சைனீஸ் வகை உணவுகளை வீட்டிலேயே தயாரிப்போம்

 

சைனீஸ் உணவுகள் எப்போதும் சற்று விலை அதிகமாகவே காணப்படும். அவற்றை வீட்டிலும் செய்யலாம் என்றால் நம்புவீர்களா? இன்று ஞாயிற்றுக்கிழமையல்லவா? இன்று நாம் சில சைனீஸ் ஸ்டைல் இறால் தொடர்பான சமையல் குறிப்புகளை கொண்டு வந்துள்ளோம். தயாரித்து உண்டு மகிழுங்கள்.

 

ஜிஞ்சர் கார்லிக் ப்ரவுண்ஸ்

தேவையான பொருட்கள்

  1. கழுவிய இறால்கள் – 200 கிராம்
  2. நறுக்கிய வெங்காய இலைகள் – 1/2 கப்
  3. மசித்த வெள்ளைபூண்டு – பிக் 3
  4. மசித்த இஞ்சி – 1 தேக்கரண்டி
  5. சோள மா – 2 மேசைக்கரண்டி
  6. சோயா சோஸ் – 1 மேசைக்கரண்டி
  7. ஒயிஸ்டர் சோஸ் – 1 மேசைக்கரண்டி

 

  • இறால்களை சுத்தமாக்கி சோளமாவை போட்டு கிளறவும்.
  • சோயா சோஸ் மற்றும் ஒயிஸ்டர் சோஸையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய்யை சூடாக்கி, அதில் இறால்களை சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அதிலிருந்து நீக்கவும்.
  • இப்போது அதே பாத்திரத்தில் வெங்காய இலைகள், இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதில் சோஸ் கலவையையும் சேர்க்கவும்.
  • இறுதியாக இறால்களை சேர்த்து கிளறவும்.

 

சைனீஸ் ஹனீ ப்ரவுண்ஸ்

தேவையான பொருட்கள்

  1. கழுவிய இறால்கள் – 200 கிராம்
  2. உப்பு மற்றும் மிளகு
  3. பூண்டு பவுடர் – 1 தேக்கரண்டி

 

சோஸ் தயாரிப்பு

  1. சீனி – 2 தேக்கரண்டி
  2. தேன் – 3 மேசைக்கரண்டி
  3. தக்காளி கெட்ச்அப் – 2 மேசைக்கரண்டி
  4. நீர் – 2 மேசைக்கரண்டி

 

பெட்டர் (Batter) தயாரிப்பு

  1. முட்டை – 1
  2. உப்பு
  3. பூண்டு பவுடர் – 2 தேக்கரண்டி
  4. நீர் – 1/4 கப்
  5. சிறிது வெள்ளை மிளகுத்தூள்
  6. கோர்ன்ஃப்லா – 2 மேசைக்கரண்டி
  7. கோதுமை மா – 3 மேசைக்கரண்டி
  8. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  9. பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
  10. எள் – சிறிதளவு

 

  • இறால்களை உப்பு, மிளகு மற்றும் பூண்டு பவுடர் சேர்த்து ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
  • சோஸிற்கு அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • முட்டையை உடைத்து உப்பு, பூண்டு பவுடர் மற்றும் 1/4 கப் நீர் சேர்க்கவும். மிளகு தூள், எண்ணெய், சோள மா, கோதுமை மா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான பதார்த்தம் ஒன்றை தயாரிக்கவும்.
  • இறாலை அந்த பதார்த்தத்தில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சோஸ் கலவையை ஊற்றி அதை சூடாக்கவும். அது சூடாகும்போது, ​​பொரித்த இறால்களை சேர்க்கவும். சில எள் விதைகளை மேலே தூவவும்.

 

க்ரீம் கார்லிக் பாமஸான் ப்ரவுண்ஸ்

தேவையான பொருட்கள்

  1. இறால்கள் – 200 கிராம்
  2. உப்பு மற்றும் மிளகு
  3. மசித்த பூண்டு – 2 மேசைக்கரண்டி
  4. வைட் வயின் – 3 மேசைக்கரண்டி
  5. பிரஷ் கிரீம் – 1 கப்
  6. பார்மேசன் சீஸ் பவுடர் – 1/2 கப்
  7. நறுக்கிய வோக்கோசு (Parsley) இலைகள் – சிறிதளவு
  8. பட்டர் – சிறிதளவு

 

  • இறால்களை உப்பு மற்றும் மிளகு சேர்த்து ஒரு மணி நேரம் சீசன் செய்யவும்.
  • அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி இறால்களை வறுக்கவும். வறுத்த பின்னர் அதிலிருந்து இறால்களை எடுத்து, சிறிது வெண்ணெய் மற்றும் மசித்த பூண்டு சேர்க்கவும்.
  • வயிட் ஒயின், ஃபிரஷ் கிரீம், உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். அது சூடாகும் போது, ​​சிறிது பர்மேசன் சீஸ் சேர்த்து இறாலில் கிளறவும்.

 

பிரவுன்ஸ் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

  1. இறால்கள் – 200 கிராம்
  2. முட்டையின் வெள்ளைக்கரு – 2 மேசைக்கரண்டி
  3. கோர்ன்ஃப்லா – 3 மேசைக்கரண்டி
  4. நறுக்கிய பச்சை மிளகாய் – 1 மேசைக்கரண்டி
  5. மசித்த இஞ்சி – 1 மேசைக்கரண்டி
  6. மசித்த பூண்டு – 1 மேசைக்கரண்டி
  7. மசித்த வெங்காயம் – 2 மேசைக்கரண்டி
  8. தக்காளி கெட்ச்அப் – 1 மேசைக்கரண்டி
  9. டார்க் சோயா சோஸ் – 1 மேசைக்கரண்டி
  10. சீனி – சிறிதளவு
  11. வெள்ளை மிளகுத்தூள் – சிறிதளவு
  12. உப்பு – சிறிதளவு
  13. நறுக்கிய வெங்காய இலைகள் – சிறிதளவு

 

  • இறால்களில் ஒரு மேசைக்கரண்டி நீர் சேர்த்து, முட்டையின் வெள்ளை மற்றும் சோளமாவை சேர்த்து இறால்களுடன் பிரட்டி எடுக்கவும்.
  • இறால்களை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • கெட்ச்அப், சோயா சோஸ் மற்றும் சீனி சேர்க்கவும். நன்றாக கிளறி 1/4 கப் நீர், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். வறுத்த இறால்களை சிறிது உலரும் வரை அடுப்பில் வைக்கவும். இறுதியாக, நறுக்கிய வெங்காய இலைகளை மேலே தூவி இறக்கவும்.

 

ப்ரவுண்ஸ் டெம்புரா

தேவையான பொருட்கள்

  1. இறால்கள் – 200 கிராம்
  2. கோதுமை மா – 1 கப்
  3. கோர்ன்ஃப்ளார் – 1 கப்
  4. மிளகுத்தூள் மற்றும் உப்பு
  5. முட்டை – 1
  6. சோடா நீர் – 1 கப்

 

  • கோதுமை மாவில் 2 மேசைக்கரண்டி கோர்ன்பிளார், மிளகுத்தூள், உப்பு மற்றும் முட்டை சேர்க்கவும். இதில் சிறிது சோடா நீர் சேர்த்து கெட்டியான பதார்த்தம் ஒன்றை தயாரிக்கவும்.
  • பிறகு இறால்களை தோலுரித்து, கழுவி நன்கு உலரவைத்து, கோர்ன்பிளாவில் போட்டு பிரட்டி, அந்த கலவையிலும் நனைத்து பொரித்தெடுக்கவும்.