சுஷாந்த் சிங் மரணத்தின் பின் சர்ச்சைக்குள்ளான நட்சத்திரங்கள்

 

பிரபல சினிமா நட்சத்திரமான சுஷாந்த் சிங்கின் மரணம் இந்திய சினிமாவில் மாத்திரமன்றி உலகளவில் பேசப்பட்டது. அழகான பொலிவுட் சினிமாவின் மோசமான பக்கம் உலகெங்கும் பரவியது. ஆரம்பத்தில், சுஷாந்தின் மரணம் மன அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவரது பெற்றோரும் இந்திய ஊடகங்களும் இதை ஒரு கொலை என்று அம்பலப்படுத்தின. அதுவரை பொலிவூட் சினிமாவின் அழகான மனிதர்கள் என்று அழைக்கப்படும் பொலிவுட் சினிமாவின் ராட்சதர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மற்றொரு பிரபல பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சுஷாந்திற்கு நீதி கிடைக்குமாறு பொது ஊடகங்கள் மூலம் போராடுகிறார். இந்திய சினிமாவில் அவர் எதிர்கொண்ட அநீதிகள் மற்றும் சுஷாந்த் தற்கொலைக்கு காரணமான திரைப்படத்துறை மாஃபியா பற்றிய அவரது வெளிப்பாடுகளின் மூலம், ஹிந்தி சினிமா ரசிகர்களிடையே வில்லன்களாக மாறிய சிலரைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

கரண் ஜோஹர்

தனது முதல் படத்துடன் பொக்ஸ் ஒபிஸ் சாதனைகளை படைத்த கரண் ஜோஹர் ஒரு நல்ல மனிதராக கருதப்படுகிறார். ஆனால் கங்கனாவும் மற்றவர்களும் அவர் எவ்வளவு கெட்ட குணம் படைத்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார்கள். பொலிவுட் சூப்பர் ஸ்டார்களின் குழந்தைகளை தனது படங்களின் மூலம் வெளியே கொண்டு வர தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ள கரண், அவர்களுக்கு சவாலாக இருக்கும் பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திரைப்பட வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சித்ததாக இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

 

சல்மான் கான்

இந்த கவர்ச்சியான மற்றும் அழகான நடிகர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் முகங்கொடுத்துள்ளார். ஆனால் அவர் அவற்றையும் தாண்டி எப்படி தனக்கெதிராக பேசும் புதிய நடிகர்களை பழிவாங்குகிறார் என்பது பற்றி இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. அதற்கு காரணம் அவருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் அல்லது அவருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருக்கலாம். வளர்ந்து வந்துகொண்டிருந்த நட்சத்திரமான விவேக் ஓபராயின் திரைப்பட வாழ்க்கையை நிறுத்த காரணமாக இருந்ததும் சல்மான் கானின்  செயற்திட்டமே என்பதும் பின்னால் தெரிய வந்துள்ளது.

 

சஞ்சய் லீலா பன்சாலி

சுஷாந்தின் மரணத்தோடு, இந்த திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலாவும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். ஆரம்பத்தில் ‘பத்மாவத்’ மற்றும் ‘ராம் லீலா’ உள்ளிட்ட நான்கு படங்களில் சுஷாந்தை ஈடுபடுத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் பின்னர் மற்ற நடிகர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். ஆனால் பன்சாலி இந்த குற்றச்சாட்டை மறுத்து, சுஷாந்தினால் அந்த படங்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறினார். இந்த குற்றச்சாட்டில் பன்சாலி நிரபராதி என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் சுஷாந்தின் மரணம் குறித்த உண்மையான தகவலைகளை பெற பன்சாலியின் வாக்குமூலம் முக்கியம் என்றும் கூறுகிறார்கள்.

 

ஆதித்யா சோப்ரா

கரண் ஜோஹருக்குப் பிறகு, ஆதித்யா சோப்ராதான் சுஷாந்த் ராஜ்புத்தின் திரைப்பட வாழ்க்கையை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஆதித்யா சோப்ரா சுஷாந்தை மற்ற படங்களில் பங்கேற்பதை தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதித்யா சோப்ரா அவருக்கு நடிக்க ஒரு படமாவது கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதியில் தான் சிக்கியிருப்பதை உணர்ந்த சுஷாந்தும் ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.

 

ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் ராஜபுத்தின் கடைசி காதலியாகக் கருதப்படும் இந்த புதிய நடிகை, பொலிவுட் திரைப்பட மாஃபியாவை சேர்ந்தவர் என்றும், சுஷாந்தின் மரணத்தை விரைவுபடுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் இப்போது சுஷாந்தின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். சமீபத்தில், தனக்கெதிரான தீங்கிழைக்கும் பிரசாரத்திற்கு எதிராக தடை உத்தரவு கோர இந்திய உச்சநீதிமன்றத்தையும் அணுகினார்.

 

மகேஷ் பாத்

சில திரைப்பட நிறுவனங்களில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான இவர்,  ரியா சக்ரபோர்த்தியை பொலிவுட் மாஃபியாவில் மற்ற உறுப்பினர்களுடன் சேர்த்து தூண்டிலாக பயன்படுத்துவதாகவும், சுஷாந்தின் மரணத்தின் பின்னணியில் இருந்த ஒரு சூத்திரதாரி என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அவர் தனது அனைத்து தொடர்புகள் மூலமாகவும் பொலிவுட்டில் குடும்ப ஆதிக்கத்தை பரப்ப முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

அலியா பாட்

மகேஷ் பாட்டின் மகள் அலியா பாட் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுஷாந்தைப் பற்றி வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் அவரது நடிப்பு, ஆளுமையை கேலிசெய்தமை தொடர்பான வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அனைவராலும் நேசிக்கப்பட்ட அவர் இப்போது பல இந்தியர்களால் வெறுக்கப்பட்டு வெறுக்கப்படுகிறார். மேலும் அலியா பாட்டின் திரைப்படமான சதக் 2 திரைப்படத்திற்கான ட்ரைலர் கூட அதிகப்படியான டிஸ்லைக்குகளையே வாங்கி குவித்துள்ளது.

சுஷாந்த் ராஜ்புத் சிங் மரணத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் பல எதிர்காலத்திலும் வெளிப்படுமென கூறப்படுகிறது. அப்படி வெளிவந்த பின்னர் இன்னொரு பாகத்தை எழுதுவோம்.