பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனைகள்

 

பிரித்தானிய அரச குடும்பங்களை பற்றிய செய்திகளுக்கு அமோக வரவேற்பு காணப்படுகின்றது. எனவே பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சொந்தமான சில அரச அரண்மனைகள் பற்றிய தகவல்களை உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இந்த கட்டுரையில் பக்கிங்ஹாம் அரண்மனையை நாங்கள் சேர்க்கவில்லை. காரணம், நம் நாட்டில் பலருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை பற்றி தெரியும்.

 

பெல்மோரல் மாளிகை

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இந்த தனியார் அரண்மனை ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையை இளவரசர் ஆல்பர்ட் 1852 ஆம் ஆண்டில் அவரது மனைவி விக்டோரியா மகாராணிக்காக வாங்கியுள்ளார். ஸ்கொட்டிஷ் கட்டடக்கலையில் தலைசிறந்த படைப்புகளால் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை சுமார் 20,000 ஹெக்டேயர் பரப்பளவு கொண்டது. அரச குடும்பம் பெரும்பாலும் இந்த அரண்மனையை பல்வேறு கட்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ விழாக்களுக்கு பயன்படுத்துகிறது.

 

சாண்ட்ரிங்ஹாம் அரண்மனை

இந்த அரண்மனை பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தனியார் அரண்மனை ஆகும். இது விக்டோரியா மகாராணியால் 1862 இல் வாங்கப்பட்டது. ஐந்தாம் ஜோர்ஜ் முதல் அரச குடும்பத்திற்காக நத்தார் பண்டிகையை கொண்டாட சாண்ட்ரிங்ஹாம் அரண்மனை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரித்தானிய ராணி அரண்மனையில் உள்ள நூலகத்தில்தான் நத்தார் நாளில் நடத்தப்படும் செய்தியை தெரிவிக்க பயன்படுத்தினார்.

 

வின்ட்சர் அரண்மனை

வின்ட்சர் அரண்மனை உலகின் பழைமையான மற்றும் மிகப்பெரிய அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனை 1070 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்றும் இந்த அரண்மனை எலிசபெத் மகாராணியால் வார இறுதி நாட்களைக் கழிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அரச குடும்பம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வாழ்ந்தாலும், அரச குடும்பம் இரவு நேரங்களில் விண்ட்சர் அரண்மனையில் வசித்து வந்தது.

 

கிளாரன்ஸ் ஹவுஸ் அரண்மனை

வேல்ஸ் இளவரசர் சார்ளஸ் மற்றும் அவரது மனைவி, கார்ன்வாலின் லேடி டச்சஸ் லேடி கமிலா பார்க்கர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தாய், எலிசபெத் ராணி, அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோருடன் ராணியாக முடிசூட்டப்படுவதற்கு முன்பு வாழ்ந்தார். மற்ற அரண்மனைகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய அரண்மனையாகும்.

 

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை

பக்கிங்ஹாம் அரண்மனை பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் முக்கிய அரச இல்லமாக மாறுவதற்கு முன்பு, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையே உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது. அரண்மனையைப் பயன்படுத்திய கடைசி மன்னர் நான்காம் வில்லியம் மன்னரின் மரணத்திற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி மற்றும் இளவரசர் ஆல்பர்ட் ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையை தங்கள் உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். இருப்பினும், அரச திருமண விழாக்கள் பல இதிலுள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் டியூக் இளவரசர் வில்லியமின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு இந்த அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது.

 

கென்சிங்டன் அரண்மனை

முன்னர் நாட்டிங்ஹாம் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட இந்த மாளிகை மூன்றாம் வில்லியம் மன்னரால் வாங்கப்பட்டது. இந்த அரண்மனையை பின்னர் மூன்றாம் வில்லியம் மன்னர் மற்றும் அவரது மனைவி ராணி மேரி II ஆகியோர் லண்டனில் உள்ள பிரதான அரண்மனையாகப் பயன்படுத்தினர். விக்டோரியா மகாராணி ஒரு குழந்தையாக இருந்தபோது இந்த அரண்மனையில் வசித்துள்ளார். அவருடைய தாயின் கடுமையான விதிகள் அவருக்கு அரண்மனையின்மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்ததைக் குறிக்கின்றன. இன்று, அரண்மனையை வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் தங்கள் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துகின்றனர்.

 

ரோயல் லொட்ஜ்

வின்சர் அரண்மனை வளாகத்திலேயே அமைந்துள்ள மற்றொரு துணை அரண்மனை இதுவாகும். முன்னதாக, அரண்மனையை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தாய் எலிசபெத் மகாராணி பயன்படுத்தினார். அவர் அதே அரண்மனையில்தான் இறந்துள்ளார். இன்று, அரண்மனையை இளவரசர் ஆண்ட்ரூ, டியூக் ஆஃப் யார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர்.