எதிர்காலத்தில் ஆட்சிபீடம் ஏறவுள்ள இளவரசர்களும் இளவரசிகளும்

 

அடுத்த அரச வாரிசாக வரவிருப்பவர்கள் பற்றி இன்றைய தினம் பேசவுள்ளோம். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த இளவரசர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் இளவயதுடையவர்களாவர். இருப்பினும், இந்த பட்டியலில் இளவரசர் சார்ள்ஸின் பெயரை நாங்கள் சேர்க்கவில்லை. ஏனென்றால் அவரைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியும். அவர் இளவயதுடையவரும் அல்லர்.

 

ஜிக்மே நம்கீல் வாங்சுக்

பூட்டானின் சிம்மாசனத்தின் அடுத்த வாரிசான இளவரசர் ஜிக்மே இன்னும் நான்கு வயதுடைய சிறுவராவார். அவரது தந்தையான மன்னர் ஜிக்மியர் கேசர் நம்கீல் இளவரசரின் பிறப்பைக் கொண்டாட நாடு முழுவதும் 108,000 மரங்களை நாட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். பௌத்த நாடான பூட்டானில் 108 என்பது நன்கு அறியப்பட்ட ராசியான சுபம் நிறைந்த எண்.

 

இளவரசி எலிசபத்

பதினெட்டு வயது இளவரசி எலிசபெத் பெல்ஜியத்தின் வருங்கால ராணியாக மாறவுள்ளார். பெல்ஜியத்தின் தற்போதைய மன்னர் பிலிப் மற்றும் மாடில்டா மகாராணி ஆகியோரின் மூத்த மகளான இவருக்கு உடன் பிறந்த மூன்று சகோதர சகோதரிகள் உள்ளனர். அவர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பாராளுமன்றம் ஒரு புதிய மசோதாவை நிறைவேற்றியது. மேலும் அரச கிரீடம் அரச குடும்பத்தின் மூத்த குழந்தைக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர், அரசாட்சி அரச குடும்பத்தின் மூத்த மகனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எனவே இந்த புதிய மசோதாவின் மூலம் இவர் எதிர்காலத்தில் பெல்ஜியத்தின் முதல் ராணியாக மாறுவார்.

 

கேத்ரீனா அமாலியா

மூன்று ராணிகளின் ஆட்சியின் பின்னர், நெதர்லாந்தில் இப்போதுதான் ஒரு ராஜா ஆட்சியில் அமர்ந்துள்ளார். ஆனால் மீண்டும் அவரது ஆட்சியின் பின்னர் மற்றொரு ராணி முடிசூட்டப்படுவார். அவர்தான் தற்போதைய மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சீமாவின் மூத்த மகளான இளவரசி கேத்தரினா அமலியா. அவருக்கு இப்போதுதான் 14 வயது. இன்னும் அவர் பாடசாலையில் கல்வி கற்கின்றார்.

 

இளவரசி லியானோர்

தற்போதைய ஸ்பெயினின் மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லாடிசியாவின் மூத்த மகள் இளவரசி லியோனருக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே உள்ளார். ஸ்பெயினின் சட்டத்தின்படி, ராஜாவுக்கு ஒரு மகன் இருந்தால் அடுத்த ராஜாவாக முடிசூட்டப்பட வேண்டும். இன்னும் பள்ளிப்படிப்பில் இருக்கும் பதினான்கு வயது இளவரசி லியோனோர், இப்போது பல்வேறு விழாக்களில் தனது அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

 

மவுலே ஹஸன்

பதினேழு வயதான இளவரசர் மவுலே ஹசன் மொராக்கோவின் மன்னர் ஆறாம் முகமதுவுக்குப் பின் வரவுள்ளார். மொராக்கோ அரச குடும்பம் உலகின் பணக்கார அரச குடும்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் விமானப் போக்குவரத்தில் மிகவும் ஆர்வம் பெற்ற இளவரசர் ஹசனும் ஒரு தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் ஆவார்.

 

இளவரசர் லெரோடோலி செசியோ

பதின்மூன்று வயது கொண்ட இளவரசர் லெரோடோலி செசியோ, லெசோதோ இராச்சியத்தின் அடுத்த வாரிசாவார். இது தற்போது ஆபிரிக்காவை ஆளும் மூன்று ராஜ்யங்களில் ஒன்றாகும். இருப்பினும், அரசியலமைப்பு லெசோதோ மன்னரின் அதிகாரங்களை கட்டுப்படுத்துகிறது. கல்வியறிவின் அடிப்படையில் லெசோதோ மற்ற ஆபிரிக்க நாடுகளை விடவும் முன்னிலையில் உள்ளது. எனவே, பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பிராந்திய மக்கள் தங்கள் வம்சங்கள் மற்றும் சர்வாதிகாரங்களிலிருந்து நிவாரணம் தேடுகின்றனர். தற்போதைய மன்னர் லெக்ஸி III தனது மகன் இளவரசருக்கு இந்த எதிர்கால தலைமைக்கு பயிற்சியளித்து வருகிறார்.

 

இளவரசர் ஜேக்

உலகின் மிகச்சிறிய அரசுகளில் ஒன்றான மொனாக்கோ ஒரு இளவரசனால் ஆளப்படுகிறது. ஐரோப்பிய பாரம்பரியத்தின் படி, மொனாக்கோவின் ஆட்சியாளர் ஒரு இளவரசன் என்று அழைக்கப்பட்டார். இன்று, மொனாக்கோ இரண்டாம் ஆல்பர்ட் மன்னரால் ஆளப்படுகிறது. நீண்ட காலமாக மொனாக்கோவை அவருக்குப் பின் ஆட்சி செய்ய வாரிசு இல்லாத பிரச்சினை இருந்தது. ராஜாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் மூலம் குழந்தைகள் இருந்தபோதிலும், அவரது சட்டப்பூர்வ மனைவியான இளவரசி சார்லினிடமிருந்து குழந்தைகள் இல்லை. இறுதியில் இளவரசி இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். மூத்தவர் இளவரசர் ஜேக் இளையவர் கேப்ரியல் என்று பெயரிடப்பட்டார். அதன்படி, இளவரசருக்கும் இளவரசிக்கும் இப்போது ஐந்து வயது.