உங்கள் அன்பு காதலனை பெண்கள் துரத்துகின்றனரா?

 

பொதுவாக தத்தமது காதலிகளை ஏனைய ஆண்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆண்கள்தான் பாடுபடுவார்கள். ஆனால் பெண்களும் சில சமயங்களில் தங்கள் காதலனை பிற பெண்களிடமிருந்து காப்பற்றவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதாவது, அழகாக இருக்கும் ஒரு ஆண், அல்லது அழகான பிரபலமான ஆண் அல்லது ஒரு சூப்பர் புத்திசாலியான ஆணுக்கு இப்படி நடக்கலாம். உலகில் இதுபோன்றவர்களுக்கான தேவை அதிகம் என்பதால் அதிகமான பெண்கள் இவர்களை விரும்புவது வழமை. இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு, “என் காதலனுடன் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்” என்று எந்நேரமும் சொல்லவும் முடியாது. ஆகவே நீங்களே அதற்கான வேலியை போட்டுக்கொள்ளுங்கள்.

 

உறவு எந்த கட்டத்தில் உள்ளது?

இதுதான் அடிப்படையான விடயம். நாம் இருவரும் இந்த உறவில் எந்த கட்டத்தில் உள்ளோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதை நாங்கள் இருவரும் அறிந்திருக்கிறோமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். உதாரணத்திற்கு, இப்போது ​​தன் காதலனுக்கும் தனக்கும் இடையே வெளிப்படையான செக்ஸ் உறவு மாத்திரமே இருப்பின், நீங்கள் சென்று தேவையற்ற முறையில் உரிமைகளை கேட்க கூடாது. மேலும், அந்த குறித்த ஆண் உங்களுக்கு சொல்வதற்கும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, உதாரணமாக நான் உன்னை விரும்புகிறேன் என்று அவர் கூறுகிறார். ஆனால் அவரது நண்பர்களிடத்தில் உங்களை பற்றி அறிமுகப்படுத்த முயற்சிக்காமல் உறவை இரகசியமாக வைத்திருக்கிறார். வெளிப்படையான காரணமின்றி இது தொடர்ந்து நடந்தால், இது உண்மையில் ஒரு பிரச்சினைதான். அந்த உறவை தொடரலாமா இல்லையான என நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். பொதுவெளியில் உங்களை வெளிக்காட்ட மறுப்பவர்கள் உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட உறவு காணப்பட்டாலும், தொடர்ந்தும் அவரையே நேசிக்கப் போகின்றேன் என நீங்கள் நினைத்தால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

 

எம்மைப் பற்றி உணர வேண்டும்

நீங்கள் ஒரு மனிதராக எப்படி இருக்கிறீர்கள், உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது, நீங்கள் எவ்வாறு தனித்துவமாக இருக்க முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பின்னர் தன்னம்பிக்கை உருவாகும். அந்த தன்னம்பிக்கை நல்ல பாதுகாப்பு உணர்வோடு ஏற்படும். அந்த நேரத்தில், தன் காதலன் யாரோ ஒருவரால் பறிக்கப்படுவார் என்று பயப்படவேண்டிய தேவையில்லை. உண்மையாகவே தன்னை தன் காதலன் நேசிக்கின்றான் என நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களை கைவிட மாட்டார் என்ற தன்னம்பிக்கையும் ஏற்படும்.

 

காதலனின் நிலைப்பாட்டை அறியுங்கள்

இதுவும் மிக முக்கியமான ஒன்று. ஒரு ஆண் பிரபலமாக இருப்பதால் பெண்கள் அவர்களை அதிகளவில் விரும்புகின்றனர். உதாரணமாக, அவர் ஒரு நடிகர் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், அவர் பெறும் பிரபலத்தை நிர்வகிக்க வேண்டும். அதாவது, நீங்கள் இருவரும் எங்காவது சாப்பிடச் சென்றபோது, ​​ஒரு பெண் ஓடிவந்து அவரிடம் ஆட்டோகிராப் கேட்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு அந்த நேரத்திலும் அவரது இரசிகர்களை அவமதிக்க முடியாதே, அத்தகைய சந்தர்ப்பங்களும் உண்டு. அந்த சூழ்நிலையை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

பொறாமையை கைவிட வேண்டும்

இங்கேதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குள் பொறாமை வளர்கிறதா என்பதை அவதானமாக கவனித்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் காதலன் பார்ப்பதற்கு அழகாக கவர்ச்சியாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். இங்கே ஒரு நல்ல அழகான பெண்ணொருவரும் அவருடன் வேலை செய்வதற்கு அமர்த்தப்படுகிறார். இந்த இடத்தில் உங்களுக்கு பொறாமை வந்து இவர் என் காதலன் என்று குறிப்பிட முயற்சிப்பீர்கள். ஆனால் இது சில சந்தர்ப்பங்களில் உங்கள் காதலனுக்கு அலுப்பை தரவும், சில நேரங்களில் அவரது வேலைக்கு இடையூறாகவும் இருக்கும். அதனால்தான் பொறாமையை நாம் கைவிட வேண்டும்.

 

தனது காதல் வரம்பைக் குறிக்க வேண்டும்

எதற்கும் வரம்பு உள்ளது. உதாரணமாக, ஒரு பெண் வந்து பேசினால் பரவாயில்லை. ஒரு பெண் தன் காதலனுடன் வாட்ஸ்அப் மெசேஜ் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் ‘இந்த பையன் தன் காதலன்’ என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டு திரிகிறாள் அல்லது உங்கள் காதலனுடன் டேட்டிங் செய்வதற்கு அவரை கட்டாயப்படுத்த முயற்சிக்கிறாள் என்றால், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். ஆனால் ஆண்களுடன் கடுமையாக பேசத் தெரியாத ஒருவராக இருப்பின் அந்த நேரத்தில் எப்படியாவது பெண் தனது காதலின் வரம்பை சுட்டிக்காட்ட வேண்டும்.

 

அவசியமான நேரத்தில் இவர் என் காதலன் என குறிப்பிடுங்கள்

முக்கியமாக நீங்கள் இந்த நபரின் காதலி என்பதைக் காட்டுவதன் மூலம் அந்த வரம்பை நீங்கள் குறிக்க வேண்டும். சில நேரங்களில் உங்கள் காதலனிடம் வழியே வந்து தோளில் ஏறுவது போல் செயற்படும் பெண்ணுடன் நீங்கள் அழகாக பேச வேண்டும். மற்றும் நிலைமையை விளக்க வேண்டும். ஆனால் அவருடன் பேசுவதாக சென்று கோபமாக செயற்படுவது மோசமானது. ஏனெனில், அது தன்னைத்தானே சுற்றி உங்களிடமே மீண்டும் திரும்பி வரக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இது ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான நாகரிகமான வழியும் அல்ல. ஆகவே அன்பாக நாகரீகமாக சுட்டிக்காட்டுங்கள்.

 

கடுமையான முடிவுகளை எடுக்கலாம்

இது உண்மையில் இறுதியாக முடிவுக்கு வர வேண்டிய ஒன்று. அதாவது, தவிர்க்க முடியாமல், இந்த ஆணுக்கு ஒரு காதலி இருப்பதை நன்கு அறிந்த பிறகும் யாராவது வந்து, அவரை கட்டாயப்படுத்த முயன்றால், அது ஒரு அன்பையும் உணர்ச்சியையும் தாண்டி, உண்மையில் ஒரு ஆவேசமாக, மனப் பிரச்சினையாக மாறும். அத்தகைய நேரத்தில் சட்ட உதவியை நாட முடியும்.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள். அதுவே இறுதி முடிவு. ஆனால் இதுபோன்ற முடிவுகளுக்கு பெரிதும் செல்ல வேண்டிய அவசியமில்லை.