குதிகால் வெடிப்புக்கு சிறந்த மருத்துவம் (பாகம் – 2)

 

குப்பை மேனியும் தேங்காய் எண்ணெயும்

ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை இரவு படுக்கப்போகும் முன் பாதத்தைச் சுத்தமாக தேய்த்து கழுவிட்டு, வெடிப்பு மேல் பூச வேண்டும். தொடர்ந்து இந்த எண்ணெயைப் பூசி வந்தால் பாதவெடிப்பு மறைந்து பளபளப்பாகும்.

 

வினிகரும் ஒலிவ் எண்ணெய்யும்

1/4 கப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் அந்தக் கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைக்கவேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் கிரீம் தடவ வேண்டும். இப்படி செய்து வர பாதவெடிப்பு மறையும்.

 

தயிர்

முதல் நாள் நார் கொண்டு தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயக்க வேண்டும்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மென்மையாக ஆகும்.

 

துளசி பேஸ்ட்

துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.

 

ரோஸ் வோட்டர் மற்றும் கிளிசரின்

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அதில் பாதங்களை இருபது நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் வறட்சியடையாமல் வெடிப்புக்களும் வராமல் இருக்கும்.

 

அரை பக்கட் தண்ணீரும் ஒரு கப் தேனும்

அரை பக்கெட் வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்த நீரில் பாதங்களை பதினைந்து நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமம் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.

 

அரிசிமாவு, தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்

இரண்டு டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள். பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.