வரைபடங்கள் (map) என்பது இன்று எமது சகல பயணங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. ஒரு மேப்பின் மூலம், கடந்த காலத்தைப் போலவே பிற நாட்டையும் உலகத்தையும் பற்றிய தகவல்களை ஆராய பயன்படுத்துகிறோம். மேலும், இன்று ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருக்கும் மேப்ஸ் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறுகிறோம். எளிமையாகச் சொன்னால், இன்று Uber மூலம் ஏதாவது ஓர்டர் செய்து சாப்பிடுவதாக இருந்தாலும் இந்த மேப் முக்கியத்துவம் வகிக்கிறது. அதாவது நமக்கு அருகில் இருக்கும் உணவகங்களைப் பற்றி தெரியப்படுத்தி, ஓர்டர் செய்த உணவு நம்மிடம் வந்து சேரும் வரை சகல படிமுறைகளையும் காட்டும். இது தொழிநுட்பத்தின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால் எதுவாயினும் பழைய மேப்பின் அடிப்படை யோசனை இன்னும் பயன்பாட்டில் உள்ளது. எனவே மேப்களை பற்றி சில மேலதிக தகவல்களை இன்று உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.
எதற்காக இந்த வரைபடங்கள்
இன்று விமானத்தில் செல்லும் போது வான்வழி புகைப்படம் எடுப்பது எளிதான செயல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் வான்வழி புகைப்படம் ஒரு மேப் அல்ல. மேப்பில் நமக்குத் தேவையான சகல தரவுகளும் உள்ளன. விளக்கப்படம் அல்லது மேப்பை போல, வரைபடங்களைப் படித்து எமக்குத் தேவையான தரவை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
வரைபட தயாரிப்பு
உருண்டை வடிவான அந்த உலகப் பந்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். பாடசாலை ஆய்வகத்தில், அதிபர் அலுவலகத்தில் இந்த உலக பந்து இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் நாம் அங்குமிங்கும் சென்று வரும்போது உலகப்பந்தை எடுத்துச்செல்வது எளிதான விடயமொன்றல்ல. எனவே பல்வேறு திட்ட முறைகள் மூலம் வரைபடத்தை ஒரு காகிதத்தில் பெற விரும்பினோம். அந்த நேரத்தில், திசையையும் வடிவத்தையும் காட்ட மிகவும் நியாயமான வழி மெர்கேட்டர் திட்டமாகும். ஆனால் இந்த மெர்கேட்டர் முறையும் சரியானதல்ல. உலக வரைபடத்தைப் பார்க்கும்போது, கிரீன்லாந்தை ஒரு நிலப்பரப்புள்ள நாடாகக் காண்கிறோம். உண்மையில், துருவ தீவான கிரீன்லாந்து ஆபிரிக்காவை விட கணிசமாக சிறியது. ஆனால் மெர்கேட்டர் திட்டத்தால் வரையப்பட்ட வரைபடங்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் நிலப்பரப்பின் திசையையும் வடிவத்தையும் துல்லியமாகக் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது.
விதவிதமான வரைபடங்கள்
கூகிளில் கூட சில வரைபடக் காட்சிகள் உள்ளன. நிலப்பரப்பு வரைபடத்தில் (terrain map) இருந்து மலைகள், பீடபூமிகள் போன்றவற்றின் நிலப்பரப்பைக் காணலாம். ஸ்ட்ரீட் வியூ மூலம் நீங்கள் நிலப்பரப்பை மட்டுமல்ல, வீதியின் தன்மையையும் காணலாம். கூகிள் எர்த் வழியாக எங்கள் வீடுகளையும் வான்வழியாக கூட பார்க்கலாம். ஒரே நிலப்பரப்புகூட வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வரைபடங்களில் காட்டப்பட்டுள்ளது. நாங்கள் காலநிலை வரைபடங்கள், புவியியல் வரைபடங்கள், கனிம சிதறல் வரைபடங்கள் மற்றும் சமீபத்திய நாட்களாக கொரோனா பரவல் வரைபடத்தைக்கூட பயன்படுத்துகிறோம்.
வரலாற்றில் சுவாரஸ்யமான கதைகள்
வரைபடங்களில் வடக்கை நோக்கித்தான் கவனம் செலுத்தப்படுகின்றன. அதனால்தான் இலங்கை பல வரைபடங்களில் கண்ணீர் துளி வடிவத்திலும், மாங்கொட்டை வடிவத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப வரைபடங்களில் கிழக்கு திசையின் அடிப்படையில்தான் வரைபடம் வரையப்பட்டது. முன்பை போல, தவறான தகவல்கள் வரைபடங்களில் ஏற்படுகின்றன. இதன் மூலம் தவறான நகரங்கள், கிராமங்கள் போன்றவை சில வரைபடங்களில் காட்டப்பட்டுள்ளன. வரைபடம் வேறொரு இடத்திற்கு நகலெடுக்கப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் கண்டுபிடிக்கலாம். 1798 ஜேம்ஸ் ரெனெல் ஒரு வரைபடத்தில் ஆபிரிக்காவில் காங் மலைகள் என்று அழைக்கப்படும் ஒரு பரந்த மலைத்தொடர் இருந்ததாக காட்டியுள்ளார். ஆனால் உண்மையில் அத்தகைய இடத்தில் மலைகள் இல்லை. ஆனால் அந்த தவறான வரைபடம் உலகெங்கிலும் உள்ள மக்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.
கடல் உயிரினங்களுக்கு நில வாழ் உயிரினங்களின் பெயர் கிடைத்த வரைபடம்
ரோமானிய தத்துவஞானி பிளினி ஒரு வித்தியாசமான வரைபடத்தை உருவாக்கினார். அதன்படி, கடல் என்பது மற்றொரு நிலமாக கருதப்பட்டது. அதனால்தான் அந்த நேரத்தில் வரைபடம் செய்தவர்கள் கடலில் உள்ள பொதுவான விலங்குகளை நில விலங்குகள் என்று பெயரிட்டனர். அதனால்தான் கடல் பன்றி, கடல் சிங்கம், கடல் நாய் என்று அந்த விலங்குகளுக்கு பெயர் வந்தது. அதில், பூமிக்குரிய விலங்குகளைப் போலவே தோற்றமளிக்கும் விலங்குகள் அவற்றின் கடல் பதிப்புகளாக பெயரிடப்பட்டுள்ளன.
போக்குவரத்து வரைபடம்
வரைபடத்தை நம்பி பயணங்களை மேற்கொண்டு அவதிப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இப்போது நாம் மேப்பை பார்த்தே வாகனம் ஓட்டப் பழகிவிட்டோம். இப்பொழுதெல்லாம் நாங்கள் பஸ்ஸில் ஏறினாலும், எங்கே இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் சொல்லி அவதிப்படாமல், மேப்பை பார்த்து சரியான இடத்தில் இறங்கலாம். இது போன்ற வரைபடங்கள் 1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எரிவாயு நிலையங்களிலிருந்து வெளியிடப்பட்டன. அமெரிக்கா ஒரு பெரிய நாடாக இருப்பினும் அமெரிக்காவில் மக்கள் தொகை அடர்த்தி ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. எனவே தூரத்தில் உள்ள எரிவாயு நிலையங்களுக்குச் செல்ல வழியில் உள்ளவர்களிடம் கேட்டு கேட்டு செல்வது ஒரு வெறுப்பாக மாறியது. அந்த நேரத்தில் அவ்வாறு மேப் கேட்டவர்களுக்கு அந்தப் பகுதியின் வரைபடத்தைக் கொடுத்து, அந்த வழிகேட்கும் பழக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்றதாக வரலாறு கூறுகிறது. இதுவே பின்னர் வரைபடமாக பிரபலமாகிவிட்டதாக கூறுகிறார்கள்.
மேப் இல்லாத உலகம்
ஆங்கிலேயர் இலங்கையிலும் உலகின் பல பகுதிகளிலும் துல்லியமான வரைபடங்களை உருவாக்கினார். ஐரோப்பியர்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்துக்கு வரைபடங்களை உருவாக்கினர். இப்போது போன்ற இலத்திரனியல் வரைபடங்கள் இல்லாத நாட்களில் சாலைகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் அணைகளை உருவாக்குவது உண்மையான சவாலாக இருந்தது. 1900 களின் முற்பகுதியில் இலங்கையில் மலை பகுதிகளில் ரயில் பாதைகளை வடிவமைக்கும்போது, சில இடங்களில் ஒரே பாதைக்கு பல வழிகள் வெளிப்படுத்தப்பட வேண்டியிருந்தது. கடந்த காலங்களில் டச்சுக்காரர்கள் கால்வாய்களை வெட்டிக்கொண்டிருந்தபோது, களனி நதியையும் பாணந்துறை பக்கத்தையும் இணைக்க ஒரு கால்வாய் வெட்டப்பட்டபோது, மாலபே பக்கத்தில் உள்ள மலைப்பகுதி அவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. ஆனால் நமது சொந்த வரலாற்றில் மன்னர்களின் காலத்தில் நீர்ப்பாசன முறைகள் எவ்வளவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன என்பது இன்றும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
கூகிள் மேப் மற்றும் இணைய வரைபடம் வழங்கும் சேவை மிகப்பெரியது. வழியைக் கண்டுபிடிப்பதற்கும், டெங்கு மற்றும் கொரோனா பரவுதல் போன்ற தொற்று நோய்கள் பரவும் இடங்களை பார்ப்பதற்கும் வரைபடங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. டெலிகொம் டவர் மூலம் நாங்கள் பெறும் தொலைத் தொடர்பு சேவைகளைப் பெற அவர்கள் வரைபடங்களை பயன்படுத்துகிறார்கள். சாலை கட்டுமானம், தகவல் தொடர்பு, கப்பல் போக்குவரத்து, கனிம மற்றும் வள ஆய்வு உள்ளிட்ட பல விடயங்களில் வரைபடங்கள் மிக முக்கியமாக மாறியுள்ளன.