இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் வேகமாக பரவும் விடயமாக டிக் டொக் காணப்படுகின்றது. அண்மையில் இந்தியாயில் டிக் டொக் உள்ளிட்ட பல செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் டிக் டொக் வேகமாக பிரபலமடைந்துள்ளமைக்கு டிக் டொக் வீடியோக்களின் அளவும் நேரமும் குறைவென்பதும் காரணமாகும். மேலும், டிக் டொக்கில் பல்வேறு வகையான வீடியோக்களை இரசிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக, டிக் டொக் புதிய தலைமுறையினரிடையே வேகமாக பிரபலமடைந்தது. சீனா நிதியுதவி அளிப்பதாகக் கூறப்படும் டிக் டொக் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது. எனவே டிக் டொக் தடை இன்று பேசலாம்.
அமெரிக்க இராணுவத்தில் தடைசெய்யப்பட்ட டிக் டொக்
அமெரிக்க இராணுவம் என்பது பலம்பொருந்திய மற்றும் பிரபலமான இராணுவமாகும். அவர்களும் டிக்டொக் பயன்படுத்தினார்கள் என்றால் நம்புவீர்களா? ஆமாம். அவர்களும் டிக் டொக்கை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், அது அமெரிக்க அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. இராணுவ இரகசிய தகவல்களுக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்கா இதன்மூலம் நம்பியது. ஆகவே இதுபோன்று, சீனாவை தளமாகக் கொண்ட டிக் டொக் பயன்பாட்டை தடை செய்ய அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கா முற்றிலுமாக தடை செய்யுமா?
அமெரிக்காவில் இளைஞர்கள் ட்ரம்பின் தேர்தல் பேரணிகளில் பதிவு செய்வதற்கும், தங்கள் இடங்களை காலியாக வைத்திருப்பதற்கும் ஆர்வமாக இருந்தனர். அந்த வகையில், ஒன்லைனில் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கான இடங்களை பதிவு செய்துகொள்ள டிக் டோக் குழுவும் பங்களித்தது. ஆனால் அப்படி பதிவு செய்து விட்டு யாரும் செல்லாமல் தவிர்த்தனர். இதனாலேயே அமெரிக்காவும் இந்த டிக் டொக் தடைக்கு விரைவில் செல்ல விரும்புகிறது. இதற்கான காரணம், தகவல்களைத் திருட சீனா இந்த செயலியை பயன்படுத்துவதாக அமெரிக்கா எண்ணுகிறது. ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஜனாதிபதி ட்ரம்ப் உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை விட டிக் டொக்குடன் தனிப்பட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளார்.
இந்தியா தடை
இந்தியாவில் டிக் டொக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களே நடத்தப்பட்டன. அதே நேரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் பிளவு தீவிரமடைந்தது. இதனால், சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை இந்தியாவில் தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த ஜூன் மாதம், இந்திய எல்லையில் சீனப் படையினரால் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. அந்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று கூறி 59 சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மில்லியன் கணக்கான டிக் டொக் பயனர்களைக் கொண்ட இந்தியா, டிக் டொக் பயன்பாட்டை இழந்தது.
ஹொங்கொங்கிலும் டிக் டொக் தடை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகளில் தனிப்பட்ட தரவுகளை ஹொங்கொங் பொலிஸார் கேட்டுள்ளனர், ஆனால் கூகிள் மற்றும் பேஸ்புக் அவற்றை தர மறுத்துள்ளன. சீன கட்டுப்பாட்டில் இல்லாத ஹொங்கொங்கை சீனாவுக்கு முழுமையாக அடிபணிய வைப்பதற்கான ஒரு படியாக இந்த சமூக ஊடக தகவல் பரிமாற்றத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹொங்கொங்கில் உள்ள சீன சார்பு அரசாங்கம், டிக் டொக்கைப் போன்ற சீன செயலியை தடை விதித்திருந்தது.
இந்தியாவில் தடை விதிக்க பிற காரணங்கள்
டிக் டொக் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் விடயங்களை பற்றி இந்தியாவில் நிறைய பேச்சுவார்த்தைகள் இருந்தன. டிக் டொக் மூலம் நீங்கள் எந்த கடுமையான வார்த்தைகளையும், எந்த செயல்திறனையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிவிடலாம். அதன்படி, கணவர் மனைவியரின் தனிப்பட்ட உறவுகளும் இதில் பதிவேற்றப்பட்டன. சில இந்தியர்கள் எங்கிருந்தும் பார்க்கக்கூடிய இந்த செயலிக்கு பெரிதும் அடிமையாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 52 மில்லியன் மக்கள் இதற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை விட, சில சமூக ஆர்வலர்கள் டிக் டொக்கை தடை செய்ய வலியுறுத்தி, அதன் சமூக தாக்கத்தை சுட்டிக்காட்டினர்.
இந்தோனேசிய தடை
இந்தோனேசியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பேஸ்புக் பயனர்கள் உள்ளனர். இந்தோனேசியாவில் அதிகப்படியான முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. ஆகவே உலகின் மிக சக்திவாய்ந்த ஆபாச வலைத்தளங்கள் பல இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 2018 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் டிக் டொக் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. டிக்-டொக் இளைஞர்களின் மனதை மாற்றுவதற்கும், ஆபாச உள்ளடக்கங்களை குழந்தைகளுக்கு நேரடியாக இயக்குவதற்கும் வாய்ப்புள்ளதாக, அதற்கு எதிராக இந்தோனேசியாவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. ஆனால் டிக் டொக் விரைவில் ஒரு வயது வரம்பு மற்றும் பிற டிக் டொக் கட்டுப்பாட்டு பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி பதிலளித்தது. ஒரு வாரம் கழித்து, மீண்டும் இந்தோனேசியா அதன் மீதான தடையை நீக்கியது.
பங்களாதேஷ் தடை
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடுகளில் பங்களாதேஷ் ஒன்றாகும். 2019 இல் ஆபாச தளங்களை தடை செய்ய பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில், பல்வேறு அநாகரீக நிகழ்ச்சிகள் குறித்த முறைப்பாடுகள் அதிகரிக்க டிக் டொக் செயலியின் பயன்பாடே காரணம் என பங்களாதேஷ் குற்றம் சாட்டியது.
டிக் டொக்கிற்கு எதிரான கலாசார பிரச்சினைகள் மற்றும் தரவு பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் டிக் டொக்கிற்கு எதிரான உலகளாவிய அலைக்கு வழிவகுத்தன. புதிய தலைமுறை இதன் மூலம் மிகவும் பிரபலமடைவதால் இது பழைய திரைப்படங்கள் மற்றும் பிற சினிமா நட்சத்திரங்களது நடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எனவே, மிகச் சிறிய வீடியோக்களுடன் வந்தாலும், அதன் சமூக தாக்கம் மிகச்சிறியதல்ல என்று தெரிகிறது.