சோயா மீட் பல சைவ உணவு உண்பவர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் சோயாமீட்டை ஒரே மாதிரியாக மட்டுமே சமைக்க தெரிந்திருப்பதால் தங்கள் உணவில் சோயாமீட்டை சேர்க்க நினைப்பதில்லை. எனவே சோயாமீட் இரசிகர்களுக்காக சோயாமீட்டை வைத்து வெவ்வேறு விதவிதமான சுவைகளுக்கு சமைக்க கூடிய சில சமையல் குறிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம்.
சோயாமீட் கட்லட்
தேவையான பொருட்கள்
- சோயாமீட் – 1 பக்கற்
- வேகவைத்த உருளைக்கிழங்கு – 3
- நறுக்கிய வெங்காயம் – 2
- நறுக்கிய வெள்ளைபூண்டு – 2 பல்
- மசாலா தூள் – 1/3 தேக்கரண்டி
- நறுக்கிய பச்சை மிளகாய் – 3
- ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள்
- சுவைக்கேற்ப காய்ந்த மிளகாய் துண்டுகள்
- சிறிது கோதுமை மாவு மற்றும் மஞ்சள்தூள்
- பிஸ்கட் தூள்
- சோயாமீட்டை எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் போட்டு 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்னர் அந்த தண்ணீரை வடித்து விட்டு நன்கு பிழிந்தெடுக்கவும்.
- பிறகு அதை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து, அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், காய்ந்த மிளகாய், மசாலாத்தூள் போட்டு பிரட்டிக்கொள்ளவும்.
- ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதில் சோயாமீட்டை போட்டு அத்தோடு அவித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பிறகு ஆறவிட்டு கட்லட் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
- கோதுமை மா, உப்பு மற்றும் மஞ்சள்தூளிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும். அந்த திக்கான கலவைக்குள் உருண்டைகளை போட்டு நனைத்து பிஸ்கட் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.
சோயாமீட் பிஸ்டேக்
தேவையான பொருட்கள்
- சோயாமீட் – 1 பக்கற்
- வட்டமாக வெட்டிய வெங்காயம் – 3
- நறுக்கிய குடை மிளகாய் – 2
- மிளகு தூள் மற்றும் உப்பு சுவைக்கேற்ப
- வினிகர் – 1 மேசைக்கரண்டி
- கொரக்கா துண்டுகள் – 2
- மஞ்சள் துள் – சிறிதளவு
- சர்க்கரை -1/2 தேக்கரண்டி
- இலவங்கப்பட்டை ஒரு துண்டு
- ஏலக்காய் விதைகள் – 3
- கராம்பு – 5
- ரம்பை, கறிவேப்பிலை
- நொறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு ஒரு டீஸ்பூன்
- சோயாமீட்டை மஞ்சள், கொரக்கா மற்றும் உப்பு கலந்த நீரில் வேகவைக்கவும். வேகவைத்த சோயாமீட்டில் இருந்து தண்ணீரை நன்றாக பிழிந்து விடுங்கள்.
- சிறிது எண்ணெய்யை சூடாக்கி ஏலக்காய், கராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு, ரம்பை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை மணம் வரும்போது, சிறிது வெங்காயம், வினிகர், சர்க்கரை, மிளகு, உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
- அதில் குடைமிளகாய் சேர்த்து, நன்கு கலந்துவிட்டு தண்ணீர் வடித்த சோயாமீட்டையும் சேர்க்கவும். வெப்பத்தை குறைத்து மூடி, சுமார் 3 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
சோயாமீட் பர்கர்
தேவையான பொருட்கள்
- சோயாமீட் – 2 கோப்பை
- கோதுமை மா – 1/2 கப்
- வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு
- அரைத்த மொஸரெல்லா சீஸ் – 1/2 கப்
- சோயா சோஸ் மேசைக்கரண்டி- 1/2 கப்
- தக்காளி சோஸ் – 1/2 மேசைக்கரண்டி
- சுவைக்கேற்ப மிளகு தூள்
- சுவைக்கேற்ப உப்பு
- தேன்
- சோயாமீட்டை சூடான உப்பு நீரில் ஊறவைத்து, தண்ணீரை பிழிந்து எடுக்கவும், பிறகு கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கப்பட்ட சோயாமீட்டில் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதில் கொஞ்சம் எடுத்து, உருண்டைகளை எடுத்து, தட்டையான லன்ச் சீட் அல்லது க்ளிங் ரெப்பில் போட்டு மூடி ஒரு மணி நேரம் வரை டீப் பிரீசரில் வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் போட்டு இருபுறமும் மிதமான வெப்பத்தில் போட்டு சுட வேண்டும்.
சோயாமீட் டெவல்
தேவையான பொருட்கள்
- சோயாமீட் – 1 கப்
- நறுக்கப்பட்ட லீக்சின் உற்பகுதியின் ஒரு பகுதி
- நறுக்கிய தக்காளி – 2
- நறுக்கிய கறிமிளகாய் – 2
- பெரிதாக நறுக்கிய வெங்காயம் – 2
- கட்டர்தூள் – அரை மேசைக்கரண்டி
- மிளகு – ஒரு மேசைக்கரண்டி
- சோயா சோஸ் – 2 மேசைக்கரண்டி
- தக்காளி சோஸ் – 2 மேசைக்கரண்டி
- கோர்ன்ஃப்லோர் – 1/2 மேசைக்கரண்டி
- நொறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் பூண்டு – 2 மேசைக்கரண்டி
- நொறுக்கப்பட்ட ஏலக்காய் மற்றும் கராம்பு – 2
- சோயாமீட்டை சூடான உப்பு நீரில் ஊறவைத்து தண்ணீரை நன்கு வடித்து எடுக்கவும். வடித்த சோயாவை கொதிக்கும் எண்ணெயில் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் பொரித்தெடுக்கவும்.
- ஒரு தனி கிண்ணத்தில் சிறிது எண்ணெய் நொறுக்கப்பட்ட ஏலக்காய், கராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, கட்டர் தூள் சேர்த்து கலக்கவும். அதில் இரண்டு சோஸ்களையும் சேர்க்கவும். கோர்ன்ஃப்லோரை 1/4 கப் தண்ணீரில் கரைத்து இதில் சேர்க்கவும்.
- கலவை கெட்டியாகும்போது, சோயாமீட் சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காயம், லீக்ஸ், கறிமிளகாய், தக்காளி ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.
- ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும்.