வாழைப்பழத்தை பயன்படுத்தி சுவையான உணவுகள்

 

வாழைப்பழத்தை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சுவையான பழமாகும். வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பற்றி இதற்கு முன்னரும் கூறியுள்ளோம். இன்று வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கக்கூடிய மேலும் சில சமையல் குறிப்புகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்.

 

வாழைப்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழங்கள் – 5
  • பால் – 2 மேசைக்கரண்டி

 

  • வாழைப்பழத்தின் தோலை அகற்றி 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
  • இப்போது இதை வெளியே எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • இதை நன்றாக கிளறிக்கொள்ளவும். பால் ஊற்றி நன்கு கிரீம் போல செய்து கொள்ளவும்.
  • இப்போது அதை 2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுங்கள்.

 

வாழைப்பழ பனீஸ்

தேவையான பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழங்கள் – 2
  • சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
  • யோகட் – 1/4 கப்
  • பேக்கிங் சோடா – ஒரு பிஞ்ச்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • கோதுமை மா – 2 கப்
  • எண்ணெய் – சிறிதளவு

 

  • வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நசுக்கவும். இப்போது இதில் யோகட் சேர்க்கவும்.
  • பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும். பிறகு அதை கிளறி கோதுமை மாவையும் அதிலே கலக்கவும்.
  • ஒரு மெதுவான மாக்கலவையை உருவாக்கவும். மாக்கலவையைச் சுற்றி சிறிது எண்ணெயை கிரீஸ் செய்யவும்.
  • பிறகு இதை பொலித்தீனால் மூடி 6 மணி நேரம் வைக்கவும்.
  • 6 மணி நேரத்தில் அது பொங்கி இருக்கும். அதை எடுத்து மீண்டும் பிசைந்து விட்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது கொதிக்கும் எண்ணையில் போட்டு வறுக்கவும். அது பொன்னிறமாக மாறும் போது அடுப்பிலிருந்து அகற்றவும்.

 

வாழைப்பழ ஸ்னேக்ஸ்

தேவையான பொருட்கள்

  • பாதி பழுத்த வாழைப்பழங்கள் – 3 (ஸ்லைசாக வெட்டியது)
  • அரிசி மா – 1 கப்
  • ரவை – 1/4 கோப்பை
  • சர்க்கரை – 2 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மஞ்சள்தூள் – ஒரு பிஞ்ச்
  • எண்ணெய் – சிறிதளவு

 

  • அரிசி மா, ரவை, சர்க்கரை, உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வாழைப்பழத்தை அதில் சேர்க்கவும்.
  • ஒரு கரண்டியால் வாழைப்பழத்தை கவனமாக பிரட்டவும்.
  • பிறகு அதனை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

 

பிரெட் பனானா ரோல்

தேவையான பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழங்கள் – 3
  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
  • ஸ்லைஸ் பாண் – 4-5
  • முட்டை – 1
  • பால் – 1 மேசைக்கரண்டி
  • இலவங்கப்பட்டை தூள்
  • சர்க்கரை – 2 தேக்கரண்டி

 

  • நெய்யில் வாழைப்பழத்தை கிளறி வறுக்கும்போது 1 தேக்கரண்டி சர்க்கரையுடன் நன்கு கிளறவும்.
  • பாணின் விளிம்புகளை வெட்டவும்.
  • முட்டைகளை உடைத்து மீதமுள்ள சர்க்கரை மற்றும் பாலை போட்டு மிக்ஸ் செய்யவும்.
  • வாழைப்பழ கலவையை பாண் துண்டுகளின் மையத்தில் வைத்து முட்டை கலவையை இருபுறமும் போட்டு மடியுங்கள்.
  • இருபுறமும் பிரட்தூள்களில் பிரட்டி நீங்கள் விரும்பினால் ஒரு டூத்பிக் வைத்து முயற்சிக்கவும்.
  • இப்போது, ​​பாண் ரோல்களை முட்டை கலவையில் ஊறவைத்து, நெயில் போட்டு வறுக்கவும்.
  • இலவங்கப்பட்டை தூள் மற்றும் சர்க்கரையை கலந்து இந்த ரோல்களின் மேல் தெளிக்கவும்.

 

பனானா கர்ட்

தேவையான பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழங்கள் – 2
  • வெண்ணெய் – 100 கிராம்
  • சர்க்கரை – 100 கிராம்
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • முட்டையின் மஞ்சள் கரு – 2

 

  • வாழைப்பழத்தை நசுக்கிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு போடவும்.
  • வெண்ணெய் உருகும் வரை கிளறவும். நசுக்கப்பட்ட வாழைப்பழங்களை அதில் சேர்க்கவும்.
  • அனைத்தையும் நன்கு கலந்து ஆறவிடவும். இந்த கலவையை சிறிது நேரத்தின் பின்னர் நன்கு ப்ளெண்ட் செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.