்டுள்ளனர். அவற்றை இன்று உங்களுக்குத் தருகின்றோம்.

 

றுப்பாக உயரமாக இருந்தாலும் பரவாயில்லை

பாடசாலைக்கு செல்லும் வயதில்தான் அநேகமாக கறுப்பான உயரமான ஆண்களை கண்டு பெண்கள் ஈர்க்கப்படுகின்றனர். உண்மையில் வெளிநாட்டு பெண்கள் பெரும்பாலும் கருமையான சருமத்தை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் வெள்ளையான ஆண்களை மட்டும்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்றும் அவர்களைத்தான் பெண்கள் காதலிப்பார்கள் என்றும் எண்ணிக்கொண்டு ஃபெயார் அண்ட் லவ்லி பூசிக்கொண்டு திரிய வேண்டாம். மேலும் வெள்ளை நிறம் என்பதுகூட ஒரு வகை நோயாகும்.

 

பார்வை

உண்மையில் இது ஒவ்வொரு பையனுக்கும் பிளஸ் பொயிண்ட் என்பதால், பெண்கள் இந்த விடயத்தில் ஈர்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை. அதாவது, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண்ணுடன் பேசும்போதோகூட மரத்தையும் கல்லையும் மண்ணையும் பார்க்காமல் பெண்ணின் கண்ணை நேருக்கு நேராக பார்ப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதன் மூலம் அந்த ஆணுக்கு சிறந்த ஆளுமை இருக்கின்றதென பெண்கள் எண்ணுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நேருக்கு நேராக கண்ணை பார்த்து பேசும் ஆணுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

 

சீரான வடிவில் தாடி

தாடியைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. தாடி வளர்ப்பது ஒரு ட்ரெண்டாக இருக்கும் காலத்தில்தான் நாங்கள் வாழ்கின்றோம். ஆனால் அதில் ஒரு நிபந்தனையும் உண்டு. பெரும்பாலும் தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கும் என்றாலும் காடு போல சரியாக பராமரிப்பில்லாத ஒரு தோட்டம் போல வளர்ந்துள்ள தாடியையும் பெரிதாக விரும்புவதில்லை. பெரும்பாலும், சுத்தமாக அழகாக வளர்ந்திருக்கும் தாடியையே பெண்கள் விரும்புகின்றனர். அதேபோல தாடியை பிடிக்காத பெண்களும் உள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 

கவர்ச்சியான மற்றும் கட்டுக்கோப்பான உடற்கட்டமைப்பு

இது உடற்தகுதி மற்றும் ஜிம்மிற்கு செல்லும் நபர்களைப் பற்றியது. வழக்கமாக ஆண்களின் உடல் அழகில் ஈர்க்கப்படும் பெண்கள், கைகளில் தசைகள் அழகாக கட்டுக்கோப்பாக இருப்பதும், மார்பகங்கள் அழகாகவும், வயிற்றுப்பகுதியில் அழகாக சிக்ஸ் பெக் இருப்பதுமான ஆண்களின் உடல்கள் பெண்களை பெரிதாக ஈர்க்கும். இன்னொரு மறைக்க முடியாத உண்மைதான் இதுவும். அதாவது ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பின்னழகை இரசிப்பதும் இருக்கத்தான் செய்கின்றது. பெண்களும் ஆண்களின் பின்னழகை பார்த்து இரசிப்பார்கள். ஏனென்றால் இன்று சில ஆண்களுக்கு பின்னழகே இலலாமல் போய் விட்டது.  அத்தோடு காற்சட்டையும் இடுப்பில் இருப்பதில்லை.

 

கவர்ச்சியான குரலில் காதருகில் இரகசியம் பேசுதல்

 

அழகான மற்றும் கவர்ச்சியான குரல் எந்த பெண்ணையும் ஈர்க்குமென்பது உறுதி. அதனால்தான் கவர்ச்சியான குரல்களைக் கொண்ட ஆண்கள், பெண்களை அதிகம் ஈர்க்கிறார்கள். ஆனால் தெரியாத ஒரு பெண்ணின் காதருகில் போய் கிசு கிசு கதைத்தால் அடிவாங்கிக்கொண்டுதான் வருவீர்கள். ஆனால் கொஞ்சம் அந்த பெண்ணை பற்றி தெரிந்துகொண்டு நெருங்கிய பிறகு, கவர்ச்சியான குரலில் கிசுகிசுப்பதன் மூலம் நீங்கள் அந்த பெண்ணை உங்களிடம் சரணடைய வைக்கலாம்!

 

பாதுகாப்பு அதிகாரி சீருடை

இதுவென்றால் நாட்டுக்கு நாடு வித்தியாசமின்றி ஈர்க்கப்படும் விடயம்தான். சில பெண்கள் கடற்படை சீருடை, இராணுவ சீருடை, விமானப்படை சீருடை, பொலிஸ் சீருடை, பொது சுகாதார ஆய்வாளரின் சீருடை ஆகியவற்றின் மீது ஈர்க்கப்படுகிறார்கள். சீருடையில் ஈர்க்கப்படுவது பரவாயில்லை, ஆனால் நீங்கள் அந்த சீருடை அணிந்த ஒருவரின் மீது ஈர்க்கப்படப் போகிறீர்கள் என்று நினைத்தால், நீங்கள் அது தவிர மற்ற விடயங்களை பற்றியும் தேடவேண்டும். சீருடையை மாத்திரம் கருத்திற்கொண்டு காதலித்துவிடாதீர்கள்.

 

காதல் முத்தம்

இலங்கையில், இதுபோன்ற முத்தத்தைக் கொடுத்து தெரியாத ஒரு பெண்ணை ஈர்ப்பது கஷ்டம்தான். ஆனால் தெரிந்த பெண்ணிடம் இதை கொடுத்து அவர்களின் கண்கள் உங்கள் மீதே இருக்கும்படி வைத்துக்கொள்ள முடியும். அதற்காக எடுத்த எடுப்பில் சென்று முத்தம் கொடுத்துவிடாதீர்கள்.

மேலே உள்ள வீடியோ இந்தியாவில் உள்ள பெண்களின் பதில்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இவற்றில் பல வியங்கள் இலங்கையில் உள்ள பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கலாம்.