எலிகளை பற்றிய சுவாரஷ்யமான உண்மைகள்

 

எலிகள் என்றால் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கொறித்து தள்ளும் குறும்புத்தனமும் தலையிடியையும் தரக்கூடிய ஒரு உயிரினம் என்றே அனைவரும் கூறுவர். பிரபல டொம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களில் ஜெர்ரி கதாப்பாத்திரமாக இருப்பதும் ஒரு எலி என்பதை எம்மால் மறுக்க முடியாது. பொதுவாக ஒரு வீட்டில் இருப்பவற்றை நாசப்படுத்தும் இந்த எலிகளை பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

 

உலகெங்கிலும் எலி

பொதுவாக சொல்லப்போனால் எலிகள் இல்லாத இடமே இல்லை. கொசுக்கள் மற்றும் ஈக்கள் போல வெப்பமண்டலங்களில்தான் இவை வாழும் என்பதில்லை. இந்த எலிகளுக்கு எத்தகைய பிராந்திய மாற்றம் என்றாலும் கவலையே இல்லை. கடுமையான குளிர்காலம் நெருங்கி வரும் லண்டன், நியூயோர்க் மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களிலும் இந்த எலி ஒரு பெரிய தொல்லையாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவில், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில்கூட எலி தொல்லை இருக்கத்தான் செய்கிறது. 2016 ஆம் ஆண்டில், இந்த எலி தொல்லை காரணமாக, லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள பூங்காக்களில் இரவு நேரங்களில் விளக்குகள்கூட அணைக்கப்பட்டன.

 

பெரிய எலி

2009 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய உள்நாட்டு எலிகளில் ஒன்று பதிவு செய்யப்பட்டது. போசாவி கம்பளி எலி என்று அழைக்கப்படும் இந்த எலி வாலுடன் சேர்த்து 32 அங்குல நீளம் கொண்டது. சுமார் இரண்டரை அடி நீளம் கொண்டது. மேலும், இந்த எலி 1.36 கிலோ எடைக்கொண்டது. பொதுவாக பன்றி எலிகள் என்று அழைக்கப்படும் உள்நாட்டு எலிகள் போல இந்த எலிகள் பெரிதாக வளராது. அத்தகைய  அவை ஒரு கிலோவுக்கு மேல் வளரும்.

 

குறுகிய கால இனப்பெருக்கம்

எலி இனப்பெருக்கம் செயன்முறை என்பது எலிகளின் தனித்துவமான ஒரு நிலையாகும். ஐந்து வாரங்களுக்குள், ஒரு எலி முதிர்ச்சியடைந்து குட்டிகளைப் பெற்றெடுக்க முடியும். அவைகளுக்கு இரண்டு வருடங்கள் அந்த திறன் அப்படியே இருக்கும். இந்த எலிகளில் ஒன்றுக்கு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை குட்டியீன்று எடுக்க முடியும். ஆறு மணி நேரத்திற்குள் எலிகள் நூற்றுக்கணக்கான முறை உடலுறவு கொள்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் இனப்பெருக்க செயன்முறையிலும் இனைந்து துணையாகி பிரசவித்து குட்டியீன்று எடுக்க மொத்தம் மூன்று வாரங்கள் மட்டுமே எடுக்கும். தாய் எலி ஒரு நேரத்தில் 6 முதல் 20 இளம் குட்டிகளை பெற்றெடுக்கிறது. எனவே இந்த விரைவான இனப்பெருக்கம் ஒரு ஜோடி எலிகள் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான எலிகளை இனப்பெருக்கம் செய்யக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

 

கடலிலும் எலிகள்

டைட்டானிக் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தால், கப்பல் மூழ்கும்போது எலிகள் ஓடும் காட்சி இருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். இந்த அடிப்படையில் கூட எலிகள் எங்கும் இருக்கும் என்பதை கவனிக்கலாம். கப்பல்களில் கூட எலிகள் இருப்பதால், உலகம் முழுவதும் மனிதர்களுடன் பயணம் செய்த மற்றொரு விலங்காகவும் எலி காணப்படுகிறது. சில வணிகங்கள் கூட எலிகளால் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான உணவகங்கள் எலிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், எலிகள் சில சமயங்களில் டெலிகமியூனிகேஷன் கம்பி மற்றும் ஆப்டிகல் கேபிள்களை கூட கொறிப்பதன் மூலம் மில்லியன் கணக்கான நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

 

கடினமான பொருட்களை கடிக்கும்

சராசரியாக ஒரு விலங்கு தன்னால் சாப்பிடக்கூடியதை மட்டுமே சாப்பிடுகிறது. ஆனால் எலிகள் அப்படி இல்லை. எலிகளால் சாப்பிட முடியாத எதுவும் இல்லை. எலிகள் பலகைகள், செருப்புகள், சோப்பு, பிளாஸ்டிக் மற்றும் கடினமான பொருட்களை கூட சாப்பிடுகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எலிகளின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று. அவை எதையும் கொறிக்காமல் அப்படியே வெறுமனே இருந்தால், அந்த பற்கள் வளர்ந்து அதற்கு எரிச்சலை தரக்கூடிய ஒன்றாக மாறிவிடும். எனவே எலி எப்போதும் தனது பற்களை அழகாக, அளவாக வைத்துக்கொள்ள கடினமான பொருட்களை போய் கடிக்கும்.

 

சீன எலியாண்டு

சீனா விலங்குகளை சாப்பிடுவதற்கும் விலங்குகளின் புனிதத்தைப் பார்ப்பதற்கும் பெயர்போன ஒரு பிரபலமான நாடு. சீன ராசியின் படி 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996 மற்றும் 2008 ஆகியவை சீன எலிகளின் இராசி ஆண்டுகள் ஆகும். சீன மக்கள் எலிகளின் அழகிய உருவத்துடன் எலி ஆண்டைக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டில் பிறந்த மக்களின் பண்புகள் குறித்து சீனாவில் ஒரு பாரம்பரியம் கூட உள்ளது.

 

எலிகளின் எதிரிகள்

எலிகள் ஆந்தைகளால் உண்ணப்படுகின்றன. இலங்கையில், எலிகளை சாப்பிட வரும் பாம்புகளை காணலாம். எலிகள் மற்றும் பூனைகள் பற்றிய கார்ட்டூன் இருந்தாலும், இப்பொழுதுள்ள பல பூனைகள் எலிகளைப் பிடிப்பதாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம், எலிகள் மனிதர்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எலிகளைப் பிடிக்க பல பொறிகள் உள்ளன. மேலும், எலிக்கு வைக்கும் விஷம் கூட பிரபலமாகிவிட்டது.

எலிகள் ஒரு பொதுவான இனம். அவற்றின் உள் அமைப்பு பாலூட்டிகளின் எளிய வடிவமாகும். எனவே, எலிகள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் எலிகள் சாப்பிடவில்லை என்றாலும், அவை சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவாக காணப்படுகின்றன.