புளியை பயன்படுத்தி சுவையான உணவு தயாரிப்போம்

 

புளி என்றால் கறிக்கு பயன்படுத்தும் ஒரு உள்ளீடு என்றுதானே நீங்கள் அறிவீர்கள்? ஆனால் இன்று நாங்கள் இந்த புளியை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய சில உணவு வகைகளை கொண்டு வந்துள்ளோம். சமைத்து ருசித்து சாப்பிடுங்கள்.

 

சியம்பலா மூஸ்

தேவையான பொருட்கள்

 • புளிச் சாறு – 100 மில்லிலீற்றர்
 • முட்டை – 2
 • பிரஷ் கிரீம் – 1/4 கப்
 • சர்க்கரை – 100 கிராம்
 • ஜெலட்டின் – 5 கிராம்

 

 • ஜெலட்டினில் 1 தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்த பிறகு டபுள் போயில் செய்து கொள்ளவும்.
 • சர்க்கரையில் 2 மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்து வைத்து சூடாக்கவும். சர்க்கரை உருகி குமிழ்கள் வரும்வரை கரண்டியால் கிளறவும்.
 • முட்டைகளை பீட் செய்து எடுக்கவும். உருகிய சர்க்கரையை அதில் சேர்த்து பீட் செய்யவும்.
 • ஃப்ரிட்ஜிலிருந்து பிரஷ் கிரீமினை வெளியே எடுத்தவுடன் கிளறவும். கெட்டியான பதார்த்தம் வரும்வரை அடிக்க வேண்டும்.
 • இப்போது புளிச்சாறை அந்த முட்டை கலவையில் போட்டு பிரஷ் கிரீம் சேர்த்து அதை கிளறவும். இறுதியில் ஜெலட்டின் சேர்க்கவும்.
 • ஒரு தட்டில் சிறிது பட்டர் தேய்த்து, அதில் அந்த கலவையை ஒரு மணி நேரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

 

புளி சட்னி

தேவையான பொருட்கள்

 • புளிச்சாறு – 1 கப்
 • சர்க்கரை – 100 கிராம்
 • நறுக்கிய வெள்ளை பூண்டு – 1 தேக்கரண்டி
 • நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்கேற்ப
 • மிளகாய் – 1 மேசைக்கரண்டி
 • தண்ணீர் – 1/4 கப்

 

 • இதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகும் வரை கலக்கவும்.
 • நன்கு வேகவைத்து வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட போத்தலில் அடைக்கவும்.

 

சியம்பலா கம்பல

தேவையான பொருட்கள்

 • புளிச்சாறு – 1 கப்
 • சர்க்கரை – 150 கிராம்
 • மில்க்மேட் டின் – 1 (சிறியது)
 • முட்டையின் மஞ்சள் கரு – 6
 • திப்பிலி மா – 2 மேசைக்கரண்டி
 • நீர் – 2 கப்

 

 • சர்க்கரை மற்றும் தண்ணீரை கலந்து பாணி போல உருக்கவும். கொதிக்கும் போது மில்க்மெய்டை அதில் போடவும். திப்பிலி மாவை அதில் தூவி கொஞ்சம் உப்பு சேர்க்கவும். நன்கு கொதிக்கும் வரை கரண்டியால் கிளறவும்.
 • அடுத்து, புளிச்சாற்றை அதற்குள் பிழிந்து கொதிக்க வைக்கவும்.
 • பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் முட்டையின் மஞ்சள் கருவை போட்டு கிளறவும்.

 

புளி பேஸ்ட்

தேவையான பொருட்கள்

 • புளி – 500 கிராம்
 • உப்பு – சுவைக்கேற்ப

 

 • சிறிது நீரை புளியில் சேர்த்து அதனை நன்கு பிசைந்து சாற்றை வடிகட்டவும். இவ்வாறு சாற்றை 3 முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • இப்போது புளிச் சாற்றை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கரண்டியால் கிளறவும். ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
 • கெட்டியாகிய பின்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட போத்தல்களில் போடுங்கள்.

 

புளி சோஸ்

தேவையான பொருட்கள்

 • புளிச் சாறு – 2 கப்
 • பூண்டு – 2 தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
 • சர்க்கரை – 2 தேக்கரண்டி
 • தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
 • இஞ்சி – 1 தேக்கரண்டி

 

 • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாகும் போது ​​இஞ்சி, பூண்டு, சர்க்கரை, புளிச் சாறு, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கெட்டியாகும் வரை வதக்கவும்.
 • சோஸ் போல வந்து முடிந்ததும், சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதன் பிறகு எடுக்கவும். காரம் அதிகமாக விரும்பினால், மிளகாய் அளவை அதிகரிக்கவும்.