வாசனை திரவியம் அல்லது பேர்பியூம்ஸ் (Perfume) என்பது நம்மில் பலருக்கும் நன்கு அறியப்பட்ட மற்றும் பிடித்த விடயமாகும். சில தரம்குறைந்த பேர்பியூம்களை தெருக்களில் இலாப விலைக்கு விற்பதால் அதனையும் வாங்கிவிடுகின்றனர். அவற்றை பொதுப்போக்குவரத்தின் போதும பயன்படுத்தி மற்றவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிவிடுவர். காரணம் அந்த வாசனை சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பேர்பியூம்களை சரியாக தேர்ந்தெடுத்து பாவிப்போமேயானால் இது மற்றவர்களை கவர்ந்திழுக்கும், மனநிலையை மாற்றும். ஆகவே சரியான வாசனை திரவியங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
வாசனை திரவியங்களின் வாசனை அடுக்குகள் (smell layers of perfumes)
வாசனை திரவியங்களின் மணம் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளன. இந்த அடுக்குகளை perfume notes என்று அழைக்கிறார்கள். ஒரு வாசனை திரவியத்தை நாங்கள் பயன்படுத்திய பிறகு, தொடர்ந்து ஒரே வாசனையை மாத்திரம் உணர மாட்டீர்கள், நேரம் செல்லச் செல்ல அதன் பல்வேறு வாசனைகளை நிலைகளில் உணருவீர்கள்.
- top notes – ஒரு பேர்பியூமை ஸ்பிரே செய்தவுடன் உங்கள் மூக்கு உணரும் வாசனை இது. இந்த வாசனை விரைவாக போய் விடும்.
- middle notes – ஸ்ப்ரே செய்தவுடன் வந்த வாசனை போன பிறகு முதலில் தோன்றும். பேர்பியூன் ஒன்றின் அடிப்படை வாசனை இது.
- base notes – இது முன்னர் குறிப்பிட்ட middle notes உடன் வரும் வாசனை. பேர்பியூம் சிறிது நேரம் பயன்படுத்தப்பட்ட பிறகு இந்த வாசனை தோன்றும்.
எனவே வாசனை திரவியத்தை வாங்கும் போது இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் ஸ்ப்ரே செய்யும் போது இருக்கும் வாசனை ஸ்ப்ரே செய்து முடிந்து சிறிது நேரம் கழித்து மாறக்கூடும்.
பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின்படி வகைகள்
தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொறுத்து பல வகையான வாசனை திரவியங்கள் உள்ளன.
- fresh – இவை சிட்ரஸ் பழங்கள், நீர் மற்றும் இயற்கை மூலிகைகளின் கலவையை கொண்ட நறுமணம்.
- floral – இவை மலர் வாசனை கொண்டவை. இது மிகவும் பிரபலமான மூலபொருட்களில் ஒன்றாகும். இந்த மலர் வாசனை பெண்களுக்கு தனித்துவமானது மற்றும் கவரும் நறுமணம் கொண்டது.
- oriental – வெண்ணிலா, இலவங்கப்பட்டை, கிராம்பு போன்ற காரமான வாசனை கொண்டவை இவை.
- woody – sandals, சிடார் மற்றும் cevendra போன்ற வாசனை திரவியங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
அடுத்து நாம் வெவ்வேறு வாசனை திரவிய வகைகளைப் பற்றி பேசுவோம். இது 5 அடிப்படை வகைகளின் கீழ் விபரிக்கப்படலாம்.
பேர்பியூம் ( Perfume )
இவை நறுமண எண்ணெய்களின் அளவு அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளது. லேபிளில் perfume என்று குறிப்பிடப்படுவதோடு மட்டுமல்லாமல், போத்தல்களில் சற்று கனமான தோற்றமும் அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது. இது மிகவும் விலையுயர்ந்த மற்றும் மணம் கொண்ட வாசனை திரவியங்களில் ஒன்றாகும். இவை உடல் முழுவதும் பயன்படுத்தப்பட மாட்டாது. நறுமணம் அதிகமாகவும் இலகுவாகவும் பரவக்கூடிய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்ப்படுகிறது. வாசனை சுமார் 8 மணி நேரம் வரை நீடிக்கும்.
Eau de Perfume
அடுத்ததாக அதிக நறுமணத்தை அளிக்கும் ஒரு வாசனைத்திரவியம் என்றால் இதுதான். இதில் சுமார் 10% முதல் 15% நறுமண எண்ணெயின் அளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே மீதமுள்ளவை ஆல்கஹோல் மற்றும் தண்ணீர். ஆனால் இதுவும் முன்னர் குறிப்பிட்ட அதே perfume குடும்பத்திற்கு சொந்தமானது தான். ஆனால் வாசனை அவ்வளவு நேரம் நீடிக்காது. வாசனை பொதுவாக 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே நீடிக்கும். முந்தைய வகையுடன் ஒப்பிடும்போது விலை குறைவாக இருக்கும். முந்தைய வகையைப் போலவே, இது ஒரு ஸ்டாப்பர் அல்லது ஸ்ப்ரே போத்தலில் சந்தையில் காணலாம்.
Eau de Toilette
இது மற்ற இரண்டையும் விட குறைவாக 4% முதல் 15% குறைவான மணம் கொண்டது. பெரும்பாலும் ஸ்ப்ரே போத்தல்களாக இவை காணப்படும். மேலும் இந்த வகை வாசனை திரவியங்களில் ஆல்கஹோலின் கலவை அதிகம். இதன் விளைவாக, அது விரைவாக வாசனை இழந்து விடுகின்றது. வாசனை அதிகபட்சம் 2 முதல் 3 மணி நேரம் நீடிக்கும்.
Eau de Cologne
இந்த கொலோன் வகைகள் மிகவும் பிரபலமான ஆண் வாசனை திரவியங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த வகையின் கீழ் வரும் பெண் வாசனைத்திரவியங்கள் இல்லாமல் இல்லை. இந்த வகை வாசனையில் 2% முதல் 5% வரை மிகக் குறைந்த அளவிலேயே நறுமண எண்ணெய் கொண்டுள்ளது. இதன் விளைவாக இது மிகவும் குறைந்த விலை மற்றும் அடர்த்தியானது. மேலும், கொலோன் எனப்படும் இந்த வகையின் கீழ் உயர் தரமான வாசனை திரவியங்கள் எதுவும் இருப்பதில்லை. வாசனை அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Eau Fraiche
இது மலிவான மற்றும் மிகவும் குறைந்தளவு நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களில் ஒன்றாகும். ஒருமுறை பயன்படுத்தினால், நறுமணம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் மறைந்துவிடும். பிரெஞ்சு வார்த்தையான ஈ ஃப்ரைச் என்றால் பிரஷ் வோட்டர் என்று பொருள். இது மணம் கொண்ட நீர் போன்றது. இதன் மூலம் இதனது அடர்த்தி எவ்வளவு குறைவாக உள்ளது என்பதை அறியலாம்.