வெங்காயத்தினால் தயாரிக்கப்படும் சுவையான உணவுகள்

வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாதது போல நமக்கு தினமும் வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காயத்தையும் சுவையூட்டியாக அல்லது சேர்க்கையாக மாத்திரம் பயன்படுத்தலாம் என்றுதான் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மை அதுவல்ல. வெங்காயத்தை பயன்படுத்தி மிகவும் சுவையான உணவுகளை தயாரிக்கலாம். அதுதொடர்பாக இன்று நாங்கள் பார்க்கலாம்.

ஒனியன் பிரிட்டர்ஸ்


தேவையான பொருட்கள்
 நறுக்கிய பெரிய வெங்காயம் – 3
 நறுக்கிய லீக்ஸ் – சிறிதளவு
 எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
 நறுக்கிய வெள்ளைப்பூண்டு – 2
 நறுக்கிய கொத்தமல்லிக்கீரை – சிறிதளவு
 உப்பு
 மிளகுத்தூள்
 முட்டை – 3
 ரவை – 1ஃ2 கப்
 கோதுமை மா – 1ஃ2 கப்
 வறுக்க தேவையான அளவு எண்ணெய்

• சிறிது எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் லீக்ஸ் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
• பின்னர் சிறிது பூண்டு சேர்க்கவும். இப்போது அதை அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். பின்னர் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.
• இது சிறிது ஆறியதும் முட்டை, ரவை மற்றும் கோதுமை மா சேர்த்துக் கலக்கவும்.
• நடுத்தர வெப்பத்திற்கு ஒரு தட்டையான நொன்ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
• கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

 

கிரீம் ஒனியன் சூப்


தேவையான பொருட்கள்
 வெண்ணெய் – 2 தேக்கரண்டி
 நறுக்கிய வெங்காயம் – 2
 கோதுமை மா – 1 மேசைக்கரண்டி
 பிரெஷ் பால் – 2 கப்
 தண்ணீர் – 1ஃ2 கப்
 உப்பு
 மிளகுத்தூள்

• ஒரு பேனில் சிறிது வெண்ணெய் சேர்த்து சூடாகும் போது சிறிது வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை தாளிக்கவும்.
• அடுத்து, சிறிது மா சேர்த்து கலக்கவும். பிறகு சிறிது பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
• ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். கெட்டியாகும் வரை குறைந்த வெப்பத்தில் கரண்டியால் கிளறவும். சூப் கெட்டியாகும்போது, அடுப்பிலிருந்து இறக்கவும்.

 

க்ரிஸ்பி ஒனியன்


தேவையான பொருட்கள்
 நறுக்கிய வெங்காயம் – 2
 மோர் – 1 கோப்பை
 கோதுமை மா – 1 கோப்பை
 மஞ்சள்தூள் – 1ஃ2 தேக்கரண்டி
 உப்பு
 மிளகுத்தூள்

• முதலில் வெங்காயத்தை மோரில் ஊறவைத்து 1ஃ2 மணி நேரம் விட்டு விடுங்கள். இதற்கிடையில் கோதுமை மாவிற்கு மஞ்சள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
• இப்போது ஊறவைத்த வெங்காயத்தை எடுத்து மாக்கலவையில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.

 

ஒனியன் போண்டா


தேவையான பொருட்கள்
 நறுக்கிய வெங்காயம் – 2
 மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
 நறுக்கிய பச்சைமிளகாய் – 2
 சீரகம்
 கறிவேப்பிலை
 நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
 அரிசி மா – 1ஃ2 கப்
 கடலை மா – 2 மேசைக்கரண்டி
 ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
 உப்பு
 வறுக்க எண்ணெய்

• அரைத்த வெங்காயத்தில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
• சீரகம் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரிசி மாவு மற்றும் கடலை மா சேர்க்கவும்.
• அத்தோடு ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிய உருண்டைகளை உருவாக்கவும். இப்போது கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 

சவுத் இந்தியன் ஒனியன் சட்னி


தேவையான பொருட்கள்
 நறுக்கிய வெங்காயம் – 2
 எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி
 உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
 காய்ந்த மிளகாய் – 2
 புளி ஜூஸ் – 1 தேக்கரண்டி
 நொறுக்கப்பட்ட கருப்பட்டி – 1 மேசைக்கரண்டி

• பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுந்து மற்றும் காய்ந்த மிளகாயையும் போட்டு தாளிக்கவும்
• அடுத்து நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். அது பொன்னிறமாக மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
• அதில் புளி ஜூஸ் மற்றும் கருப்பட்டி வெல்லம் சேர்க்கவும். ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, 1ஃ4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். நன்கு மென்மையாகும் வரை கலக்கவும்.