வித்தியாசமாக வாழ்ந்த இந்திய மகாராஜாக்கள்

 

இந்தியா ஒரு தனி நாடாக இருந்தாலும் கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு ராஜ்யங்களின் தொகுப்பாக இருந்தது. 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்துடன், இந்த எல்லா ராஜ்யங்களின் அதிகாரமும் அவற்றை ஆட்சி செய்த மன்னர்களும் முடிவுக்கு வந்தனர். இருப்பினும், இன்றுவரை இந்த மகாராஜாக்கள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாம் உலகை பிரமிக்கச் செய்த சில மகாராஜாக்களைப் பற்றி பேசப் போகிறோம்.

 

பூபிந்தர் சிங், பட்டியாலா மகாராஜா

அந்த காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்த இந்த மகாராஜா, தன்னிடம் இருப்பதை பிறருக்கு காட்ட ஆசைப்படும் மனிதர். முன்னணி ஐரோப்பிய நகை உற்பத்தியாளர்களால் அவர் பெரிய அளவிலான வைர நகைகளை உருவாக்கினார். அவற்றில் சுமார் 25 மில்லியன் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றும் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அவர் அந்த நகைகளை மட்டுமே அணிந்துகொண்டு தனது மக்களுக்கு முன்னால் தோன்றுவார். இன்னும் குறிப்பாக, அவர் நகைகளைத் தவிர வெறுமனே பார்த்தால் நிர்வாணமாகத்தான் இருந்திருப்பார்.

 

மிர் ஒஸ்மான் அலிகான் சித்திக், ஹைதராபாத்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான ஹைதராபாத், இந்தியாவுடன் இணைக்க கடைசி நிமிடத்தில்கூட போர் தொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு காரணம் அதன் ஆட்சியாளராக இருந்த நிஜாமின் எதிர்ப்பால் ஆகும். அவரது வங்கிக் கணக்குகள் மட்டும் 2 பில்லியன் டொலர். அந்த நேரத்தில் யு.எஸ் பொருளாதாரத்தில் அது நூற்றிற்கு இரண்டு சதவீதம். அவர் உலகின் ஐந்தாவது பெரிய வைரமாகக் கருதப்படும் ஜேக்கப் டயமண்டை வாங்கி அதை தனது மேசையில் இருந்த காகிதம் பறப்பதை தடுக்க மட்டுமே பயன்படுத்தினார்.

 

ஜகதீத் சிங், கபுர்தலா மகாராஜா

மிகச் சிறிய வயதிலேயே கபுர்தலாவின் மன்னரான ஜகதீத் சிங் ஐரோப்பாவை, குறிப்பாக பிரான்ஸை மிகவும் விரும்பினார். தகவல்களின்படி, கடந்த ஜென்மத்தில் அவர் முன்னாள் பிரெஞ்சு மன்னராக இருந்ததாக நம்பப்படுகிறது. அவரது பிரான்ஸ் மீதான ஆசை இதுவரை சென்றுள்ளது என்றால், அவர் பிரெஞ்சு கட்டிடக்கலை படி கபுர்தலாவில் பல கட்டிடங்களை கட்டினார். அவற்றில் கிங் வார்சாவின் அரண்மனையைப் போல கட்டப்பட்ட ஜகதீத் அரண்மனையும் உண்டு.

 

IV சித்திக் முஹம்மது கான் அப்பாஸி, பஹவல்பூரின் நவாப்

இன்றைய பாகிஸ்தானின் இடமான பஹவல்பூரின் நவாப், அவர் பயன்படுத்திய படுக்கை காரணமாக இன்னும் பேசப்படுகிறார். பாரிஸில் உருவாக்கப்பட்ட அவரது அரச படுக்கைக்கு சுமார் இருநூற்று நாற்பது கிலோகிராம் வெள்ளி பயன்படுத்தப்பட்டது. படுக்கையின் நான்கு மூலைகளிலும் நான்கு நிர்வாண பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் கிரேக்க பெண்களின் வெண்கல சிலைகள் இருந்தன. மகாராஜா அரியணைக்கு வந்து ஒரு பொத்தானை அழுத்தும்போது, ​​இந்த சிலைகள் மெல்லிசை இசைக்கு நகர்ந்து நவாப் பக்கத்தில் வந்து காற்றை விசிறி விடும்.

 

துலீப் சிங்

சிறுவயதிலேயே ஆங்கிலேயர்களால் கடத்தப்பட்ட மகாராஜா துலீப் சிங்கை ஐரோப்பியமயமாக்க, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. ஒரு காலத்திற்கு, சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். பின்னர் சீக்கிய மதத்திற்கு மாறினார். இந்த நேரத்தில், விக்டோரியா மகாராணி துலீப் சிங்கை பிரிட்டனின் டியூக் ஆக நியமிக்க முடிவு செய்தார். கோஹினூர் வைரம் உட்பட அவரது செல்வத்திற்கான வெகுமதியாக அவர் அரச குடும்பத்திலிருந்து வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டார். ஆனால் மகாராஜா துலீப் சிங் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். அவர் எவ்வளவு ஐரோப்பிய மயமாக்கப்பட்டாலும், அவர் சீக்கியர்களின் ராஜா என்பதை மறக்காமல் செயற்பட்டார்.

 

சயாஜிராவ் கயக்வாட் III, பரோடாவின் மகாராஜா

அரச குடும்பத்தின் தொலைதூர உறவினரான சயாஜிராவ், குழந்தையாக இருந்தபோது பரோடாவின் அரசரானார். ஏனெனில் பரோடாவின் மகாராஜா ஒரு அரச வாரிசாக மகன் இல்லாமல் இறந்தார். இந்தச் சிறுவனைத் தத்தெடுக்க விரும்பிய ஆங்கிலேயர் அவருக்கு ஆங்கிலக் கல்வியைக் கொடுத்தார். ஆனால் எதிர்பாராத ஒன்று அப்போதுதான் நடந்தது. அந்த கல்வியின் விளைவாக, அவர் பரோடாவை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களின் ஒன்றாக மாற்றினார். முடிந்தவரை ஆங்கிலேயர்களையும் கேலி செய்தார். 5ஆம் ஜோர்ஜ் மன்னரை இந்தியப் பேரரசராக அபிஷேகம் செய்வதற்காக டெல்லியில் நடந்த விழாவில் கலந்துகொண்டபோது, ​​5ஆம் ஜோர்ஜ் மன்னரை வணங்க மறுத்ததாக இந்தியர்களிடையே ஒரு வதந்தி பரவியது. ஆனால் அவர் ராஜாவை வாழ்த்தினார். ஆனால் சரியாக செய்யவில்லை என்றும் அவர் ராஜாவை பார்த்து திரும்பி சத்தமாக சிரித்தார் என்றும் கூறப்படுகிறது.

 

இந்திரா, கூச் பிஹாரின் ராணி

இறுதியாக நாங்கள் இந்தியாவையும் ஐரோப்பாவையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு ராணியைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம் என்று நினைத்தோம். அவர் பெயர் இந்திரா. அவரது பொழுதுபோக்கு பல்வேறு வகையான காலணிகளை சேகரிப்பதாகும். அதில், ஐரோப்பாவிலுள்ள நகை நிபுணர்களுக்கு அவருக்காக வைரங்கள் பதிக்கப்பட்ட காலணிகளை தயாரிக்க ஏற்பாடு செய்தார். மிகவும் அழகான பெண்ணாக இருந்தாலும் பிற்காலத்தில் புகைப்பழக்கத்திற்கு பெரிதும் அடிமையாகி இருந்தார். ஆனால் அதிலும் அசாதாரணமாக முடிவெடுத்து மிகவும் நீண்ட சிகரெட்டை அவருக்காக தயார் செய்து பயன்படுத்தினார்.