கொலஸ்ட்ரோலை விரைவாக கரைக்கும் உணவுகள் (பகுதி-2)

சுவையை எதிர்பார்க்கும் மனிதன் அதிலுள்ள ஆரோக்கியம் பற்றி சிந்திப்பது குறைவாகும். குறிப்பாக எமது உணவிலுள்ள கொலஸ்ட்ரோல் தொடர்பாக கவனஞ்செலுத்துவது அவசியமாகும். காரணம், இது பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது. அந்தவகையில், இன்று கொலஸ்ட்ரோலை கரைக்கும், அதாவது எமது உணவில் மேலதிகமாக காணப்படும் அல்லது கெட்ட கொழுப்பை கரைக்கும் உணவுகள் பற்றி கூறவுள்ளோம். ஏற்கனவே இது தொடர்பான ஒரு பதிவை உங்களுக்காக தந்திருந்தோம். இது அதன் இரண்டாம் பாகமாகும்.

மீன்

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரோல் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரோல் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவை குறைக்கலாம்..

 

கத்தரிக்காய்

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.  ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரோல் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

 

வெண்டைக்காய்

வெண்டைக்காய் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

 

தேநீர்

தேநீரில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஒக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும், “ப்ளாக் டீயை“ (black tea) குடித்து வந்தால்,உடலில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கலாம்.

 

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, இரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ரோலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரோல் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

பசளிக் கீரை

பசளிக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசளிக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கலாம்.

 

வெள்ளைப்பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரோல் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

 

சொக்கலேட்

சொக்கலேட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஒக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, அடைப்புக்களை தடுக்கிறது.

 

மிளகாய்

மிளகாய் வயிற்றிற்கு நல்லதல்ல. இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.  சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.