சூழல் மாசுபாட்டை தடுக்க என்ன செய்ய வேண்டுமென்பதை சிறு வயதிலிருந்தே கற்பிக்கிறோம். அதாவது நீர்வளத்தைப் பாதுகாத்தல், சரியான முறையில் குப்பைகளை கொட்டுதல், மரங்களை வளர்த்தல், பொலித்தீன் பயன்பாட்டைக் குறைத்தல் என பல விடயங்களை கற்றிருப்போம். இவற்றைப் பற்றி அறிந்து, மனப்பாடம் செய்திருந்தாலும் ஒரு சிலரைத் தவிர பொதுவாக எல்லோரும் சூழல் மாசடைவதற்கு காரணமாக அமைகின்றனர். சுற்றிலும் மக்கள் இருக்கும்போது, ஒரு டோஃபி தாளை வீதியில் போடாமல் பையில் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் அத்தகைய பையில் சேகரிக்கப்பட்ட அனைத்து டோஃபி தாள்களையும் ஒரு பையில் நிரப்பி இரவில் யாரும் இல்லாத நேரத்தில் வீதியில் எறிந்துவிட்டு போவோரும் உண்டு. சூழலை பாதுகாப்போம் என்ற விடயத்தை பாடசாலை காலம் படித்திருப்பீர்கள். ஆகவே அதுபற்றி பெரிய விடயங்களை உங்களுக்கு கூறப்போவதில்லை. இலகுவான மற்றும் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி இன்று கூறவுள்ளோம்.
ஏடிஎம் ரசீது (ATM receipt)
காகிதத்தின் பயன்பாடு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. அதாவது, காகிதம் ஒப்பீட்டளவில் அழிந்துபோகக்கூடிய பொருளாக இருந்தாலும், காகிதத்தின் அதிக பயன்பாடானது கழிவுகளை அதிகமாகக் குவிக்கிறது. காகித மீள்சுழற்சி விடயத்தில்கூட, கணிசமான அளவு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இப்போதெல்லாம் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம்-க்கு சென்ற பிறகு, நாங்கள் பணத்தை எடுத்தாலும் அல்லது நிலுவைத் தொகையைப் பார்த்தாலும், முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் விரும்பினால் ரசீதை பெறலாம். எங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அல்லது எங்கள் நிலுவைத் தொகையை சரிபார்க்க எங்களுக்கு ஏன் ரசீது தேவை? ஆனால் அநேகமானோர் ரசீதை பெறுகின்றனர். பின்னர், ரசீதைப் பார்க்காமல் அதை குப்பையில் போடுகிறார்கள். ஏடிஎம்-க்கு அடுத்துள்ள குப்பைத்தொட்டியில் இரண்டு மணி நேரம் கழித்து காகிதக் குவியலைப் பார்க்க முடியும். அதன் மூலம் எந்தளவு சூழல் மாசுபாடு ஏற்படுகின்றதென நாம் உணரலாம்.
அஞ்சலில் வரக்கூடிய பில்
இப்போது தொலைபேசி, நீர் மற்றும் மின்சார கட்டண ரசீதுகளை மின்னஞ்சல் வாயிலாக பெறுவதற்கான வசதிகள் உள்ளன. எந்த தொலைதொடர்பு இணைப்பிலிருந்தும் அழைப்பை ஏற்படுத்தி இதனை செயற்படுத்தலாம். அப்படிச் செய்தால் உங்களுக்கு 5 GB இலவசமாக வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானோர் அந்த வசதியை பயன்படுத்துவதில்லை.
கட்டண ரசீதுகளை மின்னஞ்சலில் பெறுவது உண்மையில் எளிதல்லவா? தேவையற்ற அளவில் கடதாசிகளும் குவியலாகாது. பில் எங்கிருந்தாலும் ஆதாரமாக இருந்தாலும் மின்னஞ்சல் மூலம் வருவதைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. குறிப்பாக, மாசுபாட்டிற்கான பங்களிப்பு குறைக்கப்படுகிறது.
சவர்க்காரம் தேய்க்கும்போது குழாயை திறந்து வைத்தல்!
இப்போது நாம் கொவிட்-19 இன் பிரச்சினையினால் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே செல்வதென்றாலும் வெளியே கைகளைக் கழுவ வேண்டும். அதில் சிங்க் இருக்கும். கால்களால் அழுத்தினால் நீர் வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் கவனித்த விடயம் என்னவென்றால், சவர்க்காரம் அல்லது அதற்கு ஒப்பான ஏதேனும் கழுவும் திறவத்தை பயன்படுத்தும்போதும் நீரை திறந்துவைத்திருப்பர். வீட்டில் காய்கறிகளை கழுவும்போதுகூட நிறைய பேர் இதனையே செய்கின்றனர். சில விநாடிகள் நீர் விரயமானாலும், மொத்தமாக பார்க்கும் போது அது பாரிய அளவாக காணப்படுகின்றது. நீரை இவ்வாறு விரயம் செய்வதும் சூழலுக்கு ஆபத்தானதாகும். காரணம், ஏதேனும் தாழ்வான பகுதிகளில் தங்கி நிற்கும்போது மாசடைந்து அசுத்தமாகின்றது.
கார் பயணம்
காற்று மாசுபாடு என்றவுடன் உடன் நினைவிற்கு வரும் விடயம் இதுவாகும். அதாவது, வீட்டில் கார் வைத்திருப்பதால் ஒவ்வொரு நாளும் காரில் வேலைக்குச் செல்வது தவறு. குறிப்பாக நீங்கள் மட்டுமே காரில் செல்லவேண்டி இருந்தால் அது மிகவும் தேவையற்றது. அதிகமானோர் ஒரு காரில் செல்வதாகக் இருந்தால் அல்லது வெளியே சென்று இரண்டு மூன்று பஸ்களில் செல்ல வேண்டும் என்றால் காரை பயன்படுத்துவதில் அர்த்தமுண்டு. ஆனால் கொழும்பில் தினமும் கார் சவாரி எவ்வளவு மோசமானதென உங்களுக்குத் தெரியும். நெரிசலை ஏற்படுத்துவதோடு, காற்றும் மாசுக்கும் வழிவகுக்கின்றது. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாற்று வழியை அல்லது முச்சக்கரவண்டியை பயன்படுத்துங்கள்.
ஈ – புக்ஸ்
நாம் மேலே சொன்னது போல, காகித பயன்பாடு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. அதனால்தான் காகித பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். பின்னர் நாம் படித்து முடித்த பழைய புத்தகங்கள்கூட ஓரளவிற்கு மாசுபாட்டிற்கு பங்களிக்கும். ஆனால் நீங்கள் புத்தகங்களை வாங்கக்கூடாது என்று கூறிவில்லை. ஈ புக்ஸ் என அறியப்படும் மின் புத்தகங்களிலிருந்து வந்த இன்றைய நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதாவது கின்டெல் ஈ புக் ரீடரைப் பெறுவது சிறப்பானது. நீங்கள் வைத்திருக்க விரும்பும் கிண்டில் புத்தகங்களை நீங்கள் படிக்கலாம். அவற்றிலிருந்து நாம் பெற விரும்பிய புத்தகங்களுக்கு பணம் செலுத்தலாம்.
எந்நேரமும் எரியும் மின்விளக்குகள்
இது உண்மையில் பலர் செய்யாத விடயம். மின்விளக்கை அணைக்குமாறு சிறுவயது முதல் எமது பெற்றோர் கூறியிருப்பர். மதிய உணவிற்காக வெளியில் சென்றால், உங்களுக்கு அலுவலகத்தில் தனி அறை இருந்தால் மின்விளக்குகளை அந்த நேரத்தில் அணைத்துவிடுங்கள். அந்த நேரத்தில் நுகரப்படும் மின்சாரத்தை சேமிக்க முடியும். சரி, தற்போதைய எல்.ஈ.டி பல்புகளுடன், இது மிகக் குறைந்தளவு ஆற்றல் கொண்ட நுகர்வாகும். ஆனால் நீங்கள் நீண்ட நேரம் வெளியே சென்றால் மின்விளக்கை அணைப்பது கடினமான விடயமல்ல. இது விளக்குகளுக்கு மட்டுமல்ல, மின்விசிறி, மடிக்கணினிகள், டிவி போன்ற அனைத்திற்கும் பொருந்தும். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு வெளியே செல்வதென்றால் இவற்றை அணைப்பதில் அர்த்தமில்லை. அந்த நடைமுறையை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.
வீட்டுத் தோட்டம்
கடந்த கொரோனா காலத்தில் இது குறித்து அதிக ஆர்வம் இருந்தது. பிரதமரின் மகன் முதல் நாம் எல்லோரும் மரம் வளர்க்க ஆரம்பித்தோம். ஆனால் இரண்டு மாதங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டபோது, சிலருக்கு அவை எங்கு நடப்பட்டன என்பதுகூட நினைவில் இல்லை. ஆனால் பெரும்பாலானோர் அவற்றை அறுவடை செய்தனர். மிகவும் சுத்தமான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்கான வாய்ப்பைத் தவிர, வீட்டுத் தோட்டமும் உண்மையில் சூழல் நட்பு கொண்ட ஒரு பழக்கமாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாயுக்களின் வெளியீடு, மண் உயிரினங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நட்பு உயிரினங்களின் பாதுகாப்பு என சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிக பங்களிப்பை ஏற்படுத்துகின்றது. அதேநேரத்தில், வீட்டு தோட்டக்கலைக்குத் தேவையான உரம் வீட்டு கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும்போது நன்மை அதிகமாகிறது.