விசித்திரமான சாப்பாட்டு பழக்கம் கொண்ட இலங்கையர்கள்

 

இலங்கையர்களின் பிரதான உணவாக சோறு காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் சோறு சாப்பிடாவிட்டால் நம்மில் பலருக்கும் தூக்கமே போகாது. இலங்கையில் பெரும்பாலாக எல்லோரும் சோறு சாப்பிட்டாலும், ஒரு சிலரின் சுவை மற்றும் விருப்பு வெறுப்புகள் முற்றிலும் வேறுபட்டவை. இதுபோன்ற சில சில வித்தியாசமான உணவுப் பழக்கங்களைக் கொண்டவர்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

பெரிய பெரிய கொட்டை சோறு

இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு சாதாரண சம்பா போன்ற அரிசிகளில் சமைத்த சோறு போதாது. ஏனென்றால் அவர்களது வாயிற்கு அவை ஆணை வயிற்றிக்கு பூனை விருந்து போல சிறிதாகவே தெரியும். அவர்கள் அதிகம் விரும்பும் நாட்டரிசியை போல பெரிய பெரிய கொழுத்த அரிசிகளை வேகவைத்து செய்த சோற்றையே விரும்புகிறார்கள். பெரிய பெரிய அரிசியை சாப்பிட விரும்பாதவர்கள் இதன் மறுபக்கத்தில் உள்ளனர். அவர்கள் அந்த வகையான அரிசியை சாப்பிட்டால், அவர்களின் வயிறு கொங்கிரீட் சாப்பிட்டது போல வீங்கிக்கிடப்பதைப் போன்று உணர்வார்கள். சிலருக்கு அதை சாப்பிட்டால் மலம்கழிக்கவும் கஷ்டப்படுவார்கள்.

 

பொரியல்

நாம் அனைவரும் பொதுவாக சோறு அல்லது காய்கறிகளுடன் சாப்பிடும் போது ஏதாவது பொரித்த உணவை கொறித்து கொறித்து சாப்பிட விரும்புகிறோம். ஆனால் பொரியல் இல்லாமல் சோறு சாப்பிட சிலர் மிகவும் கஷ்டப்படுவார்கள். இவர்களுக்கு ஒரு துண்டு இறைச்சி, ஒரு துண்டு மீன், ஒரு சொசேஜஸ் அல்லது குறைந்தது ஒரு பப்படமாவது பொரித்து வைத்திருக்க வேண்டும். வேறு காய்கறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பொரியல் இவர்களுக்கு மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சாப்பாட்டையே ஒதுக்கிவிடுவார்கள்.

 

பெரிய பெரிய காய்கறி

நாம் பெரிய மீன் துண்டுகளை, பெரிய துண்டு இறைச்சியை சாப்பிட விரும்புகிறோம். நாம் சொல்ல வருவது அதுவல்ல. சிலர் பெரிய மீன்துண்டுகளை விரும்புவது போல பெரிய துண்டு காய்கறிகளை விரும்பும் வர்க்கத்தினரும் இருக்கின்றனர். இவர்கள் முதலில் கூறிய பெரிய அரிசி சாப்பிடும் வர்க்கத்தைப் போன்றவர்கள். இவர்கள் சாப்பிடும் பீட்ரூட், கரட் மற்றும் கத்தரிக்காய் போன்ற காய்கறிகளைக்கூட பெரிது பெரிதாக நறுக்கி இருந்தாலே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். ஒவ்வொரு காய்கறியும் பெரியளவில் இருக்க வேண்டுமென விரும்புவார்கள்.

 

குழம்பு குட்டை !

இவை இரண்டு பிரிவுகளாக இருந்தாலும், அவை அனைத்தையும் ஒரே வகையில் சேர்க்கலாம். கிரேவிக்கு விருப்பமற்றவர்கள் ஒரு புறமும் சோற்றை சூப் வடிவில் செய்து சாப்பிடுபவர்கள் மறு புறமும் உள்ளனர். கிரேவியை விரும்பாதவர்கள் இறைச்சி, மீன் அல்லது உலர்ந்த காய்கறிகளுடன் சோற்றை சாப்பிட விரும்புகிறார்கள். முன்பெல்லாம் தொண்டைக்குள் மீன்முள்ளொன்று சிக்கிக்கொண்டால் ஒரு கவளம் வெறும் சோற்றை அப்படியே மெல்லாமல் விழுங்குவதை போலதான் இவர்கள் சோற்றை குழம்புடன் சாப்பிட விரும்புகிறார்கள். அதன் மறுபக்கம் சோற்றுடன் குழம்பை ஊற்றி சாப்பிடச் சொன்னால், குழம்பை குட்டையாக்கி அதில் கொஞ்சம் சோற்றை குழைத்து கஞ்சி போல சாப்பிடப் பார்க்கிறார்கள். இப்படியும் ஒரு சிலர் எமது நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

 

பருப்பு பிரியர்

இங்கே உள்ள இந்த நபர்தான் ட்ரூலி ஸ்ரீலங்கன். சோறுடன் எதை சாப்பிடுவது என்று இவர்களுக்கு பெரிதாக குழப்பம் இருக்காது. அதேபோல முக்கியமான அல்லது பிரத்தியேகமான தேர்வுகளும் கிடையாது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சோற்றை கொண்டு என்ன செய்தாலும், அவர்கள் நிச்சயமாக பருப்புக்கறியை எதிர்பார்ப்பார்கள். இவருக்கு பிரியாணி சாப்பிட்டாலும் பருப்புக்கறி வேண்டும்.  பெரும்பாலும் இந்த மக்கள் சோறு, பருப்பு கறி, கோழி போன்றவற்றையே சாப்பிட விரும்புகிறார்கள். வருடத்தில் 365 நாட்களும் இவர்களுக்கு பருப்பு சமைத்து வைத்தாலும் சாப்பிடும் திறன் படைத்தவர்கள். இவர்களை பருப்புக் கறியர்கள் என்றாலும் பரவாயில்லை அல்லது பருப்பு வெறியர்கள் என்றாலும் பரவாயில்லை.

 

பாதியில் வேலை காட்டும் வெறியன்

இவ்வாறானவர்கள் இரண்டு வழிகளில் ஒரு தட்டு சோற்றை சாப்பிடுவர். முதலில் பொதுவாக சோறு, மீன், காய்கறிகளை சாதாரணமாக எடுத்து சாப்பிடுவார்கள்.  ஆனால் சிறிது அலட்சியத்துடன் தான் முதல் பாதி சோற்றை சாப்பிடுவார். அவரது மீதி பாதி சோற்றில் தான் விடயமே உள்ளது. ஏனென்றால், சோற்றின் கடைசி பாதியை மீதமுள்ள கிரேவி, மீன் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறிய உருண்டைகளை செய்து அவற்றை சாப்பிடும்போது அவர் கடைசி பாதி சோற்றை ரசித்து ருசித்து சாப்பிடுவார்.

 

கடைச்சோறு பிரியன்

இந்த நபருக்கு வீட்டில் எந்த வகையான சாப்பாடு சமைத்து தயார் நிலையில் இருந்தாலும் அவை இவருக்கு வெறுமனே இறங்காது. இவரது நாக்கு கடை சாப்பாட்டையே தேடும். நல்ல சுவையான சாப்பாடு வீட்டில் எவ்வளவுதான் இருந்தாலும் கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிடும் சுகமே தனி என்று அதையே நாடிச்செல்வார். எண்ணெயில் பொரித்த ஃபிஷ் ரோல்ஸ், எக் ரோல்ஸ், வடை, கிரீம் கிரேகர்ஸ், மிக்சர்கள், ரோஸ் பாண், முட்டை ரொட்டி ஆகியவை இவர்களுக்கு மேலதிக உணவாக அமையும்.