கொழும்பைச் சுற்றியுள்ள சாப்பாட்டு வண்டிகளில் சாப்பிடுவோமா?

 

சாப்பாட்டு வண்டிகள் பற்றி தெரியாத இலங்கையராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு உணவை பற்றிய அறிவு பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஐஸ்கிரீம் வான்கள் முதல் மகி நூடில்ஸ் வான்கள் வரை சாப்பாட்டு வண்டிகளை பார்த்திருப்போம். குறிப்பாக சில விசேட நிகழ்வுகளில், புத்தக கண்காட்சிகளில், ஒரு சில நிகழ்வுகளில் இதுபோன்ற பல்வேறு வகையான சாப்பாட்டு வண்டிகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்படும். ஆனால் நாங்கள் ஐஸ்கிரீம் லொறிகள், மகி நூடில்ஸ் டிரக்குகள், கொத்து விற்கும் வண்டிகள் போன்ற எந்த வீதியிலும் காணக்கூடிய நமக்கு நன்கு பழக்கப்பட்ட வண்டிகள் பற்றி கூறவரவில்லை. சில வித்தியாசமான உணவு வண்டிகளை பற்றி பேசவுள்ளோம். கொழும்புக்கு வந்தால் ஒருதடவை இவற்றையும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்.

 

Thai Heritage food truck

ஹேவ்லொக் டவுனில் உள்ள போ ட்ரீ சந்தியில் மயூரபதி கோயிலுக்கு அருகே இருக்கும் தாய் ஹெரிடேஜ் ஃபுட் டிரக் நமது பட்டியலில் முதலிடத்தில் வருகிறது. இந்த பெயர் எங்கிருந்து வந்தது? வெளிப்படையாக இது ஒரு ஹோட்டலின் ஒரு உணவு டிரக். இருப்பினும், அத்தகைய ஸ்ட்ரீட் ஃபுட் டிரக்கிலிருந்து மலிவான உணவு மற்றும் பானங்களை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது என்றாலும், கொழும்பில் தாய் ஃபுட்ஸ் விற்கப்படும் விலையை கருத்தில் கொண்டுபார்த்தால் இங்குள்ள உணவு பொதுவாக நியாயமான விலை கொண்டதாகும். இந்த இடத்தில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த டிஷ்களில் கிறீன்கறி பீஃப் கொம்போ, பசில் லீஃப் கட்ஃல்பிஷ் கொம்போ மற்றும் பட் தாய் ஆகியவை மிகவும் பிரபலமாகும். உங்களுக்கு விரும்பினால் ஊபர் ஈட்ஸிலிருந்தும் ஓர்டர் செய்து சாப்பிடலாம்.

தொலைபேசி எண்: 077 700 3688

 

Kitchen3576 Food Truck

இதன் பெயரைச் சொல்லும்போது, ​​இது ஒரு ஆடம்பரமான உணவுகளை விற்கும் ஃபுட் டிரக் என்று நினைக்கிறீர்களா? ஸ்ட்ரீட் ஃபுட் என்றாலும் தரமிக்க சாப்பாடு, சுவையாகவும் இருக்கும். ஆனால் இவற்றை பார்த்து விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணிவிடத் தேவையில்லை. சாதாரண விலைக்கு கிடைக்கும். மெரின் டிரைவில் பம்பலப்பிட்டியைக் கடந்து செல்லும்போது இந்த ஃபுட் டிரக்கை காண முடியும். விசேடமாக பர்கர், சப்மெரின் மற்றும் ஷவர்மா போன்றவை இங்கு பெரிதும் விற்பனையாகின்றன. அரேபியன் ஷவர்மா சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவை அலாதியானது.

தொலைபேசி எண்: 011 2 425794

 

Crepe Runner

இதுவும் மரீன் டிரைவில் இருக்கும் ஒரு ஃபுட் டிரக்தான். இங்குள்ள உணவுகளில் எது மிகவும் சுவையானது அல்லது மிகவும் அதிகம் விற்பனையாகின்றது என்பதை சொல்வது சற்று கடினம். க்ரீப் ரன்னர்ஸிடம் இருக்கும் உணவுகளில் நுட்டெல்லா & பனானா, நுடெல்லா & மார்ஷ்மெல்லோஸ், நுட்டெல்லா & பீனட் பட்டர், நுட்டெல்லா மற்றும் ஓரியோ போன்ற பல சுவையான கிரேப்ஸ் ஐ இவர்கள் விற்கிறார்கள். இங்கிருந்து நுட்டெல்லா & கிட்கேட் & ஸ்ட்ரோபெரி போன்ற ஒரு சில காம்போக்கள் கூட உள்ளன. அவை சீரியஸ் சுவீட் டீத் கொண்டவர்களுக்கு மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். அதிகம் சுவீட் பிடிக்காது என்றால், நீங்கள் ஒரு சுவையான கார உணவை சாப்பிடவும் முடியும். பீஃப் ஸ்டேக் போல எதுவதும் சாப்பிடவும் முடியும். அப்படி இல்லாவிட்டால் ஒரு மோஹிதொ அல்லது மில்க் ஷேக்கையும் வாங்கி சாப்பிடமுடியும்.

தொலைபேசி எண்: 075 659 7057

 

 

Shawarmaz

ஃபுட் டிரக் எனும்போது ஏதாவது ஒரு சிறப்பு நிபுணர்களைச் சந்திக்க விரும்புகிறோம். எனவே ஷவர்மாஸ் மரீன் டிரைவின் அதே ஸ்ட்ரீட் ஃபுட் அனுபவங்களை தரக்கூடிய மற்றொரு ஃபுட் டிரக் தான். பெயர் குறிப்பிடுவது போல, இங்கு ஷவர்மா சிறப்பான உணவாகும். இதற்கு மேலதிகமாக, சப்மரீன், பர்கர், மினி சப்,  பிரஞ்சு ஃப்ரைஸ் போன்ற ஸ்டார்ட்டரையும் வாங்கலாம். ஆனால் இந்த ஷவர்மாக்களில், துபாய் ஸ்டைல் பீஃப் ஷவர்மாவும் கிடைக்கும். அரபிக் ஸ்டைல் ஷவர்மா மற்றும் துபாய் சிக்கன் ஷவர்மா மற்றும் பீஃப் ஷவர்மா ஆகிய இரண்டும் உள்ளது. இவர்களிடம் சிக்கன் மற்றும் பீஃப் இரண்டையும் கலந்த ஷவர்மா மற்றும் ஃபலாஃபெலுடன் வரும் ஒரு சைவ ஷவர்மாவையும் வைத்திருக்கிறார்கள். பின்னர் ஹொட் அண்ட் ஸ்பைசி கொச்சி ஷவர்மா, தந்தூரி ஷவர்மா, மெக்சிகன் ஷவர்மா போன்றவைகளும் உண்டு.

தொலைபேசி எண்: 077 334 7338

 

Choco Love

இந்த சோகோ லவ் என்ற ஃபுட் டிரக் முன்பு சோகோ லவ் இருந்த இடத்திற்கு மிக அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது நாம் இந்த நாட்களில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் இருக்கின்றோம். சாலையோரத்தில் செல்லும் போது தாகத்தை தீர்க்கவும் சுவையாக ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகவும் நினைக்கும் போது குடிக்க விரும்பினால், நாம் இங்கே இறங்கி மில்க் ஷேக் குடிக்கவும் முடியும். இந்த நபர்களின் கூற்றுப்படி, பிராண்டட் சொக்கலேட் மற்றும் ஐஸ்கிரீம்களை சேர்ப்பதன் மூலம் சோகோ லவ் மில்க்ஷேக் தயாரிக்கப்படுகிறது.

தொலைபேசி எண்: 0112 301 140

 

 

CORN CART

சோளப்பொறியை விரும்பாதவர் யார்? ஆனால் கடந்த காலத்தைப் போல, சாலை ஓரங்களில் வைத்து விற்கப்பட்ட வேகவைத்த மக்காச்சோளத்தை விற்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கொழும்பில் நல்ல சோளப்பொறி விற்கும் இடங்கள் நிறைய இருந்தாலும், அதிலும் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை தேடி சென்ற போது தான் எமக்கு இந்த கோர்ன்கார்ட் அகப்பட்டார். இந்த கோர்ன் கார்ட் தெஹிவளையில் உள்ளது. இங்கு வேகவைத்த சோளப் பொறிகள் வெவ்வேறு சுவைகளில் விற்கப்படுகின்றன.

தொலைபேசி எண்: 076 317 3838