நடிகர் சுசாந்தின் தற்கொலையின் பின்னர் மன அழுத்தம் தொடர்பாக பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கும் மன அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என அறிந்துகொண்டோம். சில நேரங்களில் கதாபாத்திரங்களை வாழ்வில் எடுத்து நடப்பதன்மூலம் அந்த கதாபாத்திரத்தினை போலவே மாறிவிடும் வாய்ப்புக்களும் அதிகம். ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், நோய்கள் மற்றும் பிரச்சினையுடன் ஒப்பிடும்போது பிறகு ஒரு நல்ல சமூக அந்தஸ்தையும் பணத்தையும் பெறுகிறார்கள். ஆனால் எவ்வளவு வேலை செய்தாலும் பணமும் இன்றி மன அழுத்தத்தை மாத்திரம் சம்பாதித்துக்கொள்ளும் மக்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வாறான தொழில்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.
வழக்கறிஞர்
வழக்கறிஞர் தொழில் எளிதாக மற்றும் அதிகம் சம்பாதிக்கக்கூடிய தொழிலென நம்பப்படுகின்றது. எமது தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர்கள் அதிக தொகையை வசூலிக்கிறார்கள். ஆனால் இந்தத் தொழிலில் உள்ள பிரச்சினைகளும் கஷ்டங்களும் எளிதல்ல. விதிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகளை நினைவில் கொண்டு செயற்படுவது கடினமானது. அடிக்கடி மக்களுடன் மற்றும் சட்டத்துடன் காலத்தை கடக்க வேண்டிய சட்டத் தொழில் எந்த வகையிலும் இலகுவான வேலையல்ல. சில நேரங்களில் தங்கள் சார்பாளருக்கு சட்டரீதியான நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.
போக்குவரத்து பொலிஸார்
போக்குவரத்து பொலிஸார் கட்டாயம் வீதியில் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை விட அவர்களின் கடமைகள் பரபரப்பான சூழலுடன் நேரடியாக தொடர்புடையவை. வெளியில் சென்றால் அலுவலகம் அல்லது வேறு வேலைத்தளங்கள் என்பது எமது அட்டவணை. அது முடிய வீட்டிற்கு வந்துவிடுவோம். ஆனால் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் அந்த வீதியிலேயே பெரும்பாலான பொலிஸார் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். எந்த நாட்டில் எங்கிருந்தாலும், போக்குவரத்து பொலிஸாரிடம் மக்கள் வாக்குவாதம் செய்கிறார்கள், கூச்சலிடுகிறார்கள். மேலும், போக்குவரத்து பொலிஸார் எல்லா இடங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன் விளைவாக, போக்குவரத்து பொலிஸார் பல தலையிடிகளை எதிர்கொள்கின்றனர்.
மயக்க மருந்து கொடுக்கும் ஊழியர்கள்
மயக்க மருந்து செலுத்துதல் என்பது அறுவை சிகிச்சையின் ஒரு முக்கிய பகுதியாகும். பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப மயக்க மருந்து கொடுப்பது அவர்களின் பொறுப்பு. மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளியின் உணர்வு, உணர்வின்மை மற்றும் மீட்பு குறித்து அக்கறை கொள்ள வேண்டும். மயக்க மருந்து நிபுணர் நோயாளியின் நிலை குறித்து ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்பதால், இது உயர் அழுத்தம் கொண்ட தொழிலாக கருதப்படுகிறது.
வைத்தியர்
இலங்கை போன்ற நாடுகளில் ஒரு மருத்துவரால் கவனிக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அதனுடன், ஒரு மருத்துவர் மாத்திரம் பலவிதமான நோய்வாய்ப்பட்டவர்களையும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். பணியிடங்கள் மற்றும் தனியார் இடங்களில் மொத்த அளவு நோயாளிகளை சரிபார்க்க வேண்டும். அவர்களின் நினைவகத்தை ஆராய்வதுடன், நோயைக் கண்டறிதல், ஆராய்ச்சியைப் படிப்பது, நோயாளிக்கு சிறந்த சிகிச்சையைக் கொடுப்பது போன்ற பல வேலைகளை மருத்துவர் செய்ய வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் இலங்கையில் உள்ள மருத்துவர்களிடம் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். ஆனால் அவர்களின் சேவை அற்பமானதல்ல.
ஐ.டி (மேனேஜர்) முகாமையாளர்
ஐ.டி (மேனேஜர்) முகாமையாளர் என்பது நிறுவனங்களில் அதிகம் திட்டுவாங்கக்கூடிய ஒரு பதவியாகும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கும் நிறுவனம் செலவிடத் தயாராக இருக்கும் தொகைக்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை இருக்கும். பணியாளர் விரும்பும் கணினி, இணைய இணைப்பு மற்றும் சொப்ட்வெயாரை ஐ.டி மேனேஜரால் வழங்க முடியாது. அவ்வாறான நிலையில், சிலர் ஐ.டி முகாமையாளர்களுடன் சண்டையிடவும் செய்கின்றனர். மறுபுறம், ஐ.டி மேலாளர்கள் கணினி ஹார்ட்வெயர் மற்றும் கணினி நெட்வர்க் பாதுகாப்பைக் கையாள வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான பின்னணிகளில் ஒன்றான ஐ.டி முகாமையாளர் என்பது ஒரு கடினமான வேலை. இது நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஐ.டி துறையின் பங்களிப்புக்கு நேரடியாக தொடர்புள்ள பொறுப்பாகும்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் பொறுப்பு கல்வி முறையைப் பொறுத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியைப் பற்றிய கதைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம் என்றாலும், அவை இன்னும் ஆசிரியர்களிடம் இயங்குகிறது. லோக்டவுன் காலத்தில் ஒரு குழந்தையை அல்லது இரண்டு மூன்று குழந்தையை வீட்டிலிருந்தவாறே கற்பிப்பது எவ்வளவு கடினமாக இருந்ததென பெற்றோர்கள் நன்கு அறிந்திருப்பர். சில வீடுகளில், பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்காக குழந்தைகளுடன் அவஸ்த்தைப்பட வேண்டியிருந்தது. எனவே ஆசிரியர்கள் நாற்பது-ஐம்பது குழந்தைகளைக் கொண்ட வகுப்பறையை எவ்வாறு கையாளுகிறார்கள். அது நினைத்துப் பார்ப்பதற்கும் மிகவும் கடினம். பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் வெவ்வேறு சமூக மட்டங்கள் மற்றும் கல்வி நிலைகளில் இருந்து கற்பிப்பது மற்றும் அவர்களுக்கு ஒரே அளவிலான கல்வியை வழங்குவது உண்மையில் சில ஆசிரியர்களுக்கு மன அழுத்தமாக இருக்கும்.
சுமார் மூன்று மாதங்களாக ஆசிரியர்கள் வீட்டிலிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் பாடசாலை வேலைகளையும், கேள்வி பத்திரங்களை தயாரிப்பதும், மீண்டும் படிப்புக்குத் தயாராவதும், பள்ளிக்கு வெளியே அவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயல்களை செய்ய வேண்டும். உண்மையில் கற்பித்தல் எளிதான பணி அல்ல. ஆனால் பார்க்கும் எமக்கு எளிதான வேலை போல தோன்றுகின்றது.
செய்தியாளர் மற்றும் எடிட்டர்
ஒரு செய்தித்தாள் அல்லது அலைவரிசையை செய்யும் போது, செய்தி மிகமுக்கியமானது. அலைவரிசைகளில் சில நிமிடங்களில் செய்தியை நீங்கள் கொடுக்க வேண்டும். அதுவே ஒரு செய்தித்தாள் என்றால், நீங்கள் ஒருசில பக்கத்திற்கு செய்திகளை வழங்க வேண்டும். ஆயினும் செய்திகளைச் சேர்ப்பது எளிதானது அல்ல. ஆனால் நாளின் இலக்குகளை முடிப்பது ஒரு செய்தியாசிரியரின் பொறுப்பாகும். ரிப்போர்ட்டரின் தரப்பிலிருந்து பார்த்தால், எப்போதும் செய்திகளைக் கண்காணிக்க வேண்டும். இந்த நிருபர்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்துகொள்வது, செல்வாக்கு மிக்கவர்களை நேர்காணல் செய்வது, முக்கியமான நிகழ்வுகளை குறிப்பிட்டு காட்டுவது, சரியான நேரத்தில் செய்திகளை வழங்குவது, ஊடகங்களுக்கு பொதுமக்களை கவர்ந்து அதனை பாதுகாப்பது போன்ற பல பொறுப்புகள் உள்ளன. அத்தோடு அனைவரினதும் அவப்பெயர்களை வாங்கிக்கொள்ளும் ஊடக செய்தி நிருபரின் மன அழுத்தம் எளிதல்ல.
பெரிய பெரிய வேலைகளை பற்றி நாங்கள் கூறினாலும், ஒவ்வொரு வேலையும் வேலை செய்பவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மனஅழுத்தத்தை கொடுக்கிறது. இது எளிதானது என்று நாங்கள் நினைத்தாலும், காலையில் பணிபுரியும் நகர சபை ஊழியர்களுக்கு நகர சூழலை சுத்தம் செய்வதற்கான ஆபத்து மிகக் குறைவு. ஆனால் மழை நாட்களில் டெங்கு, சுகாதாரமின்மையால் இலகுவாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் நோய் பரவுவதால் ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, சில உயர் அழுத்த வேலைகளைப் போலவே, நமக்குத் தெரியாத மன அழுத்தங்களும் நாம் செய்யும் தொழில்களில் இருக்கலாம்.
எனவே ஒரு தொழிலை பார்த்து “இது ரொம்ப ஈஸியான வேலையாச்சே” என்று சொல்வதற்கு முன்பு, அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை அவதானித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்