வெவ்வேறு சுவைகளில் தோசை தயாரிக்கும் முறைகள்

 

தோசை சைவ உணவு என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும். சைவ உணவை மாத்திரம் சாப்பிடுபவர்கள் மட்டுமன்றி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது காணப்படுகின்றது. சாம்பார் குழம்புடன் உண்ணப்படும் சாதாரண வழமையான தோசைகளை தாண்டி பல சுவைகளுடன் தோசை செய்வது எப்படியென லைபீ தமிழ் உங்களுக்கு சொல்லித்தரவுள்ளது.

 

முட்டை தோசை

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ஊறவைத்த உளுந்து
  2. 2 கப் ஊறவைத்த பச்சை அரிசி
  3. 1/2 தேக்கரண்டி ஈஸ்ட்
  4. உப்பு
  5. 3 முட்டை
  6. மிளகுத்தூள்
  7. நறுக்கிய வெங்காயம்
  8. இடித்த மிளகாய் தூள்
  9. 1/2 தேக்கரண்டி மஞ்சள்

 

  • உளுந்தில் ஈஸ்ட் போட்டு நீர் சற்று சேர்த்து ப்ளெண்ட் செய்யவும். அவற்றை பின்னர் நன்கு கலந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
  • முட்டைகளை உடைத்து உப்பு, வெங்காயம், மிளகுத்தூள், இடித்த மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
  • உளுந்து கலவையில் தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கெட்டியான, நீர்த்தன்மை அதிகமற்ற கலவையை செய்யுங்கள்.
  • ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, முட்டை கலவையின் இரண்டு மேசைக்கரண்டி எடுத்து ஊற்றி ஸ்ப்ரெட் செய்து தோசை முழுவதும் தேய்க்கவும்.
  • பின்னர் தோசையை பாதியாக மடியுங்கள். குறைந்த வெப்பத்தில் இருபுறமும் சுடவும்.

 

மசாலா தோசை

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ஊறவைத்த உளுந்து
  2. 2 கப் ஊறவைத்த பச்சை அரிசி
  3. 1/2 தேக்கரண்டி ஈஸ்ட்
  4. வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு – 2
  5. நறுக்கிய பச்சை மிளகாய் – 2
  6. நறுக்கிய வெங்காயம் – 2
  7. உப்பு
  8. கொத்தமல்லி இலைகள்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 – மேசைக்கரண்டி
  10. சீரகம்
  11. 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  12. எண்ணெய்
  13. 1/2 கப் அரிசி மா
  14. கறிவேப்பிலை
  15. நெய்

 

  • உளுந்து மற்றும் ஈஸ்டில் நீர் சற்று ஊற்றி கலக்கவும். எல்லாவற்றையும் கலந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
  • உளுந்து கலவையில் தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து இறுக்கமான பதார்த்தத்தை செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 4 மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி சிறிது இஞ்சி சேர்க்கவும். சிறிது பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறும்போது சிறிது வெங்காயம் சேர்க்கவும்.
  • முட்டையின் மஞ்சள் கரு மற்றும் உப்பு சேர்க்கவும். நீர் சிறிதளவு சேர்க்கவும். இப்போது பிசைந்த உருளைக்கிழங்கை அதில் சேர்க்கவும். நன்றாக கிளறி, கொத்தமல்லி இலைகளையும் அதில் சேர்க்கவும். அடுப்பை சிறிது அணைக்கவும்.
  • இப்போது வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து தோசை கலவையை மெல்லியதாக தேய்த்து சுடவும். மேலே சிறிது எண்ணெய் தெளித்துவிட்டு நடுவில் மசாலா கலவையை போட்டு பாதியாக மடித்து சுடவும்.

 

பாசிப்பயறு தோசை

தேவையான பொருட்கள்

தோசைக்கு

  1. 1 கப் பாசிப்பயறு
  2. அரிசி மாவு – 4 மேசைக்கரண்டி
  3. கறிவேப்பிலை
  4. இரண்டு அல்லது மூன்று சிவப்பு வெங்காயம்
  5. பச்சை மிளகாய் – 1
  6. உப்பு

டாப்பிங்கிற்கு

  1. நறுக்கிய கறிவேப்பிலை
  2. நறுக்கிய பச்சைமிளகாய் – 3
  3. நறுக்கிய வெங்காயம் – 1

 

  • பாசிப்பயற்றை கழுவி ஒரு இரவிற்கு ஊற விடவும். தோசைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். இறுக்கமான பதார்த்தமொன்றை தயாரித்து சுவைக்கு ஏற்ப உப்பு, அரிசி மாவு மற்றும் சிறிது நீர் சேர்க்கவும்.
  • பேன் ஒன்றில் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை கலவையில் சிறிது ஊற்றி சுடும் போது டாப்பிங்கிற்கு தேவையானவற்றை சேர்த்து கலந்து தோசை மேல் போட்டு இருபுறமும் மாறி மாறி சுட்டு எடுக்கவும்.

 

ரவை தோசை

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் ரவை
  2. 1/2 கப் அரிசி மா
  3. 1/4 கப் கோதுமை மா
  4. சிறிது சீரகம்
  5. உப்பு
  6. நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  7. நறுக்கிய பச்சைமிளகாய் – 2
  8. நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
  9. நறுக்கிய வெங்காயம் – 1
  10. யோகட் – 1 மேசைக்கரண்டி
  11. நீர் – 1 கப்

 

  • இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து கிளறி, சிறிது நீர் சேர்த்து சாதாரண தோசைக்கலவை போலல்லாமல் கெட்டியாக செய்து கொள்ளவும்.
  • பேன் ஒன்றை அடுப்பில் வைக்கவும், அது சூடாகும்போது, ​​பேனில் கலவையை போட்டு பரப்பவும். பிறகு இருபுறமும் வறுக்கவும்.

 

குரக்கன் தோசை

 

தேவையான பொருட்கள்

  1. குரக்கன் மா – 2 கப்
  2. அரிசி மா – 1/2 கப்
  3. 2 முட்டை
  4. 1 கப் தேங்காய் பால்
  5. பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  6. உப்பு

 

  • குரக்கன் மாவில் அரிசி மாவை சேர்க்கவும். முட்டைகளைச் சேர்த்து, ஒரு முட்கரண்டி கொண்டு அடித்து தேங்காய் பால், உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
  • சிறிது நீர் சேர்த்து தோசை கலவை தயாரிக்கவும்.
  • அடுப்பில் ஒரு பேனை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடாகும்போது ​​கலவையை சேர்த்து மெல்லியதாக பரப்பி இருபுறமும் சுடவும்.

 

சீஸ் தோசை

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ஊறவைத்த உளுந்து
  2. 1/2 கப் அரிசி மா
  3. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  4. உப்பு
  5. 1 கப் கிரேட் செய்த மொஸெரெல்லா சீஸ்
  6. 1/2 கப் கிரேட் செய்த செடார் சீஸ்

 

  • வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து கலக்கவும். அரிசி மா மற்றும் சிறிது நீர் சேர்த்து 2 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
  • ஒரு தடிமனான டோ செய்ய இரண்டு மணி நேரத்தின் பின்னர் உப்பு மற்றும் நீர் சேர்க்கவும்.
  • பேன் ஒன்றில் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடாகும்போது ​​சிறிது சீஸ் சேர்த்து மெல்லிதாக்கி இரண்டாக மடித்து இருபக்கமும் சுடவும்.