ஜிம்முக்கு செல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா?

 

எடையைக் குறைத்து, சரியான உடற்கட்டமைப்பை பெறுவதற்கும் அழகாக தோன்றுவதற்கும் பலர் ஜிம் எனப்படும் உடற்பயிற்சியை நாடுகின்றனர். ஆனால் நாம் அனைவரும் பிஸியான வாழ்க்கையால், ஜிம்மிற்குச் சென்று சில நாட்களில் உடற்பயிற்சி செய்வதோடு சோர்வடைகிறோம். பிஸியாகவும் சோம்பலுடனும், உடலில் கவனம் செலுத்துவதும் நாளுக்கு நாள் தள்ளிபோடப்படுகிறது. ஆகவே, உடல் மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி நாளுக்கு நாள் சிந்திக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சில விடயங்களை தருகின்றோம்.

 

காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்

 

நீரிழிவு மற்றும் இதய நோய்களைத் தடுக்கவும் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தவும் சத்தான காலை உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடாமல் இருப்பது மற்றும் காலை உணவை தவிர்ப்பது எடை அதிகரிப்பிற்கு காரணமாகும். காலை உணவு மிக முக்கியமானது. இது உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவுவதோடு உணவு செயற்பாட்டையும் பூர்த்தி செய்கிறது. நீங்கள் காலை உணவைத் தவிர்த்துவிட்டால், அதன் பிறகு வரும் பசி மிகவும் கடுமையானதாக இருக்கும். இது தேவையற்ற அளவிலான உணவை சாப்பிட வைத்து அதன் மூலம் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடலின் திறனை மறைமுகமாக பாதிக்கிறது. எனவே உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பும் எவருக்கும் காலை உணவு மிகவும் அவசியம்.

 

மெதுவாக சாப்பிடுங்கள்

வேகமாக சாப்பிடுவதற்குப் பழக்கப்பட்டவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், நாம் வேகமாக சாப்பிடும்போது, ​​நம் வயிறு நிரம்பியதாகவும், பசியாகவும் இருப்பதற்கான சமிக்ஞைகளை அனுப்ப மூளைக்கு நேரம் எடுக்கும். இதன் விளைவாக, எமக்குத் தெரியாமல் அதிகமான உணவு எமது உடலில் நுழைகிறது. நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம், உணவு நன்றாக அரைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, உமிழ்நீருடன் கலந்து செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், மெதுவாக சாப்பிடுவது எமது வயிற்றை நிரப்பி, பசியைத் தணிக்கும். காலப்போக்கில், இது எடை இழப்புக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

 

உடல் எடையை அடிக்கடி சரிபார்க்கவும்

பெரும்பாலான மக்களுக்கு தெரியாததும் அத்தோடு உடல் எடையை இலகுவாக குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் இதுவே சிறந்த வழியாகும். அதாவது ஒரு நாளைக்கு பல முறை எடையை பாருங்கள். நாம் அதிகமாக சாப்பிட்டு குடிக்கும்போது எம்மை அறியாமலேயே எடை அதிகரிக்கின்றது அத்தோடு, உடலின் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்த முறையின்மூலம் எமக்குத் தேவையான அளவுக்கு எடையைக் குறைக்கவும் அதிக முயற்சி இல்லாமல் பராமரிக்கவும் அனுமதிக்கிறது.

 

வாயை மூடிக்கொண்டு சாப்பிடுங்கள்

எவ்வளவு குறைவாக சாப்பிட்டாலும் சிலருக்கு உடல் பெருத்து காணப்படும். அந்த நிலையிலிருந்து விடுபட இது மிகவும் பயனுள்ள ஆலோசனையாகும். உணவை உண்ணும்போது உணவோடு சேர்த்து காற்றையும் வாயில் நிரப்பாமல், வாயை நன்றாக மூடி, உணவை மென்று சாப்பிடுவதைத்தான் இது உள்ளடக்குகிறது. இந்த முறையின் காரணமாக, உணவைக் கொண்ட காற்று எமது வயிற்றை நிரப்புவதைத் தடுக்கிறது. நாம் சிறிது காலம் இந்த வழியில் சாப்பிடப் பழகினால், அது உடல் எடையை குறைக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

 

மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்குங்கள்

கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோன் உங்களை தேவையில்லாமல் பசியையும், அதிகப்படியான உணவையும் உட்கொள்ள வைக்கும். இது எடை அதிகரிப்பு மற்றும் பல தேவையற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே முடிந்தவரை நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும், போதுமான தூக்கமின்மை பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தூக்கக் கோளாறுகள் இதய நோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்கி, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.