உலகில் ஒரு சில பணக்கார நாடுகளாகவும் அந்த நாடுகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கிறார்கள். எம்மை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அடுத்த கட்டத்தில் உள்ளன. அவற்றில் சில ஏழ்மையான நாடுகளும் உள்ளன. இந்த ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் பல காரணங்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகள் இலங்கையை விடவும் ஏழ்மையாக இருந்தன. ஆனால் பின்னர் அந்த நாடுகளின் மக்கள் மூலம் அபிவிருத்தியின் பக்கம் முன்னேற முடிந்தது. இதன்படி வறுமைக்கான காரணம் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம். இதனை வைத்து எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நாமே சிந்தித்து பார்க்க வேண்டும்.
புவியியல் அமைப்பு
மத்திய ஆபிரிக்க குடியரசு, ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற உள்நாட்டு நாடுகளை உதாரணத்திற்கு எடுக்கலாம். அதாவது அந்த நாட்டின் எல்லையில் கடல் இருக்காது. சுற்றுவட்டாரம் பெரிதும் இன்னொரு நாட்டினது எல்லையாகத்தான் இருக்கும். பின்னர் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பொருட்களைக் கொண்டு வருவதற்கு நிறைய செலவாகும். இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. அடிக்கடி பூகம்பங்களும் ஏற்படும். எனவே, இதுபோன்ற நாடுகளில் வளர்ச்சிக்கான பாதை சற்று கடினமாகத்தான் இருக்கும். நீர் இல்லாத பாலைவனங்கள் மற்றும் அந்த நாடுகளை சென்றடைவதில் சிரமம் போன்ற பல புவியியல் அம்சங்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. இந்த புவியியல் அமைப்பிற்கு நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த வகையில் இலங்கைக்கு பெரிதும் நன்மைகள் உண்டு. சுற்றியும் கடல், தனித்த தீவு நாடு, பிற நாட்டு அச்சுறுத்தல்கள் என்பன இல்லை.
மனித வளம்
நாட்டின் ஆட்சியாளர்களால் மட்டுமே தனித்திருந்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. திறமையான வர்த்தகர்கள், விஞ்ஞானிகள், ஊழியர்கள் என்போர் முதன்மையாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்கின்றனர். படித்த மற்றும் நடைமுறை உலகத்துடன் போட்டியிட முடியாத மில்லியன் கணக்கான மக்கள் இருந்தாலும், ஒரு நாட்டிற்கு அவை பயனளிப்பதில்லை. சரியான திசையில் செலுத்தும் கல்வி முறை மூலமும் நாட்டின் மனித வளங்களை அபிவிருத்தி செய்ய முடியும். உலகிலுள்ள பல வளர்ச்சியடைந்த நாடுகளை நாம் பார்த்தால், அவர்களின் நாட்டில் கல்வி நிலை மிக வெற்றிகரமாக இருப்பதைக் காணலாம்.
பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு
ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாதுகாப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தியுள்ள ஒரு மனிதன் சிரியா போன்ற நாட்டில் வியாபாரம் செய்ய எண்ணி ஒரு பயணம்கூட செல்லமாட்டான். நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் பயங்கரவாத குழுக்களுக்கும், நாட்டிற்குள் உள்ளேயே உருவாகும் பல்வேறு இன, மத மற்றும் பிரிவுகளுக்கு இடையிலான மோதல்களும் ஒரு நாட்டை வளர்ச்சிப்பாதையில் இருந்து தடுக்கும். மோதல்கள் நிறைந்த ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய நாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது, பயத்துடனும் சந்தேகத்துடனும் வாழும் மக்கள் வளர்ச்சிக்கான முயற்சிக்கு பங்களிப்பதும் குறைவு.
சர்வதேச தொடர்புகள்
ஈரானில் எண்ணெய் வளமிருந்தாலும் உலகிற்கு விற்க வழி இல்லை. ஏனெனில் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா ஒரு வளர்ந்த நாடு. எமது நாட்டு மக்களும் தென் கொரியாவில் வேலை செய்யப் போகிறார்கள். ஆனால் வட கொரியா மிகவும் ஏழ்மையான மக்களைக் கொண்ட நாடு. வட கொரியாவும் அணு ஆயுதங்களை சோதிக்கச் சென்று பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. அந்த வகையில் பிற வெளிநாடுகளுடன் கையாளும் விதம் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது.
நிறுவனங்களின் வலிமை தன்மை
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நிலத்தை எடுத்து, அனுமதி பெற்று ஒரு நிறுவனம் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். சிறிது காலத்திற்கு பிறகு, பெறப்பட்ட அனுமதி செல்லுபடியாகாது மற்றும் நில பரிவர்த்தனை மோசடி என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அல்லது தொடர்ந்து பணியாற்ற அந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இது போன்ற ஒரு ஊழல் அமைப்பு இருக்கும்போது, நாம் நினைக்கும் முன்னேற்றத்தை அடைவது கடினம். நிறுவனங்களில் சட்ட நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர், தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை முகவர் போன்ற பல நிறுவனங்கள் அடங்கும்.
கலாசார செல்வாக்கு
இந்தியா ஒரு பெரிய நாடாக இருந்தாலும் அந்த நாட்டிலும் ஏராளமான ஏழை மக்கள் உள்ளனர். ஆனால் அந்த நாட்டில் பல கோயில்கள் மற்றும் கலாசார தளங்கள் உள்ளன. ஒரு வளர்ந்த நாட்டிலுள்ள ஒருவர் பெரிய தொகையளவு பணத்தை பெறும்போது அவர் அதை வணிகத்தில் முதலீடு செய்கிறார். புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார். புதிய வணிக யோசனைகளுக்கு இடம் தருவார். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில், மக்களுக்கு அதிக பணம் கிடைக்கும்போது, அவர்கள் முன்பை விட சிறப்பாக கோயில்களைக் கட்ட முற்படுகிறார்கள். பெரிய திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, கலாசார காரணிகளும் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கின்றன. சில முஸ்லிம் நாடுகளில் உள்ள மோதல்களைப் பார்த்தால், அந்த மோதல்கள் மதத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மதம் ஒரு நல்ல விஷயம்தான் என்றாலும், ஒவ்வொரு மதத்திலும் தீவிரப்போக்கு இருந்தால் அது பேரழிவிற்கு இட்டுச்செல்லும். அதன்படி, கலாசாரம் ஒரு நாட்டின் நிலைக்கு இன்றியமையாதது.
ஆரோக்கியம்
பிறக்கும்போது ஆயுட்காலம் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களும் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல தொற்றாத நோய்களும் நம் நாட்டில் உள்ளன. இந்த நோய்களின் பரவல் அதிகரித்தால் அல்லது மக்களுக்கு எளிதில் மருந்து கிடைக்காவிட்டால் நாடு முழுவதும் நோய்த்தாக்கம் ஏற்படும். ஸ்வாசிலாந்து போன்ற ஒரு நாட்டில், நாட்டின் பெரும்பகுதி எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்டுள்ளது. அத்தகைய பின்னணி இருந்தால் ஒரு நாடு நோயாளிகளுக்கு மட்டுமே நிறைய பணம் செலவழிக்க வேண்டி வரும். ஒரு ஏழை நாடு செழிப்பான நாடாக மாற, அந்த நாட்டில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த திட்டங்கள் இருக்க வேண்டும்.
உடல்நலம் மற்றும் கல்வி விடயத்தில் எமது நாடு ஓரளவு முன்னிலையில் உள்ளது. ஆனால் நாம் ஒரு வளர்ந்த நாட்டோடு ஒப்பிடும் அளவிற்கு இல்லை. அதற்கு பதிலாக தாய்லாந்து, மலேசியா போன்ற ஒரு நடுத்தர நாட்டோடு இருக்கிறோம். ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. மேலும், அப்போது ஏழைகளாக இருந்த மற்றும் இன்று வளர்ந்த நாடுகளைப் பார்க்கும்போது, மக்களும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதை அறிய முடிகிறது.