“கடவுளே, நான் ஒரு விலங்காக பிறந்திருந்தால் எவ்வளவு நல்லது” என சில நேரங்களில் நாம் நகைச்சுவையாக நினைத்திருப்போம். இதற்கிடையில், உலகின் அதிக வருமானம் ஈட்டும் செல்லப்பிராணிகளின் பட்டியலை இன்று தரப்போகின்றோம். உண்மையில், நான் இந்த கட்டுரையை ஒரு மனிதனாக மிகுந்த ஏமாற்றத்துடன் எழுதுகிறேன். காரணம், விலங்காக பிறந்திருந்தால் அதிகம் சம்பாதித்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், அதனை செலவழிப்பது என்னவோ மனிதன்தானே என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு கேட்கின்றது. பரவாயில்லை. இந்த விலங்குகளின் பெறுமதியை சற்று பாருங்கள்.
GRUMPY CAT
இது முகத்தை சுளிக்கும் முகபாவனைகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு பூனை. இது அமெரிக்காவில் வாழ்கின்றது. ஆனால் இதன் புகழ் உலகின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறியப்பட்டதாகும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கும் இங்கும் இதன் முகம் சில வேடிக்கையான புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், இதுவும் ஒரு மிகவும் பிரபலமான நட்சத்திர பூனை. மறுபுறம் பணத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒரு செல்வ செழிப்பான பூனை. ஒரு சில தகவல்களின்படி, 2014 ஆம் ஆண்டளவில், இந்த பூனை தனது உரிமையாளருக்கு 100 மில்லியன் டொலர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது.
BOO
ப்பூ…. என்பது ஒரு நாய். இந்த நாய்க்கு மற்ற நாய்களை போல “முரட்டு நாய்” என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. காரணம், இதுதான் மிகச்சிறிய செல்ல நாய். இது அமெரிக்காவைச் சேர்ந்த பொமரேனிய நாய் இனத்தைச் சேர்ந்தது. இந்த நாயை பேஸ்புக்கில் 16 மில்லியன் பேர் தொடர்கின்றனர் என்றால் நம்பவீர்களா? இது தனது எஜமானுக்கு ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர்களை சம்பாதித்து கொடுக்கிறது என்று கூறப்படுகிறது.
JIFF
பொமரேனிய நாய் இனத்தில் ஜிப்புக்கும் தனி சிறப்புண்டு. அந்த பட்டியலில் ஜிஃப் ஒரு நரி முக வடிவத்தைக் கொண்ட சிறிய நாயாகும். இதன் பெயரும் இனமும் சேர்க்கப்பட்டு இதனை “ஜிஃபோம்” என்று செல்லமாக அழைக்கின்றனர். இந்த நாய்க்கென்றே தனியாக சொந்த வலைத்தளம் ஒன்றும் உள்ளது. மேலும், இதன் முகம் வரைபடங்கள், கார்ட்டூன்கள் போன்றவை மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் இந்த நாயை 9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இது ஆண்டுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களை சம்பாதிக்கின்றது.
CRYSTAL THE MONKEY
கிரிஸ்டல் என்ற பெயரை கேட்டவுடன் இது ஒரு ஆண் குரங்கு என்று எண்ணிவிட வேண்டாம். ஏனென்றால் இது ஒரு பெண் குரங்கு. ஒரு நடிகை குரங்கு. திரைப்படங்களில் நடிக்க விலங்குகளுக்கு பயிற்சியளிப்பதற்கான இடங்கள் அமெரிக்காவில் உள்ளன. அவ்வாறான இடமொன்றிலேயே இந்த குரங்கு வளர்ந்துள்ளது. பயிற்சி தொலைக்காட்சி தொடர் மற்றும் நைட் அட் தி மியூசியம் போன்ற பல படங்களில் நடித்த திறமையான நடிகை குரங்கு என்று கூறப்படுகிறது. வருமானம் பற்றி பார்த்தால், விலங்கு பயிற்சி தொடரின் ஒரு பகுதிக்கு (Episode) மாத்திரம் 12,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளது.
Bodhi
போதி மென்ஸ்வேர் நாய் என்று அழைக்கப்படுகிறது. MENS WEAR என்பது போதியை “ஆண் உடைகளை அணியும் நாய்” என்று அழைக்கிறோம். போதி உண்மையில் ஒரு நல்ல மொடல் நாய். அதேபோல உலகின் சிறந்த பேஷன் நாய் என்றும் கூறப்படுகிறது. உண்மையில், புதிய ஆண்கள் ஆடைகளை பிரபலப்படுத்த மற்றும் அதற்கான பிரதிநிதித்துவங்களை உருவாக்குவதே போதியின் வேலை. அதிலிருந்து இது ஒரு மாதத்திற்கு சுமார் 15,000 டொலர்கள் வரை சம்பாதிக்கிறது. போதியின் சித்தரிப்புகளுடன் நியூயோர்க் டைம்ஸில்கூட ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது.
MARU
ஜப்பானில் பிரபலமான மரு என்கிற ஒரு பூனை காணப்படுகிறது. மரு ஒரு வித்தியாசமான பிரபலமான பூனை. இது கின்னஸ் புத்தகத்தில் “விலங்கு சம்பந்தமாக அதிகம் பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோவின் உரிமையாளர்” என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. இதனது வீடியோவை 325 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன் YouTube சேனல் MUGUMOGU தற்போது 600,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை கொண்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்யலாம்.
VENUS THE TWO FACED CAT
ஒரே நிறத்தில் இரண்டு முகங்களைக் கொண்ட பூனையாக இந்த பூனை அறியப்படுகிறது. இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது நம்ப முடியுமா? ஆனால் அதிஷ்டவசமாகவோ அல்லது துரதிஷ்டவசமாகவோ இந்த புகைப்படங்கள் உண்மையானவை. இதன் முகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதில் விலங்கியல் வல்லுநர்களுக்கும் சிக்கல் உள்ளது. அதற்கான சிறந்த ஆதாரங்களை நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் கட்டுரையில் காணலாம். வீனஸ் இரண்டு பழங்கால புராணங்களின் கலவையாகும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த வதந்திகள் எப்படியாக இருப்பினும், வீனஸ் இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் மற்றும் பேஸ்புக்கில் 1.3 மில்லியன் பொலோவர்களை (Followers) கொண்டுள்ளது. இந்த பூனை சம்பாதிக்கும் சரியான தொகை குறிப்பிடப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் இதனை பின்தொடரும் மக்கள் தொகையை வைத்து ஓரளவு கணிப்பிட முடியும்.