டிக்டொக் பற்றி அறியவேண்டிய விடயங்கள்

 

இந்தியாவைப் போல இலங்கையில் டிக்டொக் பிரபலமாகவில்லை. இருந்தாலும் டிக்டொக் வீடியோக்களை பார்ப்பதில் நாம் கைதேர்ந்தவர்கள்.  இப்பொழுதெல்லாம் பெண் பார்க்க போனால்கூட மணமகள் வீட்டில் இருக்கிறாரா என்று கேட்க முன் டிக்டொக்கில் இருக்கிறாரா என்றுதான் கேட்கிறார்கள். அப்படி டிடொக்கில் இல்லாத பெண் கிடைப்பது வரமென ஆண்கள் கருதுகின்றனர்.  டிக்டோக் இல்லாத ஸ்மார்ட்போனில் கூட, பல டிக்டொக் வீடியோக்கள் உள்ளன. ஏனென்றால் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதற்குக்கூட டிக்டோக் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. என்னடா பெண்களை மாத்திரம் சொல்கிறோம் என கோபிக்காதீர்கள். பெண்களுக்கு நிகராக தற்போது ஆண்களும் டிக்டொக்கில் கலக்குகின்றனர். டிக்டொக்கை அண்மையில் இந்தியாவில் தடைசெய்துவிட்ட விடயம் எமக்குத் தெரியும். இவ்வாறான டிக்டொக் பற்றி நீங்கள் அறியாத சில விடயங்களை இன்று நாங்கள் உங்களுக்கு கொண்டுவந்துள்ளோம்.

 

எங்கிருந்து வந்தது டிக்டொக்?

கொரோனா வைரஸை போல மக்களிடையே விரைவாக பரவிய விடயமாக டிக்டொக் காணப்படுகின்றது. இது சீன நாட்டின் ஒரு அப்ளிக்கேஷன் ஆகும். கற்பனை செய்து பாருங்கள், உலகெங்கிலும் உள்ள பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற அனைத்து ஹெவிவெயிட் சமூக ஊடகங்களும் மேற்கத்திய நாடுகளினால் உருவாக்கப்பட்டவை என்றாலும், அவற்றோடு சரிக்கு சமமாக தமக்கென ஒரு இடத்தை பெற்ற ஒரு சீன அப்ளிகேஷன் இதுவாகும். இன்றும் இந்த அப்ளிகேஷனை சீனாவே வைத்துள்ளது. அதாவது பைட் டான்ஸ் என்ற சீன நிறுவனத்துக்கு இது சொந்தமானது.

டிக்டொக்கிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் பெரும் எதிர்ப்பின் பின்னணியில், சீனாவிலிருந்து சமூக ஊடகங்கள் உலகைக் கைப்பற்றுவதே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான பின்னணி எமக்கு தெரியாதே? எவ்வாறெனினும் இலங்கையில்கூட டிக்டொக்கிற்கு எதிர்ப்பு காணப்பட்டாலும் நாளடைவில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

 

டிக்டொக் செய்வது எப்படிடிக்டொக் பார்ப்பது எப்படி?

டிக்டொக் என்பது ஒரு பாடலுக்கு ஏற்றவாறு உதடுகளை அசைத்து லிப்சிங்க் கொடுப்பது, ஒரு இசைக்கு நடனமாடுவது போன்ற பல எளிய வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு அப்ளிகேஷனாகவே முன்பிருந்தது. ஆனால் இப்போது அது மிகவும் மேம்பட்டு, இசை பாடல்களை வைத்து இணைத்து நாமே ஒரு சில வீடியோக்களை செய்யலாம். மேலும், பலர் டிக்டொக்கைப் பயன்படுத்தி பின்னணிக்கு ஒரு மெல்லிய இசையை வைத்து ஒவ்வொரு நாளும் விதவிதமான சில கருத்துக்களையும் புலம்பல்களையும் கொடுக்கிறார்கள். அந்த விடயங்கள் ஒரு பொருட்டல்ல.

நீங்களே ஒரு டிக்டொக் செய்வதற்கு, உங்கள் மொபைலில் டிக்டொக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாமலா வெறுமனே டிக்டொக்கை பார்ப்பது என்றாலும் அதனை டவுண்லோட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் யூடியூப்பிற்கு சென்றும், டிக்டொக் மூலம் தயாரிக்கப்பட்ட வீடியோக்களை பார்க்கலாம்.

 

அதற்கே அடிமையாகிவிடுவோமோ?

இதுவும் பிரச்சினைதான். இது நிச்சயமாக போதை தந்து அடிமையாக்கக்கூடிய ஒன்றாகும். அதாவது டிக்டொக் செய்வது மட்டுமல்ல, தொடர்ந்து பார்ப்பதுகூட போதையை தரக்கூடும். டிக்டொக் செய்வதற்கு என்றாலும் கொஞ்சம் முயற்சி எடுத்து சிரமம் எடுத்து செய்ய வேண்டும். ஆனால் டிக்டொக்கை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? அதை தொடர்ந்து எத்தனை மணிநேரம் வேண்டுமென்றாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம். எனவே டிக்டொக் அப்ளிகேஷனில் உள்ள இந்த போதை தன்மையை பற்றி அறிந்துகொண்டு இனி அதனை டவுன்லோட் செய்யுங்கள்.

எதுவாக இருந்தாலும் டிக்டொக் என்பதும் ஒரு சோஷியல் மீடியாதான். அதற்கு போதையாகுவதும் போதையாகாமல் இருப்பதும் உங்களின் கைகளிலேயே உள்ளது.

 

பாதுகாப்பு குறைவு

இது பலர் உருவாக்கிக்கொள்ளும் பிரச்சினை. அதாவது, டிக்டோக் வீடியோக்களின் வேறு எந்த சமூக ஊடகங்களையும் போலவே வீடியோக்களை உருவாக்க முனைகிறார்கள். பெரும்பாலும் டிக்டொக்கில் உள்ள ட்ரெண்டிங்கிற்கு அல்லது செலெஞ்சிங்கிற்கு ஏற்ப ஒவ்வொரு வீடியோக்களையும் செய்கிறார்கள். உதாரணமாக ஒரு இசைக்கு ஆடிக்கொண்டிருந்தவாறே சென்று, அருகில் இருக்கும் பெண்ணின் மார்பில் தட்டி விடுவது போன்ற ட்ரெண்ட்கள். வீடியோ முடிந்ததும், சில நேரங்களில் அந்த பெண்ணிடம் இருந்து அடிவாங்குவது வேறு விடயம். அதையும் ஒரு ட்ரெண்ட் ஆக எடுத்துக்கொண்டு பலரும் செய்யப்போவதுதான் விடயம். டிக்டொக் எதிர்ப்புக்காரர்கள், இலங்கையில் டிக்டொக் செய்யும் பெண்கள் சமூக ஊடகங்களில் தங்கள் உடல் வெளிப்பாட்டின் அளவைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அது இருவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அல்லது அவை இருபாலாருக்கும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நாம் பொதுவாக சொல்கிறோம். இதுவும், ஒரு குட்டைப் பாவாடை அணிந்து தெருவில் செல்வது ஒரு பெண்ணின் உரிமை என்பதற்கு சமம்.

ஆனால் தூங்கும் போது அணியும் ஆடைகளையும் உள்ளாடைகளையும் அணிந்து டிக்டொக் செய்து அதனை முழு உலகிற்கும் காட்டாதீர்கள் என்று நாம் கூறுகின்றோம்.

 

பிரைவசி எண்ட் செக்கியூரிட்டி

மேலே நாம் கூறிய அந்த பகுதியின் கடைசி பகுதியை சொல்ல இதுவும் ஒரு காரணம். நம் அனைவருக்கும் தனிப்பட்ட பிரைவசி என்று ஒன்று உண்டு. நாங்கள் அதை உலகுக்கு வெளிப்படுத்த பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆனால் அது சிலருக்கு பிரச்சினையே கிடையாது. ஆனால் அவர்களுக்கு மற்றொரு நபரின் அந்தரங்கத்தை பார்க்க அவருக்கு உரிமை இல்லை. இது ஒழுக்கத்துடன் கலாசாரம் கலந்த பிரச்சினை அல்ல. இது பொது அறிவு மற்றும் நடைமுறை அறிவுடன் கலந்த ஒரு பிரச்சினையாகும்.

ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. இது போன்ற அடுத்தவர்களின் பிரைவசி வரம்பற்ற வீடியோக்களாலேயே டிக்டொக் சில நேரங்களில் பார்வையாளர்களிடையே பிரபலமாக இருக்கின்றதோ தெரியாது.

 

பிஸ்னஸ் டூல்

சில பிராண்டுகள் இப்போதுகூட டிக்டொக் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. டெட்டோலின் விளம்பரத்திற்குக்கூட டிக்டொக்கில் வீடியோ பார்த்தோம். டிக்டொக் பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறிய நடனத்தை ஆடிவிட்டு டெட்டோலில் கைகழுவுவார்கள். எனவே இது ஒரு மார்க்கெட்டிங் கருவியாகவும் பயன்படுத்தப்படலாம். இதேபோல், நீங்கள் சமுதாயத்திற்கு சில அர்த்தமுள்ள செய்திகளை வழங்க விரும்பினால், நீங்கள் டிக்டொக் தளத்தை பயன்படுத்தலாம். இதுபோன்ற டிக்டொக் பிரபலங்களை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் ஒருநாள் டிக்டொக் அப்படியானவர்களை உருவாக்கும் என்று நம்புகிறோம்.