தாம்பத்தியத்தால் ஏற்படும் பலன்கள்

‘பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கும் மற்றும் சந்தோசத்தை அனுபவிப்போர் நோய்வாய்ப்படுவது குறைவு’ என்று பாலியல் சுகாதார நிபுணரான பி.எச்.டி யுவோன் கே கூறுகிறார். அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தனது துணையிடம் இன்பம் அனுபவித்தால் மருந்து மாத்திரைகளை விட பல மடங்கு இயற்கையான மன அமைதியையை பெறுவர். மேலும் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த இயற்கை மருத்துவமாகும். நிம்மதியான, ஆரோக்கியமான உறவு மூளையை சுறுசுறுப்பாக்குவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கும். மழை மற்றும் குளிர்காலத்தில் உடலை குளிர் தாக்குகிறது. அப்போது உறவு வைத்துக் கொண்டால் உடல் வெதுவெதுப்பாகி தட்பவெப்பநிலையை சீராக்குகிறது.

தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இதனால் அவர்களது உடல் அழகு பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் தாம்பத்திய உறவு, இருவருக்குமே மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை தருகிறது.

முத்தத்தின் மூலம் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் குறைவடையும்

முத்தம் கொடுத்தல், அணைத்தல், வருடுதல் இவையெல்லாம் தாம்பத்தியத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். குறிப்பாக தாம்பத்தியத்தில் முத்தத்திற்கு முன்னுரிமை உண்டு. இதனால் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் தாக்குவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காரணம் இத்தருணத்தில் உமிழ்நீர் அதிகம் சுரந்து வாயினை சுத்தப்படுத்துகிறது. மேலும் உமிழ்நீர் அதிகமாக சுரப்பதால் ஜீரணக்கோளாறு இருக்காது. இவை அனைத்தும் கணவன் மனைவிக்கிடையே முழுமையான தாம்பத்தியம் அமைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பிற ஊடுருவல்களுக்கு எதிராக தங்கள் உடலைப் பாதுகாக்கும் அளவுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உண்டு. பென்சில்வேனியாவில் உள்ள வில்கேஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் மேலும் சில விடயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும். அதாவது சரியானவற்றை சாப்பிடுவது, சுறுசுறுப்பாக இருப்பது, போதுமான அளவு உறங்குவது, உங்களுக்கு ஏதாவது உடலில் பிரச்சினைகள் இருப்பின் தடுப்பூசிகளைத் தொடர்வது போன்றவையாகும்.

 

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது


பாலியல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு இடையேயான தொடர்பை ஆராய்ச்சிகள் முன்வைத்துள்ளதாக அமாய் வெல்னஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவ இயக்குநர் எம்.டி. ஜோசப் ஜே. பின்சோன் கூறுகிறார். பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார். ஒரு முக்கிய ஆய்வில், உடலுறவு குறிப்பாக (சுயஇன்பம் அல்ல) சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைத்தது. உறவினில் நமது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் இயங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது ஒரு முழுமையான நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டதற்கு சமமாகும்.

 

உடற்பயிற்சியாக கணிக்கப்படுகிறது


உடலுறவு கொள்ளுதல் நிமிடத்திற்கு ஐந்து கலோரிகளைப் எரிக்கிறது. டிவி பார்ப்பதை விட நான்கு கலோரிகள் இது அதிகம். இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் பல்வேறு தசைகளை இயங்கச் செய்கின்றது. உடற்பயிற்சியைப் போலவே, நிலைத்தன்மையும் நன்மைகளை அதிகரிக்க உதவுகிறது.

 

மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது


ஒரு நல்ல உடலுறவுடன் கூடிய வாழ்க்கை உங்கள் இதயத்திற்கு நல்லது. உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துவதற்கான சிறந்த வழியாக மட்டுமல்லாமல், உங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் இது உதவுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது உதவக்கூடும். ஒரு ஆய்வின் போது, வாரத்திற்கு இரண்டு முறையாவது உடலுறவு கொண்ட ஆண்கள் அரிதாக உடலுறவு கொண்ட ஆண்களை விட இருதய நோயால் இறக்கும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.

 

விரைவாக தூக்கம் வரும்


உடலுறவுக்குப் பிறகு விரைவாக அதிகமானோருக்கு தூக்கம் வரும். புணர்ச்சிக்குப் பிறகு, புரோலேக்ட்டின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது உடலுறவு மற்றும் தூக்கத்தின் உணர்வுகளுக்கு காரணமாகும்.

 

மன அழுத்தத்தை குறைக்கும்

உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் தணிக்கும். தொடுவதும் கட்டிப்பிடிப்பதும் உங்கள் உடலின் இயற்கையான ‘ஃபீல்-குட் ஹோர்மோனை’ விடுவிக்கும் என்று அம்பர்தார் கூறுகிறார். பாலியல் தூண்டுதல் உங்கள் மூளையின் இன்பம் மற்றும் வெகுமதி முறையை புதுப்பிக்கும் ஒரு மூளை இரசாயனத்தை வெளியிடுகிறது. உடலுறவு மற்றும் நெருக்கம் உங்கள் சுயமரியாதையையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மருந்து மட்டுமல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஏற்ற ஒன்றாகும்.