வீட்டுத்தோட்டத்தில் இரண்டு விதைகளை வீசினாலே போதும், பூசணிக்காய் தானான வளரும் என்பார்கள். உண்மையில் இதன் பெயர் பூசணிக்காயா என்ற சந்தேகமும் பலரிடம் உண்டு. பெரும்பாலும் சிங்களத்தில் வட்டக்காய் என்பார்கள். இதே பெயரை பலர் தமிழிலும் பயன்படுத்துவர். அத்தோடு, பறங்கிக்காய் என்றும் கூறுவார்கள். இது இதய ஆரோக்கியம், உடல் எடையை குறைக்க மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய காய்கறியாகும். இந்த பூசணிக்காயிலிருந்து தயாரிக்கக்கூடிய சில சுவையான சமையல் குறிப்புகளுடன் இங்கே வந்துள்ளோம்.
பூசணி உளுந்து வடை
தேவையான பொருட்கள்
- ஊறவைத்து அரைத்த உளுந்து – ஒரு கப்
- தோலுரித்து அவித்த பூசணிக்காய் – அரை கப்
- பாதி நறுக்கிய வெங்காயம்
- நறுக்கிய பச்சை மிளகாய் – 2
- சீரகம்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- முதலில் அரைத்த உளுந்தில் பூசணிக்காயைச் சேர்த்து ஒரு மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கடுகு, சீரகம், உப்பு சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கவும்.
- பிறகு அதை உளுந்து வடையை போல பொரித்து எடுத்தால் சுடச்சுட பூசணி உளுந்து வடை தயார்.
பம்ப்கின் சூப்
தேவையான பொருட்கள்
- ஒலிவ் ஒயில் – 2 தேக்கரண்டி
- மெல்லிதாக நறுக்கிய வெங்காயம்
- மசித்த வெள்ளைப்பூண்டு – 2 பிக்
- வெட்டிய பூசணி – 2 கப்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்
- பிரஷ் கிரீம் – 4 மேசைக்கரண்டி
- பேன் ஒன்றில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை தாளிக்கவும். பிறகு அதில் வெள்ளைப்பூண்டையும் சேர்க்கவும்.
- அது நன்றாக சூடாகி வரும்போது, பூசணிக்காயையும் சேர்க்கவும். சுவைக்கு ஏற்ப அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து பூசணி சிறிது வேகும் வரை மூடி வைக்கவும்.
- பூசணி நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து நீக்கி, பிரஷ் கிரீம் சேர்த்து ப்ளெண்ட் செய்து கொள்ளவும். அதன் மேலே சிறிது மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
பம்ப்கின் பிரைஸ்
தேவையான பொருட்கள்
- குச்சிகளாக வெட்டிய பூசணிக்காய் – 500 கிராம்
- பூண்டு தூள் – 1 டீஸ்பூன்
- வெங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு
- ஒலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- வெட்டப்பட்ட பூசணிக்காயுடன் மேலே கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது பேக்கிங் பேப்பரில் (ஆயில் பேப்பரில்) வரிசையாக போட்டு ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும், 180 c வெப்பநிலையில் ஒரு சூடான ஒவனில் போட்டு 30 நிமிடங்கள் வரை சுடவும்.
பம்ப்கின் கேக்
தேவையான பொருட்கள்
- அரைத்த பூசணிக்காய் 500 கிராம்
- சர்க்கரை – 100 கிராம்
- உப்பு – ஒரு சிட்டிகை
- முட்டைகள் – 4
- மரக்கறி எண்ணெய் – 50 மில்லிலீற்றர்
- கோதுமை மா – 170 கிராம்
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- இதில் உள்ளவை அனைத்தையும் போட்டு மிக்ஸ் செய்து ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் போட்டு, 40-50 நிமிடங்கள் வரை 180 c க்கு சூடான ஒவனில் சுடவும்.
பம்ப்கின் ரைஸ்
தேவையான பொருட்கள்
- நறுக்கிய பூசணிக்காய் – 500 கிராம்
- நறுக்கப்பட்ட சொசேஜஸ்
- நறுக்கிய காளான் (கழுவி எடுத்தது) – 1/2 கப்
- நறுக்கிய இறால்கள் – 100 கிராம்
- துண்டு துண்தாக வெட்டப்பட்ட கோழி இறைச்சி – 100 கிராம்
- சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
- சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
- சிறிதாக நறுக்கிய பூசணி – 1 கப்
- அரிசி – 1 கப்
- உப்பு
- பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து கோழியிறைச்சியை போட்டு பொரித்துக்கொள்ளவும். பின்னர் காளான், சொசேஜஸ் மற்றும் இறால்களை சேர்க்கவும். அதையும் பொரித்துக்கொள்ளவும்.
- அதிலேயே சர்க்கரை, சோயா சோஸ், 1/2 கப் தண்ணீர், பூசணி துண்டுகளையும் சேர்த்து போட்டு 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவேண்டும்.
- அரிசியை கழுவி, போதுமான தண்ணீர், உப்பு மற்றும் சோயா சோஸ் சேர்த்து தனியாக அடுப்பில் வைக்கவும்.
- அரிசி கொதித்து வரும் போது அதன்மேல் சமைத்த கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
பூசணி ரொட்டி
தேவையான பொருட்கள்
- துண்டுகளாக வெட்டிய பூசணி – 1 கப்
- சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
- அரிசி மா – 280 கிராம்
- வெட்டிய பூசணித்துண்டுகளை கொதிக்க விட்டு எடுக்கவும். இப்போது கொதித்து வடித்த பூசணியில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- இதில் சிறிது அரிசி மா சேர்க்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து ஒரு மென்மையான மாக்கலவையை தயாரிக்கவும்.
- பிறகு உருண்டைகளாக செய்து ரொட்டி போல எண்ணெய் தடவி தடவி சுட்டு எடுக்கவும்.