கோப்பி (Coffee) பற்றிய சுவாரஷ்யமான விடயங்கள்

 

கோப்பி என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த மிகவும் பிரபலமான மற்றும் பலரது தனிமைக்கு உறுதுணையான பானமாகும். உலகில் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் இரண்டாவது பொருளாக கோப்பி காணப்படுகின்றது. அந்த பட்டியலில் முதலிடத்தில் பெற்றோலியம் வருகிறது. எனவே கோப்பியின் எத்தகைய அளவு வர்த்தகம் செய்யப்படுகிறது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். கோப்பியை கொண்டு தயாரிக்கப்படும் பானமும் கோப்பி என்றே அழைக்கப்படுகின்றது.  இந்த கோப்பி எமது நாட்டிலேயே விளைகின்றது என்பது பெருமைக்குரிய விடயமாகும். இத்தகைய பெருமைகொண்ட கோப்பி தொடர்பான சில விடயங்களை இன்று பார்ப்போம்.

 

கோப்பி என்றால் என்ன?

உலர்ந்த கோப்பிக் கொட்டைகளை வறுத்து அரைத்து சூடான நீரில் போட்டு கலந்து குடிக்கக்கூடிய ஒரு சுவையான பானம். மேலும் உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று. இந்த கோப்பி பீன்ஸ் Rubiaceae குடும்பத்தில் உள்ள ஒரு தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. அது விஞ்ஞான ரீதியாக கோஃபியா என அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவிலும் வெப்பமண்டல ஆசியாவிலும் வளர்க்கப்படுகின்றன.

 

கோப்பியின் வரலாறு

நீங்கள் கோப்பியின் வரலாற்றைச் சொல்லச் சென்றால், பல பக்கங்கள் நீளமாக ஒரு கதையையே எழுதலாம். ஆனால் சுருக்கமாக, இங்கே சொல்வதென்றால், எத்தியோப்பியர்கள் தான் முதலில் கோப்பியைக் கண்டுபிடித்தார்கள் என்று கூறப்படுகிறது. கல்தியா என்ற எத்தியோப்பியன் மேய்ப்பன், ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தை சாப்பிட்ட பிறகு அவரது ஆடுகள் வித்தியாசமான நடத்தை காட்டியதைக் கவனித்தார். அவர் தேவாலயத் தலைவருக்கு இதனை தெரிவிக்கிறார். தேவாலயத்தின் தலைவரின் யோசனையின்படி, அவர் அந்த கொட்டைகளை உலர்த்தி அவற்றை ஒரு பானமாக ஆக்குகிறார். இந்த பானம் இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனை செய்ய அவர்களுக்கு பலத்தை அளித்துள்ளது.

 

சாத்தானின் பானம்

ஆனால் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்த கோப்பி சாத்தானின் படைப்பு என்று நம்பினர். போப் கிளெமென்ட் VIII இன் தலையீடு வரை, கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை கோப்பி ஒரு சாத்தானின் பானமாகவே கருதப்பட்டது.

மேலும், 1511 இல் மக்காவின் ஆட்சியாளரான கைர் பேக், கோப்பியால் ஏற்படும் தூண்டுதலால் மக்கள் அவருடைய ஆட்சியை எதிர்ப்பார்கள் என்ற அச்சத்தில் கோப்பியை தடைசெய்தார். இதை பாவமான அதாவது இஸ்லாமிய முறைப்படி ஹராமான பானம் என்றும் அழைத்தார். ஒரு துருக்கிய சுல்தானின் தலையீட்டால் 1524 இல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை, மக்காவில் கோப்பி தடைசெய்யப்பட்டது.

 

சாதாரண கோப்பி மற்றும் உடனடி (இன்ஸ்டன்ட்) கோப்பி

அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தெரிந்தபடி, இரண்டு வகை கோப்பினள் உள்ளன. ஹரிஸ்சந்திர, ஹைலேண்ட் சாதாரண கோப்பி, மற்றும் ப்ரூ அல்லது நெஸ்காஃபியின் இன்ஸ்டன்ட் கோப்பி போன்ற நாம் குடிக்கும் சராசரி கோப்பி அதுதான். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சாதாரண கோப்பி நாம் அனைவரும் அறிந்தபடி, வறுத்து அரைத்து பொடியாக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் கோப்பி என்பது சாதாரண கோப்பியை தயாரித்து அதிக வெப்பம் அல்லது குளிரின் கீழ் மீண்டும் தூள் செய்யப்படும் செயன்முறையாகும். இரண்டு வகையான கோப்பியிலும் உள்ள காஃபின் அளவிற்கும் வித்தியாசம் உள்ளது. இதன் பொருள் வழக்கமான கோப்பியில் இன்ஸ்டன்ட் கோப்பியை விட அதிகமான காஃபின் உள்ளது.

 

கோப்பி பீன்ஸ் வர்க்கம்

இந்த கோப்பி தூள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோப்பி பீன்ஸ் இரண்டு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 • அரபிகா – இது மிகவும் பிரபலமான கோப்பி வகை. இந்த வகையின் வெவ்வேறு சுவைகள் காரணமாக, காபியை விரும்பும் பலர் அரபிகா எனப்படும் இந்த வகையை தேர்வு செய்கிறார்கள்.
 • ரோபஸ்டா – அரேபிகா மிகவும் பிரபலமானது என்றாலும், இந்த ரோபஸ்டா மலிவானது மற்றும் மற்றதை விட சற்று காரமானது. மேலும், இந்த வகையில் கோப்பி அரபிகாவை விட அதிகமாக உள்ளது.

உலகின் கோப்பி உற்பத்தியில் 60% அரபிகா மற்றும் 40% ரோபஸ்டா என்றும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

 

பல்வேறு வகையான கோப்பி பானங்கள்

மேற்கூறிய கோப்பி பீன்களைப் பயன்படுத்தி பல வகையான கோப்பி பானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 • பிளெக் – இது நாம் அனைவரும் அறிந்த கறுப்பு கோப்பி. சூடான நீரில் கோப்பி தூளை கரைத்து தயாரிக்கும் பானம். இலங்கையில் நாம் சர்க்கரையைச் சேர்த்து இனிப்பாகக் குடிக்கிறோம், ஆனால் வெளிநாட்டில் இது அசலாகவே குடிக்கப்படக்கூடிய கோப்பியாகும்.

 

 • எஸ்பிரெசோ – பிரஷர் மெஷினில் சூடான நீருடன் மிகக் குறைவாக கோப்பி பவுடரை கலப்பதன் மூலம் உருவாக்க இது ஒரு வழியாகும். இது ஒரு இத்தாலிய அமைப்பு. இந்த எஸ்பிரெசோ பெரும்பாலும் தனித்தனியாக இல்லாமல் மற்ற கோப்பி பானங்களில் ஒரு அடிப்படை மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 

 • லெட்டெ – இது மிகவும் பிரபலமான கோப்பி பானம். எஸ்பிரெசோவுடன் பாலை கலந்து குடிக்கக்கூடிய ஒரு பானம்.

 

 • கப்பசினோ – இதுவும் ஒரு லேட் வகை தான். ஆனால் இது சராசரியை விட நுரைதன்மை அதிகம். மேலே கோகோ அல்லது இலவங்கப்பட்டை தூள் சேர்த்து பரிமாறப்படும்.

 

 • அமெரிக்கனோ – கருப்பு கோப்பி போன்று எஸ்பிரெசோவை கரைத்து தயாரிக்கும் பானம்.

 

 • மோச்சா – இது ஒரு சொக்கலேட் எஸ்பிரெசோ பானம். இது பாலுடன் கலந்து பரிமாறப்படுகிறது.

 

பொதுவாக அறியப்பட்ட இந்த வகை பானங்களுக்கு கூடுதலாக, Doppio, Cortado, Red Eye, Galao, Lungo, Macchiato, Ristretto, Flat White, Affagato, Café au Lait மற்றும் Irish ஆகியவை மிகவும் பிரபலமான கோப்பி பானங்கள்.

 

கோப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

கோப்பி குடிப்பதில் பல நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் உள்ளன.

 

நன்மைகள் :-

 • கோப்பி ஆற்றல் தரக்கூடிய பானம், இது உடலின் செயற்பாட்டை அதிகரிக்கும்.
 • தேவையற்ற கொழுப்பை எரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க கோப்பி உதவுகிறது.
 • மனச் சோர்வு குறைகிறது.
 • கோப்பி புற்றுநோய், இதய நோய் மற்றும் பார்கின்சன் நோய் அபாயத்தையும் குறைக்கும்.
 • கோப்பி நீரிழிவு நோயைக் குறைக்கும்.
 • மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தவும் கோப்பி உதவுகிறது.

 

தீமைகள் :-

 • மோசமான தரமற்ற அளவில் கோப்பி பருகுதல் நோயை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் கோப்பிக்கு அடிமையாக இருந்தால், சிறந்த தரமான கோப்பியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
 • குறுகிய காலத்தில் அதிகப்படியான கோப்பி உட்கொள்வது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
 • கோப்பி கருவைப் பாதிக்கும், எனவே கர்ப்ப காலத்தில் கோப்பியின் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது.