பிரபலமான பிராண்டுகளுக்கு இடையேயுள்ள மோதல்கள்

 

சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற பிராண்டுகள் (Brand) எமது நாட்டில் மிகக் குறைவு. இதனால் பிராண்டுகளுக்கு இடையில் எந்த மோதலையும் நாங்கள் பெரிதாக காண முடிவதில்லை. ஆனால் சர்வதேச நாடுகளுக்கிடையில் உள்ள நிலைமை முற்றிலும் வேறுபட்டது. சந்தைப்படுத்தலில் போட்டி பிராண்டுகள் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றனர். இதுபோன்ற பிராண்ட் மோதல்களால் ஏற்படும் சில சிக்கல்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.

 

பெப்சி மற்றும் கொகோ கோலா

இந்த இரண்டு பிராண்டுகளையும் உங்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். இலங்கையில்கூட, இந்த இரண்டு பிராண்டுகளும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்கின்றன. இந்த பிராண்டுகள் சர்வதேச மட்டத்தில் கால்பந்துடன் தொடர்புடையவை. 2013 இல் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது அவுஸ்திரேலிய மைதானத்திற்கு வருவதற்கு மறுத்துவிட்டது. கொகோ கோலாவின் விளம்பரம் அந்த மைதானம் முழுவதும் காணப்பட்டமையே இதற்குக் காரணம். மான்செஸ்டர் அணியின் பிரதான அனுசரணையாளர் பெப்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியில், அனைத்து தரப்பினரும் கொகோ கோலாவை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்காமல்  விளம்பரங்களை காட்சிப்படுத்த மாத்திரம் ஒப்புக்கொண்டனர்.

 

அடிடாஸ் மற்றும் நைக்

பேயன் மியூனிக் ஜெர்மனியில் பிரபலமான கால்பந்து கிளப் ஆகும். அடிடாஸ் நிறுவனம் இந்த கிளப்பில் பணத்தை முதலீடு செய்துள்ளது. கிளப்பின் அதிகாரபூர்வ ஜெர்சி அடிடாஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மரியோ கோட்ஸே இந்த நிகழ்ச்சியில் நைக் நிறுவனத்தின் டீஷர்ட்டை அணிந்து முதல் முறையாக ஊடகங்களில்  கலந்து கொண்டார். சில அடிடாஸ் அதிகாரிகள் இது தவறுதலாக நடந்த செயல் என்பதற்கு பதிலாக நைக்கின் திட்டமிட்ட நடவடிக்கை என்று நம்புகிறார்கள்.

 

சோனி மற்றும் ஆப்பிள்

“தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூஸ்” எனபது ஸ்வீடனில் பிரபலமான ஒரு நாவல். நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஆப்பிள் தயாரிப்புகளின் இரசிகராக சித்தரிக்கப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்ட ஸ்வீடிஷ் படத்தில் ஆப்பிள் தயாரிப்புகளும் அடங்கும். ஆனால் சோனி திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு ஆங்கில படம் தயாரிக்க முடிவு செய்தபோது பிரச்சினை எழுந்தது. ஆப்பிள் தயாரிப்புகளை ஆப்பிள் நீக்கவில்லை, ஏனெனில் இது கதையை பாதிக்கும், ஆனால் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை முடிந்தவரை காட்ட முயன்றனர்.

 

அவுடி மற்றும் அக்குரா

மேற்கத்திய திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்ய கார் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. இது அவர்களின் கார்களை திரைப்படங்களுக்கு கொடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. அதன்படி, அவுடி கார் நிறுவனம் அயர்ன் மேன் படங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது. ஆனால் அவெஞ்சர் திரைப்படங்களில் அக்கியூரா கார் அனுசரணை வழங்கியதால், அயர்ன் மேனின் நடிகர்கள் அக்கியூராவை ஓட்ட வேண்டியிருந்தது. இது ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குறைபாடே இதற்கு காரணம் என பின்னர் கூறப்பட்டது.

 

ரீபோக் மற்றும் நைக்

1990 இல் ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளில், கூடைப்பந்தும் ஒலிம்பிக் போட்டிகளில் நுழைந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்க அணி வென்றது. இதில் மைக்கேல் ஜோர்டான், லாரி பேர்ட், டேவிட் ரொபின்சன் போன்றவர்கள் அடங்குவர். இந்த விளையாட்டுக்கு ரீபோக் நிதியுதவி அளித்ததுடன், பதக்கங்கள் வழங்கப்பட்டபோது அந்த அணியிடம் ரீபோக் ஜெர்சி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்து வீரர்களுக்கும் நைக் அனுசரணை வழங்கியதால் ரீபோக் ஜெர்சி அணிவிக்க முடியாது போயுள்ளது. அதற்கு அவர்கள் ஒரு விசித்திரமான தந்திரத்தை பயன்படுத்தினர். ரீபோக்கின் ஜெர்சி கண்ணுக்கு தெரியாத வகையில் அமெரிக்காவின் கொடியின் மூலம் அவர்களை மூடி வைத்தனர்.

 

WWF  மற்றும் WWE

உலக வனவிலங்கு நிதிக்கும் உலக புகழ்பெற்ற மல்யுத்த நிறுவனத்துக்கும் இடையே இந்த முரண்பாடு ஏற்பட்டது. முதலில் டைட்டன் ஸ்போர்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் தன்னை உலக மல்யுத்த கூட்டமைப்பு என்று அறிமுகப்படுத்த முயன்றது. அங்கு அவர்கள் WWF பிராண்டை பயன்படுத்த முயன்றனர். ஆனால் உலக வனவிலங்கு நிதியம் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது. பின்னர் மல்யுத்த கூட்டமைப்பு அதன் பெயரை உலக மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) என மாற்ற ஒப்புக்கொண்டது.

 

MESSI  மற்றும் MASSI

பிரபல அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் MESSI தனது சொந்த விளையாட்டு ஆடை பிராண்டை உருவாக்க முயன்றார். நன்கு அறியப்பட்ட ஸ்பானிஷ் சைக்கிள் பிராண்டான MASSI-க்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இரண்டு பிராண்டுகளின் பெயர்களும் ஒத்ததாக இருப்பதாக கூறி இவ்விடயம் நீதிமன்றம் வரை சென்றது. எவ்வாறாயினும், மெஸ்ஸிக்கு தனது சொந்த பிராண்டை உருவாக்குவதற்கு எந்த தடையும் இல்லையென ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.