தெருவில், அலுவலகத்தில், வகுப்பில் நீங்கள் சந்திக்கும் ஒரு அழகான ஆணிடம் மனதை பறிகொடுத்து விட்டீர்களா? ஆனால் அதை அவரிடம் சொல்லாமல் சொல்ல வேண்டுமாயின் என்ன செய்யலாம்? ஒரு முயற்சியும் இல்லாவிட்டால் நீங்கள் அவரை விரும்புவதை அவர் எப்படி அறிவார்? இது அந்த வேலையை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது பற்றியது. தங்கள் உணர்வுகளை காதலனிடமிருந்து மறைக்க முயற்சிப்பது பெரும்பாலான பெண்கள் செய்யும் விடயமாகும். இறுதியில் அந்த ஆணும் குழம்பி அருகில் இருப்பவர்களும் குழம்பிப் போய்விடுவார்கள். அதனால் நீங்கள் இதைப் படித்துவிட்டு இதன்படி செய்யத் தொடங்கினால், எந்த வம்பும் இல்லாமல் எளிதாக காதலிக்கலாம், திருமணமும் செய்யலாம்.
வெட்கத்துடன் கலந்த புன்னகை
சிரிப்பு என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. எந்தவொரு நீண்ட கால உறவும் இந்த எளிய சிரிப்போடு தான் தொடங்குகிறது. எனவே உங்களது மனம் பறிபோன ஆணிடம் இந்த வேலையை செய்ய கொஞ்சம் சிரிப்போடு தொடங்க வேண்டும். பெரும்பாலும் நீங்கள் அந்த பையனைப் பார்க்கும்போது, ஒரு நல்ல அழகான சிரிப்பை வெளிப்படுத்துங்கள். ஆனால் இந்த முப்பத்திரண்டு பற்களும் தெரியுமாறு ஒரு புன்னகையை மட்டும் தயவு செய்து வெளிப்படுத்தி விட வேண்டாம். அவர் உங்களை கண்டு கவர்ந்து வருவதற்கு பதிலாக பைத்தியக்காரி என்று பயந்து ஓடி விடுவார். நீங்கள் வெட்கத்துடன் ஒரு முறை அவரை பார்க்க வேண்டும், கொஞ்சம் சிரிக்க வேண்டும், சிறிது குறுகுறு பார்வையும் இருக்க வேண்டும், தரையைப் பார்த்து வெட்கத்துடன் கலந்த ஒரு நடையும் இருந்தாலும் நல்லது தான். எப்படியிருந்தாலும், அவர் உங்களுக்கு ஒரு சிறப்பு நபர் என்பதால், அவரது இதயத்தில் இருந்து அவரது ஆசையை வெளிப்படுத்தவும் இடமளிக்கவும்.
கண்களால் வசீகரித்தல்
கண்களால் கட்டி இழுத்து வசீகரிப்பது ஒன்றும் பெண்களுக்கு புதிதல்ல. பெண்கள் தமது கண்களை வைத்து எதைச் செய்தாலும் அது ஆண்களை வசியப்படுத்தி விடும். அதாவது, சம்பந்தப்பட்ட நபரின் கவனத்தைப் பெற சிறிது கண்ணால் தொடர்பு கொள்ளவும் வேண்டும். சுற்றிப் இருப்பவர்களுக்கு தெரியாமல் கண்களாலே செய்கையில் பேசுவது பெண்களுக்கு கைவந்த கலையாயிற்றே. இரு கண்களாலும் பேசும் முறை, பெண்களுக்கு புதிதல்ல. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இருக்கும்போதெல்லாம் நீங்கள் அவரை கண்ணால் கவர்ந்து பிடிக்க முடியும். ஆனால் காத்திருந்து பார்க்க வேண்டாம். அவரை பிடித்து ஒரு தனி காட்டில் போட்டு விடுவது போல உருக்கமாக பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறீர்கள் என்பதை தன்னாலே புரிந்துகொள்வார்.
தலைமுடி
பெண்களின் தலைமுடி என்பது ஆண்கள் மிகவும் பலவீனமாகிவிடும் ஒரு இடமாகும். ஏனெனில் அவர்களுக்கு நீண்ட கூந்தல் இல்லை என்பதனாலோ என்னவோ பெண்களின் முடியை அதிகமான ஆண்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த முடியை வைத்து வசியப்படுத்துவது இங்கேயும் செய்யப்படலாம். மற்றும் ஒரு ஆணின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். அதற்கென்று நீங்கள் நீண்ட முடி வைத்திருக்க வேண்டியதில்லை. மேலும் உங்கள் தலைமுடியின் நீளம் என்ன என்பது முக்கியமல்ல, முடியை பின்னால் இழுப்பது, முன்னோக்கி போடுவது, விரல்களால் கொதி விடுவது போன்ற பல வகையான முடி ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றில் சிலவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
எந்நேரமும் வாழ்த்து
எல்லோரும் பாராட்ட வேண்டும் என்பது பலரது ஆசைதானே. ஆண்களும் அதையே விரும்புகிறார்கள். முன்பு குறிப்பிட்ட மென்மையான புன்னகையுடனும், தலைமுடி வசீகரிப்புடன் நீங்கள் ஒரு ஆணை கவர்ந்துவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அவரைப் பற்றி விசேடமாக அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும் இப்போது அவருக்கு சிறிது தெரியும். அடுத்த விஷயம் என்னவென்றால், அவரை ஒரு உயர்ந்த நிலைக்கு வைத்திருப்பது. அவரது அழகையும், அவருடைய நல்லொழுக்கங்களையும், திறன்களையும் அவ்வப்போது பாராட்டுங்கள். அவர் உங்களுக்கு சிறப்பானவர், தனித்துவமானவர் என்று அவர் புரிந்துகொள்ளும்வரை இதனைச் செய்யுங்கள். அவரைப் பாராட்டும் ஒரு பெண் நல்லவள் என்றும் அவன் நினைக்கிறான்.
நகைச்சுவை
பெண்கள் ஒன்றாக சிரித்து பேசி பழகிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அவரை அடிக்கடி அழைத்துச்செல்லுங்கள். உங்களது கதையைப் பிடிக்க இதுவே சிறந்த வழியாகும். நீங்கள் சென்று நேரடியாகப் பேசினால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் இதற்குத்தான் முயற்சிக்கிறீர்கள் என்று விலங்கிவிடும். ஆனால் நகைச்சுவையாக அவரிடம் வரும்போது, யாரும் சந்தேகிக்காமல் அவருக்கு மாத்திரம் புரியும்படி செயற்பட முடியும். பெண்கள் இருக்கும் இடத்திற்கு எந்த ஆண் போக விருப்பப்படாமல் இருப்பான். இதற்கிடையில், நீங்கள் அவரை உரையாடலுக்கு இழுக்கும்போது, நீங்கள் என் மீது ஆர்வம் காட்டுகிறீர் என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.
பெண்ணிய குணங்கள்
ஒரு பெண் எவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாலும், அவளுக்கு அச்சம், மடம், நாணம் போன்ற குணங்கள் இல்லையென்றால் மதிப்பில்லை. அதாவது, ஆண்களுக்கு மத்தியில் பயமின்றி எந்நேரமும் புகுந்து கதைக்கும் திறன் உள்ள பெண்ணாக இருப்பது தற்காலத்திற்கு மிகவும் அவசியம்தான். ஆனால் பெரும்பாலான ஆண்கள் பெண்களை பெரிதும் தைரியமான சிங்கங்களாக பார்க்க ஆசைப்படுவதை விட நளினம், கவர்ச்சி, அழகு, பெண்பாலின குணாதிசயங்கள் கொண்ட ஒருவராகவே அதிகம் பார்க்க ஆசைப்படுகின்றனர். ஒரு ஆண் அப்படியான தைரியமான பெண்ணிய தன்னுள் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டாவிட்டாலும் காதலியாக ஏற்றுக்கொள்ள பெரிதும் யோசிக்கிறார்கள். அதனால் அழகு, அறிவு என்பவற்றில்கூட பெண்ணிய குணங்களும் வெட்க சுபாவமும் இருப்பதும் நன்று.
அடிக்கடி உதவி
ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கு உதவ விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு முறை மட்டுமே கூப்பிட்டால் போதும் ஓடிவந்து செய்து தருவார்கள். அவர் ஒரு ஹீரோ என்பதைக் காட்ட அவர் விரும்புவதால் இதனைச் செய்கிறார். எனவே நீங்கள் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றும் இந்த வேலையை எளிதாக செய்து முடிக்கலாம். பேசிப் பழகியதும் நீங்கள் அவரிடம் சிறு சிறு உதவி கேட்கலாம். கணினி சிக்கல் போன்ற விஷயங்கள், குறிப்புகளை போட்டோ கொப்பி எடுப்பது, புகைப்படத்தை எடிட் செய்வது போன்றவை அவர்களுக்கு பழக்கமானவை. அன்றாட வேலைகளில் உங்களுக்கு அடிக்கடி அவரது உதவி தேவைப்படுகிறது போல காட்டிக்கொள்ளவும். நீங்கள் உதவி கேட்கலாம் மற்றும் அவரது கவனத்தை ஈர்த்து இரண்டு அல்லது மூன்று பணிகளை ஒரே நேரத்தில் முடிக்கலாம்.