விண்வெளியைப் பற்றி ஆச்சரியப்படத்தக்க பல விடயங்கள் இருக்கின்றன. உண்மை என்னவென்றால், அதைப் பற்றிய எல்லா விடயங்களும் எமக்குத் தெரியாது. அது பறந்து விரிந்தது மற்றும் அழகானதென கூறுவோம். ஆனால் எவ்வளவு பரந்ததென எமக்குத் தெரியாது. நாம் காணும் படங்கள் மற்றும் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் சில கற்பனை காட்சிகளை கண்டிருப்போம். உங்களுக்காக இன்று சில அபூர்வமான விடயங்களை கொண்டுவருகின்றோம். ஆம், நீங்கள் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்திருப்பீர்கள். இனி அவை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பாருங்கள்.
விண்வெளி முற்றிலும் அமைதியானது
ஒலி அலைகள் வழியாக பயணிக்க ஒரு ஊடகம் தேவை. விண்வெளியின் வெற்றிடத்தில் எந்த வளிமண்டலமும் இல்லாததால், நட்சத்திரங்களுக்கிடையேயான தொடர்பில்கூட எப்போதும் அமைதியே நிலவும். வளிமண்டலங்கள் காற்றழுத்தம் கொண்டுள்ளதால் உலகத்தில் ஒலியை பயணிக்க அனுமதிக்கின்றது. எனவே பூமியில் ஏராளமான சத்தங்கள் கேட்கின்றன. இலகுவாக சொல்ல வேண்டுமானால் விண்வெளியில் நீங்கள் ஒரு விசில்கூட அடிக்கமுடியாது. ஏனென்றால் யாருக்கும் கேட்காது.
வீனஸில் ஒரு நாள், பூமியில் ஒரு வருடம்
வீனஸ் மிகவும் மெதுவான அச்சு சுழற்சியைக் கொண்டுள்ளது. இது ஒரு தடவை தன்னைத்தானே சுற்றிவர சுமார் 243 உலக நாட்கள் தேவைப்படும். ஆனால் சூரியனை முழுமையாக சுற்றி முடிக்க உலக நாட்களில் வீனஸுக்கு எமது உலகத்தைவிட குறைவான நேரம்தான் தேவைப்படுகிறது. மொத்தமாகவே 226 நாட்கள்தான் தேவைப்படுகிறது. இதே பூமிக்கு சூரியனை சுற்றி வர 365.25 நாட்கள் தேவைப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு 117 உலக நாட்களுக்கு ஒரு முறைதான் அங்கு சூரியன் உதயமாகும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இரண்டு முறை மட்டுமே உதயமாகும். மேலும் அங்கு சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் அஸ்தமிக்கும்.
உலோகத் துண்டுகள் விண்வெளியில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும்
இந்த அற்புதமான விளைவு கோல்ட் வெல்டிங் (COLD WELDING) என்று அழைக்கப்படுகிறது. தனித்தனி உலோகத் துண்டுகளின் அணுக்கள் அவை வெவ்வேறு உலோகத் துண்டுகள் என்பதை அறியாமல் இருப்பதால் இது நிகழ்கிறது. எனவே அதன் கூறுகள் ஒன்றாக இணைகின்றன. உலோகத்தை பிரிப்பதற்கு காற்று மற்றும் நீர் இருப்பதால் இது பூமியில் நிகழ்வதில்லை. இதன் விளைவு காரணமாக விண்கல கட்டுமானத்திற்கும், வெற்றிடங்களில் உலோக அடிப்படையிலான கட்டுமானத்தின் எதிர்காலத்திற்கும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பிரபஞ்சத்தில் கணக்கிட முடியாத அளவில் நட்சத்திரங்கள் உள்ளன
பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பது நமக்கு அடிப்படையில் தெரியாது. விண்மீன் பால்வீதியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்ற மதிப்பீட்டை இப்போதுதான் நடத்துகிறோம். பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் திரள்களின் எண்ணிக்கையின் சிறந்த யூகத்தின் அடிப்படையில் அந்த எண்ணிக்கையை நாம் பெருக்குகிறோம். அந்த கணிப்பீட்டிற்கு பிறகு, அங்கு கணக்கிட முடியாத அளவிற்கு நட்சத்திரங்கள் உள்ளன என்று நாசா கூறியது. அதுவும் ஒரு ஜில்லியன் அளவு உள்ளதாம். ஒரு ஜில்லியன் என்பது கணக்கிட முடியாத தொகை. ஒரு அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் 70 செக்ஸ்டில்லியனாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. இது மதிப்பிட முடியாத தொகையாகும்.
அப்பல்லோ விண்வெளி வீரர்களின் கால்தடம்
சந்திரனுக்குள் வளிமண்டலம் இல்லாததால், சந்திரனில் கால்தடம் பதித்த அப்பல்லோ விண்வெளி வீரர்களின் அடையாளத்தை அழிக்கவோ கழுவவோ காற்று அல்லது நீர் இல்லை. அதாவது அவர்களின் கால்தடங்கள், ரோவர் பிரிண்டுகள், விண்கல அச்சுகள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் சந்திரனில் மிக நீண்ட காலமாக அப்படியே இருக்கும். 100 மில்லியன் ஆண்டுகள் வரை அங்கேயே இருக்கும்
பூமியின் ஒரு பகுதி நிலா
பூமி ஒப்பீட்டளவில் இளம் கிரகமாக இருந்தபோது, அது ஒரு மாபெரும் விண்வெளிப் பொருளால் தாக்கப்பட்டுள்ளது. இந்த மோதலால் பூமியின் ஒரு பகுதி உடைந்து போனதால் சந்திரன் உருவாகியது. இந்த சந்திரன் பூமியின் ஈர்ப்பு விசையின் விளைவாக பூமியைச் சுற்றி வரத் தொடங்கியது.
செவ்வாய் கிரகத்திலுள்ள எரிமலையின் அளவு தெரியுமா?
600 கி.மீ அகலத்திலும் 21 கி.மீ உயரத்திலும், ஒலிம்பஸ் மோன்ஸ் என்று ஒரு எரிமலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது. இது எந்த நேரத்திலும் கொதித்துக் கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதுதான் மற்ற எல்லா கிரகங்களிலும் உள்ள அனைத்து மலைகளையும்விட மிக உயரமான சிகரம் ஆகும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியதென கூறப்படுகின்றது. இருப்பினும், வெஸ்டா என்ற சிறுகோள் மீது உள்ள ரியாசில்வியா மலை 22 கி.மீ உயரத்தில் உள்ளது.