தினமும் ஒரே ஆடையை அணிவது பற்றியதல்ல இந்தப் பதிவு. அதற்கு பதிலாக ஒரே நிறம் மற்றும் ஒரே மாதிரியாக இருக்கும் பல ஆடைகளைப் பயன்படுத்துவது மற்றும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றியதாகும்.. இதற்கு நாம் அளிக்கக்கூடிய சிறந்த உதாரணம் பேஸ்புக்கின் தலைமை அதிகாரி மார்க் சக்கர்பெர்க். அவர் எப்போதும் சாம்பல் நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருப்பார். எனவே இன்று இது போன்ற ஆடைகளில் உள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
அதிகம் யோசிக்க தேவையில்லை
விதவிதமான டிசைனினும் நிறத்திலும் நிறைய ஆடைகளை வைத்திருக்கின்ற ஒரு மனிதனுக்கு, அவர் தினமும் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது தொந்தரவாகும். “இன்று எதை அணிவது? இந்த டெனிமுக்கு இந்த ஷர்ட் இந்த டீ ஷர்ட்! ” என்று தினமும் அதற்கே அதிகம் யோசிக்க வேண்டிவரும். ஆனால் ஒரே மாதிரியான ஆடைகளை தினமும் அணியும் ஒருவருக்கு அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. அலுமாரியிலிருந்து ஒவ்வொரு நாளும் அணியும் ஒரே ஆடையை எடுத்து அணியலாம். எதை அணிய வேண்டும் என்பதை தேடி முயற்சிப்பதை விட, முக்கியமான வேறு சில முடிவுகளை எடுக்க இந்த நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தலாம்.
செலவும் குறைவு
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான ஆடைகளை அணிய ஆசைப்படுகிறோம். அதே ஆடையை மீண்டும் சிறிது நேரம் அணிவதற்கு பதிலாக, அவற்றை வைத்துவிட்டு புதிய புதிய ஆடைகளை வாங்கி புதிதாக அணிகிறோம். அப்படிச் செய்ய நாம் நிறைய துணிகளை வாங்க வேண்டும். ஆனால் நாம் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்தால், எங்களுக்கு நிறைய ஆடைகள் வாங்க வேண்டிய தேவையில்லை. நாளுக்கு நாள் மாற்ற உங்களுக்கு சில ஆடைகள் மட்டுமே தேவை. இதனால், ஆடைக்கான தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகின்றன.
ஆடைகளை வைத்திருப்பதும் இலகு
சிலரின் ஆடைகளை வைக்க அலுமாரியில்கூட போதுமான இடம் இருப்பதில்லை. சிலர் துணிகளைக் கழுவி, அவற்றை சுருட்டி அலுமாரியில் போட்டதன் பின்னர் மீண்டும் எடுத்து அணிவதற்கு தேடிக்கொண்டிருப்பார்கள். கிடைத்தாலும், அது மற்ற ஆடைகளின் கீழ் இருந்து கசங்கி போய் இருப்பதால் மீண்டும் அயன் செய்துதான் அணிய வேண்டும். கழுவும் போது, நீங்கள் வெவ்வேறு வகையான துணிகளை வெவ்வேறு வண்ணங்களில் கழுவ வேண்டும். ஆனால் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவதில் அவ்வாறான பிரச்சினைகள் இருப்பதில்லை.
ஆடைகளில் உள்ள விரக்தி குறையும்
சில நேரங்களில் ஒரு துணிக்கடைக்குச் சென்று அணிந்து அதில் உள்ள அழகைப் பார்த்து வாங்கிக்கொண்டு வருகிறோம். முதல் முறையாக ஒரு ஆடை பயணத்திற்கு அல்லது அலுவலகத்திற்கு அணிந்து சென்றபோது நன்றாக இருக்கும். பிறகு கழுவி அணிந்த பின்னர் சற்று இறுக்கமாக இருக்கும். இறுக்கமாகி விட்டது என்று அதை ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏனென்றால் ஆடைக்கு செலவு செய்த பணம் வீணாகிவிடும் என்று நினைப்பதே காரணம். ஆனால் சரியான வண்ணத்திலும் பாணியிலும் சில துணிகளை வாங்கும்போது நாம் அவ்வாறு விரக்தியடைய மாட்டோம். நம் உடலுக்கும் தோற்றத்திற்கும் சரியாக பொருந்தக்கூடிய ஒரு ஆடையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும். வியாபாரத்தில் இறங்குவதற்கும், நம்பிக்கையுடன் எங்கள் நாளுக்காக ஈடுபடுவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.
நேரம் பெரிதும் சேமிக்கப்படும்
அவ்வப்போது நிறைய துணிகளை வாங்கி சேமித்துக் கொண்ட ஒருவர் துணிகளை வாங்க, கழுவ, காய வைக்க, துணிகளை மடிக்க, அணிய துணிகளைக் கண்டுபிடிக்க, போன்ற பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கும் அவர்களுக்கும் நிறைய நேரம் செலவாகிறது. ஆனால் ஒரே மாதிரியான ஆடைகளை தொடர்ந்தும் அணிபவருக்கு அவ்வாறு அதிக நேரம் செலவாவதில்லை. பயணம் செல்வதற்கு அல்லது அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு, எப்போதும் வழக்கமான பாணியில் உடை அணிந்து செல்லலாம். துணிகளை எளிதில் கழுவி, உலர்த்தி, அயன் செய்து கொள்ளலாம். நேரமும் செலவாகாது.
தனித்துவமான லுக்
சிலர் எவ்வளவுதான் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், அவர்களிடம் ஆளுமை அல்லது தோற்றத்தை வெளிப்படுத்தாது. ஆனால் சிலர் எந்நாளும் ஒரே மாதிரியான ஆடைகளையே அணிவார்கள். ஆனால் அவர்களிடம் ஒரு எடுப்பான தோற்றம் காணப்படும். பார்ப்பவர்களும் அவரை எம்மைப் பற்றி சிறப்பாக உணர்வார்கள். இப்போது கண்களை மூடிக்கொண்டு மார்க் ஸக்கர்பெர்க்கை நினைவில் கொள்ளுங்கள். அந்த சாம்பல் நிற சட்டையுடன் நீங்கள் அவரை போல காணலாம், இல்லையா? அதைத்தான் நாங்கள் கூறியுள்ளோம். முயற்சித்துப் பாருங்கள்.